Home
News

ஜியோ போலவே "ப்ரீ ஸ்ட்ரீமிங்" அறிவித்த Disney+ Hotstar! யாருக்கெல்லாம் ப்ரீ?

ஜியோசினிமாவில் (JioCinema) இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) ஓடிடி (OTT) தளத்தை சம்பவம் செய்த முகேஷ் அம்பானிக்கு, இப்போது அவரது பாணியிலேயே ஷாக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஷாக், ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரைபர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

பொதுவாக ஓடிடி தளங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு போட்டிப் போட்டுக்கொண்டு சலுகைகளை வழங்குகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு, அதன் சப்ஸ்கிரைபர்களுக்கு நல்லது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், ஆஃபர்களை பொறுத்து எந்த ஓடிடி தளத்துக்கு வேண்டுமானாலும் அவ்வப்போது மாறிக்கொள்ளலாம். இதனாலேயே லட்சக்கணக்கான மக்கள் வருடாந்திர சப்ஸ்கிரிப்சனை தேர்ந்தெடுக்காமல். மாதாந்திர அல்லது மூன்று மாத பிளான்களிலேயே வீடியோக்களை பார்த்து வருகின்றனர்.

ஜியோ போலவே

அந்த வகையில், ஜியோ நிறுவனம் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்பு செய்து, ஹாட்ஸ்டாரின் லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்களை ஒரு மாதத்தில் தன்பக்கம் சாய்த்தது. இதனால், மிகப்பெரும் வீழ்ச்சியை கண்ட ஹாட்ஸ்டார் மீண்டும் சப்ஸ்கிரைபர்களை அதிகரிக்க படாதபாடுபட்டு வருகிறது. ஆனால், கர்ப்பரேட் மூளை ஆச்சே சும்மா சொல்லிவிட முடியமா? இப்போது, மிகப்பெரும் திட்டம் மூலம் அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின், இலவச ஒளிப்பரப்பு திட்டத்தையே ஹாட்ஸ்டாரும் கையில் எடுத்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 (ICC Cricket World Cup 2023) நடக்க இருக்கிறது. இந்தத் தொடரில் இந்தியா உள்பட மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. 48 லீக் போட்டிகளும், 3 நாக் அவுட் போட்டிகளும் நடைபெற உள்ளன.

இந்த போட்டிகளுக்கு முன்னதாக ஆசிய கோப்பை கிரிக்கெட் (Asia Cup Cricket) தொடர் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகள் அனைத்தையும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் சந்தா செலுத்தாமல், இலவசமாக பார்க்கலாம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகை ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரைபர்களுக்கு (Hotstar Mobile Subscribers) மட்டுமே பொருந்தும். ஐபிஎல் போட்டிகள் முடிந்தவுடன் துவண்டு போயிருந்த கிரிக்கெட் ரசிகர்கள், இப்போது மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

சொல்லப்போனால், 2027ஆம் ஆண்டு வரையில் ஐபிஎல் போட்டிகளை ஜியோ நிறுவனமே ஒளிபரப்பு செய்யும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால், எப்படியாவது, சப்ஸ்கிரைபர்களை பெற வேண்டும் என்று அடுத்தடுத்த சலுகைகளை அறிவிக்க ஹாட்ஸ்டார் நிறுவனம் காத்துக் கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் சந்தா கட்டணம் கூட குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் சஜித் சிவானந்தன் கூறுகையில், "இந்தியாவில் வளர்ந்துவரும் ஓடிடி தளங்களில் ஹாட்ஸ்டார் முன்னணியில் உள்ளது. வருகிற ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்கள் மூலமாக அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில், இந்த முடிவை எடுத்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இப்படி ஓடிடி நிறுவனங்களிடையேயான போட்டி சப்ஸ்கிரைபர்களை குஷிப்படுத்தி வருகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Disney+Hotstar Allows Free Stream ICC World Cup 2023 and Asia Cup Its Mobile App Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X