எப்போனு சொல்லுங்கப்பா- ரியல்மி சாதனத்துக்கு அதீத தள்ளுபடி: பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை 2021!

|

பண்டிகை காலத்தில் ரியல்மி இந்தியா தனது தயாரிப்புகளை விரிவுப்படுத்த தயாராகி வருகிறது. முன்னதாகவே இ-காமர்ஸ் விற்பனை தளமான பிளிப்கார்ட் வரவிருக்கும் பிக் பில்லியன் தின விற்பனை 2021-ஐ டீஸ் செய்யப்பட்டுள்ளது. விற்பனையின் போது பல்வேறு பிராண்டுகள் தங்களது சாதனங்களுக்கு முக்கிய ஒப்பந்தங்களை வழங்க இருக்கிறது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை 2021-ல் ரியல்மி சாதனங்களுக்கு சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட உள்ளது.

பிளிப்கார்ட் விற்பனை: ரியல்மி அறிமுகம்

பிளிப்கார்ட் விற்பனை: ரியல்மி அறிமுகம்

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை 2021-ன் போது பல பிராண்டுகளுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. ரியல்மி சில ஸ்மார்ட்போன்கள் மற்றும் புதிய சாதனங்களை சந்தை பிரிவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

ரியல்மி டிவி ஸ்டிக் 4கே

ரியல்மி டிவி ஸ்டிக் 4கே

ரியல்மி டிவி ஸ்டிக் 4கே கூகுள் டிவி உடனாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் வரவிருக்கும் பிளிப்கார்ட் விற்பனையில் இது தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகம் செய்ய இருக்கும் ரியல்மி டிவி ஸ்டிக் ஆனது அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் 4கே மற்றும் சியோமி எம்ஐ டிவி ஸ்டிக்கிற்கு போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.

புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்

புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்

அதேபோல் ரியல்மி இந்தியாவின் பிளிப்கார்ட் விற்பனையின் போது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களான ரியல்மி 8ஐ மற்றும் ரியல்மி 8 எஸ் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி 8 சீரிஸ் சாதனங்களில் இடம்பெறும் இரண்டு சாதனங்களும் சரியான நேரத்தில் பயனர்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. காரணம் ரியல்மி 9 சீரிஸ் சாதனம் சிப் தயாரிப்பு தாமதத்தால் 2022-ல் தொடங்கப்படும் என கூறப்படுகிறகது. அதேபோல் ரியல்மி நார்சோ 50 தொடர் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 24 அன்று திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை

ரியல்மியின் பல்வேறு புது சாதனங்கள் பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையின் போது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விற்பனைக்கு கிடைக்கும் புது சாதனங்களும் தள்ளுபடியோடு வரும் என கூறப்படுகிறது.

விரைவில் தொடங்கப்படும் பிளிப்கார்ட் விற்பனை

விரைவில் தொடங்கப்படும் பிளிப்கார்ட் விற்பனை

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் விற்பனை தொடங்கப்படும் தேதிகளை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. கடந்தாண்டு பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை அக்டோபர் 16 முதல் அக்டோபர் 21 வரை நடைபெற்றது. இருப்பினும் இந்த ஆண்டு தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் தற்போது டீஸர்கள் நேரலையில் இருப்பதால், பிளிப்கார்ட் விற்பனை இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தள்ளுபடி குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும்

தள்ளுபடி குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும்

மேலும் விற்பனை சலுகையாக ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்களை பயன்படுத்தும் போது உடனடி தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. கூடுதல் தள்ளுபடி குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்ட் மூலம் பிளிப்கார்ட் சலுகை தினங்களில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு 5 சதவீத வரம்பற்ற கேஷ்பேக் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதேபோல் பிளிப்கார்ட் வாலட் மற்றும் யூபிஐ கொடுப்பனவுகளை பயன்படுத்தும் போது பேடிஎம் கேஷ்பேக் சலுகையையும் பெறலாம்.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை 2021 மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021 விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற கேஜெட்கள் தள்ளுபடி சலுகைகளோடு இ-காமர்ஸ் தளத்தில் கிடைக்கின்றன. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் விற்பனையில் கேமரா போன்கள் உட்பட பல ஸ்மார்ட்போன்களுக்கு அதீத விலை குறைப்பு அறிவிக்கப்பட இருக்கிறது என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Discounts on Realme Smartphones to be announced on the sale of Flipkart Big Billion Day Sale 2021

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X