எகிப்து நாட்டில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைகள் கண்டுபிடிப்பு.!

|

எகிப்து நாட்டில் தொடர்ந்து ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நூற்றுக்கும் மேற்பட்ட கல்லறைகள் மற்றும் பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

 110 உடல்கள் அடக்கம்

மேலும் வெளிவந்த தகவலின்படி, நைல் நதிப்படுகையில் இருக்கும் கோயும் எல் குல்கான் (Koum el-Khuulgan) என்ற இடத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அப்போது தான் ஒரு பெரிய பாறையில் வெட்டி அமைக்கப்பட்ட கல்லறைகளைக் கண்டுள்ளனர். மேலும் அதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 110 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

6000 முதல் கிமு 3150-க்கு இடைப்பட்ட காலமாக

அதேபோல் இந்தக் கல்லறையின் காலம் கிமு 6000 முதல் கிமு 3150-க்கு இடைப்பட்ட காலமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கல்லறைகள் ஒவவொன்றும் தனித்தனி வடிவமைப்பில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கதவு திறந்திருக்கும்: களமிறங்கிய OYO- தனிமைப்படுத்துவதில் இனி சிரமம் வேண்டாம்., நாங்க இருக்கோம்!கதவு திறந்திருக்கும்: களமிறங்கிய OYO- தனிமைப்படுத்துவதில் இனி சிரமம் வேண்டாம்., நாங்க இருக்கோம்!

 சில நாட்களுக்கு முன்பு

மேலும் இதேபோல் சில நாட்களுக்கு முன்பு எகிப்தின் 3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் ஒன்று கணடுபிடிக்கப்பட்டது. அந்நாட்டில் பிரமிடுகளே மிக மிக புகழ்பெற்றவை என்பது நம் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக பாறைகளால் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரியகட்டிடங்களில் இப்போது கூட மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுக்கிறது.

இந்த நேரத்துல இப்படியெல்லாம் யோசிக்க தோணுமா? சுந்தர் பிச்சையிடம் உதவி கேட்ட இளைஞர்.! வைரல்.!இந்த நேரத்துல இப்படியெல்லாம் யோசிக்க தோணுமா? சுந்தர் பிச்சையிடம் உதவி கேட்ட இளைஞர்.! வைரல்.!

ற்பரப்புகள் பார்ப்பதற்கு

மேலும் பிரமிடுகளின் மேற்பரப்புகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும், அதுவும் தொலைவிலிருந்து பார்த்தால் கூட பளபளப்புடன் தெரியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக 2008-ம் ஆண்டுப்படி, இதுவரை 135 பிரமிடுகள் எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளன. எகிப்து நாட்டின் தொல்லியில் துறை நிபுணர் ஸாஹி ஹவாஸ் என்பவர் மற்றும் எகிப்பித்தின் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து தங்க நகரம் என்ற இடத்தை ஆய்வு நடத்தி வந்தனர்.

ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வாங்குவதற்கு BoAt ரூ .50 லட்சம் நன்கொடை..ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வாங்குவதற்கு BoAt ரூ .50 லட்சம் நன்கொடை..

ஏதெனின் எழுச்சி என்று

இந்த நகரம், ஏதெனின் எழுச்சி என்றும், இதனை மூன்றாம் அமென்ஹோடெப் மற்றும் மன்னர் துதன்கமுன் ஆகியோர் ஆண்டுள்ளனர் எனத் தகவல் வெளிவந்துள்ளது. இந்த நகரத்தின் அமைப்பு மற்றும் கிடைத்திருக்கும் பொருட்களை வைத்து பார்க்கும் போது மிகவும் நாகரிகமாக வாழ்ந்த சமூகமாக பார்க்கப்படுகிறது. இது அனைவரையம் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கிறது. எகிப்து
வரலாற்றிலேயே மிகவும் முக்கிய கண்டுபிடிப்பாக கருதப்படும் தங்க நகரம் மிக முக்கியமானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இடத்தில் மிகவும் ஆச்சரியமான பொருட்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Discovery of 5,000 year old tombs in Egypt: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X