அம்பானினா சும்மாவா.? JioCinema செய்த வேலையால் தத்தளிக்கும் Disney+ Hotstar
ஜியோ (Jio) நிறுவனத்தின் அதிரடி முடிவால் ஓடிடியில் (OTT) புகழ்பெற்ற டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) நிறுவனம் மிகப்பெறும் பின்னடைவை சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் சப்ஸ்கிரைபர்களை பறிகொடுத்து வருகிறது. அப்படி கடந்த 3 மாதங்களில் பறிகொடுத்த சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கையை பார்த்தால் தலை சுற்றிவிடும் போலிருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
புதிதாக வரும் படங்களை திரையரங்குகளில் பார்த்த காலம்போய், இப்போது ஓடிடியில் வீட்டில் இருந்தே பார்க்கும் காலம் வந்துவிட்டது. மக்களும் பாப்கார்ன், டிக்கெட், பார்க்கிங் போன்ற செலவுகள் மிச்சம் என்று ஓடிடிக்கு மெல்ல மெல்ல மாறிவருகின்றனர். இதனால் ஓடிடி நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. சொல்லப்போனால், கரோனா ஊரடங்குக்கு முன்பு கூட ஓடிடி நிறுவனங்கள் இருந்தன.

ஆனால், அவ்வளவாக மக்களால் பயன்படுத்தப்படவில்லை. கரோனா ஊரடங்கில் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், திடீரென ஓடிடி என்னும் புதிய சாம்ராஜ்ஜியமே உருவாகிவிட்டது. சர்வதேச ஓடிடி நிறுவனங்களான நெட்பிளிக்ஸ் (Netflix), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் (Amazon Prime) முதல் உள்நாட்டின் ஜியோசினிமா (JioCinema), ஜி5 (ZEE5), வூட் (Voot) வரையில் லாபம் பார்க்க தொடங்கிவிட்டன.
இப்படி பல்வேறு ஓடிடி நிறுவனங்கள் இருப்பதால், எது மலிவான விலையில் அதிக சலுகைகளை வழங்குகிறதோ அந்த நிறுவனத்தையே மக்கள் தேர்வு செய்கின்றனர். அதிகமான மாதாந்திர சந்தா இருந்தாலும், சில மாதங்கள் வரையில் மட்டும் பணம் கட்டி அதை பயன்படுத்திவிட்டு வேறு ஓடிடி தளங்களுக்கு செல்வோர்களும் இருக்கிறார்கள். இப்படியிருப்பவர்களை தன்பக்கம் இழுக்கும் வேலையில் ஜியோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அம்பானி எடுக்கும் முடிவுகளை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. டெலிகாமில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வந்த அம்பானி, ஐபிஎல் போட்டிகளுக்கு பின்பு, ஓடிடியிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், ஐபிஎல் போட்டிகளை குறைந்தது ரூ.149 செலுத்தி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மக்கள் பார்த்து வந்த நிலையில், அதை அப்படியே இலவசமாக ஜியோசினிமாவில் ஒளிபரப்பு செய்தார் அம்பானி.
இதனால், ஐபிஎல் போட்டிகளின்போது மட்டுமே சப்ஸ்கிரைப் செய்யும் மக்கள் முதல் ஏற்கனவே ஹாட்ஸ்டாரில் இருந்த சப்ஸ்கிரைபர்கள் வரையில் லட்சக்கணக்கானோர் ஜியோவுக்கு மாறித்தொடங்கினர். அப்போது, ஓடிடியில் பலத்த அடிவாங்கிய டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கு, அண்மையில் மேலும் ஒரு பலத்த அடி விழுந்தது.
அதாவது, ஜியோசினிமாவில் ஹாலிவுட் திரைப்படங்களை கொண்டுவரும் நோக்குடன் முகேஷ் அம்பானி, பிரபல வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி மற்றும் எச்பிஓ (Warner Bros Discovery & HBO) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார். இந்த ஒப்பந்தம் மூலம் கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஹவுஸ் ஆஃப் தி டிராகன்கள், தி லாஸ்ட் ஆஃப் அஸ் உள்ளிட்ட 144 எச்பிஓ ஒரிஜினல்ஸ் சீரிஸ்களையும், வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படங்களையும் ஜியோசினிமாவில் பார்க்க முடியும்.
இவை அனைத்தும் ஏற்கனவே ஹாட்ஸ்டாரில் இருந்த நிலையில், இப்போது ஜியோவுக்கும் வந்துள்ளது. ஆனால், ஜியோவில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டதால், ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரைபர்கள் அங்கிருந்து ஜியோவுக்கு மாறத்தொடங்கிவிட்டனர். இப்படி கடந்த 3 மாதங்களில் மட்டும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்களை பறிகொடுத்துள்ளது.
இவர்கள் அனைவரும் ஜியோசினிமாவில் இருக்க வாய்ப்புள்ளது. மேலும், ஐபிஎல் 2023 போட்டிகள் முடிந்த பின்பு ஜியோசினிமாவில் மாதாந்திர சந்தா கட்டணம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. ஜியோ நிறுவனம், டெய்லி (Daily), கோல்டு (Gold) மற்றும் பிளாட்டினம் (Platinum) ஆகிய 3 திட்டங்கள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








