Home
News

புதிய கட்டுப்பாடு.. Hotstar பயனர்களே.. உங்க மனச கல் ஆக்கிக்கோங்க.. இல்லனா சப்ஸ்க்ரைப் பண்ணாதீங்க!

இந்தியாவில் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்(disney + Hotstar)-ஐ அதிக மக்கள் பயன்த்துகின்றர். குறிப்பாக கிரிக்கெட், வெப் தொடர்கள் மற்றும் சமீபத்திய திரைப்படங்கள் போன்றவற்றை காரணமாக இந்த ஓடிடி தளம் எப்போதும் டிரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடிடி தளங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு போட்டிப் போட்டுக்கொண்டு சலுகைகளை வழங்குகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு, அதன் சப்ஸ்கிரைபர்களுக்கு நல்லது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், ஆஃபர்களை பொறுத்து எந்த ஓடிடி தளத்துக்கு வேண்டுமானாலும் அவ்வப்போது மாறிக்கொள்ளலாம். இதனாலேயே லட்சக்கணக்கான மக்கள் வருடாந்திர சப்ஸ்கிரிப்சனை தேர்ந்தெடுக்காமல். மாதாந்திர அல்லது மூன்று மாத பிளான்களிலேயே வீடியோக்களை பார்த்து வருகின்றனர்.

புதிய கட்டுப்பாடு.. Hotstar பயனர்களே.. உங்க மனச கல் ஆக்கிக்கோங்க

குறிப்பாக ஜியோ சினிமா, நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட தளங்களுக்குப் போட்டியாக பல்வேறு அசத்தலான திட்டங்கள் மற்றும் பல்வேறு புதிய அம்சங்களை அவ்வப்போது அறிவித்து வந்தது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம். இந்நிலையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பயனர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அனுபவித்த பொருளாதார இழப்பு காரணமாகவே தற்போது பாஸ்போர்ட் ஷேரிங் செய்வதற்கான ஆப்ஷனை துண்டித்தது. இந்த நிலையில் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) நிறுவனத்தின் அறிவிப்புக்குப் பிறகு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் பயனர்களுக்கு பாஸ்வேர்ட் பகிர்வு குறித்து முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. தற்போது வெளியான தகவவலின்படி, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் அதன் பிரீமியம் பயனர்களிடையே கடவுச்சொல் பகிர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது பிரீமியம் பயனர்கள் வெறும் நான்கு சாதனங்களிலிருந்து மட்டுமே உள்நுழைய அனுமதிக்கும் புதிய கொள்கையைச் செயல்படுத்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. டிஸ்னியின் குறிப்பிடத்தக்கச் சந்தையில், கடவுச்சொல் பகிர்வின் சிக்கலைத் தீர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, சமீபத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்-இன் போட்டியாளரான நெட்ஃபிளிக்ஸ் ஏற்கனவே 100-க்கு மேற்ப்பட்ட நாடுகளில் இந்த கடவுச்சொல் பகிர்வு கொள்கையை அமல்படுத்தியது. தற்போது இந்தியாவில் பிரீமியம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கணக்கு ஆனது 10 சாதனங்களில் உள்நுழைய அனுமதிக்கிறது. ஆனால் இனிமேல் பிரீமியம் கணக்குகளுக்கு அதிகபட்சம் நான்கு சாதனங்களில் உள்நுழைய அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்-இன் இந்த புதிய பாஸ்வேர்டு கொள்கை ஆனது இந்த ஆண்டு இறுதியில் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ஹாட்ஸ்டார் தளம் ஆனது 50 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டு சந்தையில் முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஜியோ சினிமா, நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் விதமாக பல்வேறு முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம்.

மேலும் எதிர்வரும் ஆசியக் கோப்பை மற்றும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகளை ஸ்ட்ரீம் செய்ய டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. பின்பு அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் 2023 சீசன் முழுவதையும் இலவசமாக ஸ்ட்ரீம் செய்தது ஜியோ சினிமா தளம். இதன் மூலம் ஜியோ சினிமா தளத்தின் பயனர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்தது என்றே கூறலாம்.

புதிய கட்டுப்பாடு.. Hotstar பயனர்களே.. உங்க மனச கல் ஆக்கிக்கோங்க

இந்நிலையில் ஜியோ சினிமா தளத்திற்கு போட்டியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பல கிரிக்கெட் தொடர்களை ஸ்ட்ரீமிங் செய்யும் எனத் தெரிகிறது. குறிப்பாக ஜியோ சினிமா தளம் தற்போது பயனாளர்களிடத்தில் சந்தா வசூலிக்க தொடங்கியுள்ளது. இருந்தபோதிலும் கம்மி விலையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா கிடைப்பதால் இதை தான் மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Disney Hotstar plans to limit premium account sharing: Report : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X