நீண்ட கால பிளான்: இலவசத்தை அள்ளி வீசி தெறிக்கவிட்ட டிஷ் டிவி, டி2எச்.!
டிடிஹெச் துறையிலும் பல்வேறு போட்டிகள் நிலவுவதால் வாடிக்கையாளர்களை தற்காத்துக் கொள்ள பல்வேறு இலவசங்களையும் டிடிஹெச் ஆப்ரேட்டர்கள் வழங்கி வருகின்றன. இந்நிலையில் டிஷ் டிவி மற்றும் டி 2 எச் நிறுவனங்கள் பயனர்களுக்கு தற்போது கூடுதலாக இலவசங்களை வழங்கியுள்ளது. இதுகுறித்து நாம் நாம் காணலாம்.

டிராய் விதி முறை மாற்றம்
தற்போது டிடிஹெச் துறையில் டிராய் பல்வேறு அதிரடியாக மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது. பல்வேறு ஆப்ரேட்டர்களும் புதிய மாற்றங்களை புகுத்தி வருகின்றது. இந்நிலையில் டிஷ் டிவி மற்றும் டி2எச் ஆப்ரேட்டர்களும் மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளனர்.

கேபிள் டிவி பயனர்களுக்குறி
அதிகப்படியான வாடிக்கையாளர்கள் கேபிள் வழியாக (அனலாக் முறையில்) சேவையை பெற்று வருகின்றனர். இதில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் இருப்பதால் அவர்களை குறித்தும் டிடிஹெச் ஆப்ரேட்டர்கள் பல்வேறு சலுகைகயும் அறிவித்து வருகின்றனர். ஆப்ரேட்டரிகளின் கவர்ச்சிகரமான திட்டங்கள் வாடிக்கையாளர்களை நோக்கி நகர்ந்து வருகின்றன.

நீண்ட கால பேக்கேஜ்
இதில் டிஷ் டிவி மற்றும் டி2எச் நிறுவனங்கள் நீண்ட நாள் பேக்கேஜை பெற்றும் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை டிஷ் டிவி மற்றும் டி2எச் ஆப்ரேட்டர்களும் வழங்கி அதிர வைத்துள்ளன. இதனால் வாடிக்கையாளர்களும் குஷியடைந்துள்ளனர்.

டிஷ் டிவியின் சலுகை
10 மாதங்கள் வரையிலான டிஷ் சேவையை பெற்றிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மேலும் இரண்டு மாத சேவைகளை நீட்டித்து அறிவித்துள்ளது. மேலும் 6 மாதங்கள் வரையிலான பேக்கேஜை பெற்றிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு மாதம் சேவையை இலவசமாக நீட்டித்துள்ளது டிஷ் டிவி.

டி2எச் சேவைகள்
டி2எச் நிறுவனமும் இதே போன்ற சலுகையினை வழங்கியுள்ளது. மூன்று மாத பேக்கேஜைப் பெற்றிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 14 நாட்கள் இலவச தொலைக்காட்சி சேவைகளையும், 6 மாத பேக்கேஜிற்கு ஒரு மாத இலவச சேவைகளையும், 10 மாத பேக்கேஜைப் பெற்றிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 2 மாத இலவச சேவைகளையும் வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications