ஆதார் எண்ணை வெளியிட்டால் ஆபத்து அதிகரிக்காது: ஆர்எஸ் சர்மா மீண்டும் சர்ச்சை.!
இதைத்தொடர்ந்து அந்த ஆதார் எண்ணை வைத்து அவரது வாட்ஸ் ஆப் எண் உள்ளிட்ட பல்வேறு அந்தரங்க தகவல்களையும் ஹேக்கர்கள் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
ஆதார் அட்டை இந்தியாவில் முக்கிய அடையாளமாக கருத்தப்படுகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை ஆதார் எண் தான் ஆதாரமாக இருக்கிறது. ஆதார் அட்டை பதிவின் போது, கண் விழி, கைரேகை, வங்கி கணக்கு எண், பான் எண், மெயில் ஐடி, செல்போன் எண், ரத்த வகை, பாஸ்போர்ட் எண் உள்ளிட்ட முக்கியமானவை பதிவு செய்யப்படுகிறது.

தற்போது ஆதார் இருந்தால் தான் மனித அடிப்படை வாழ்வுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. அரசின் சலுகைகள் உள்ளிட்ட முக்கியமான விசியங்களுக்கும் ஆதார் எண் தற்போது கட்டாயமாக பயன்படுத்தப்படுகிறது.

டிராய் தலைவர் ஆர்எஸ் சர்மா:
இந்நிலையில், டிராய் தலைவர் ஆர்எஸ் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதார் எண்ணை கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிட்டார். மேலும் இந்த எண்ணை வைத்து யாராவது என்னை ஏதாவது செய்ய முடியுமா என்று சவால் விடுத்தார்.

அந்தரங்க தகவல்கள் வெளியீடு:
இதைத்தொடர்ந்து அந்த ஆதார் எண்ணை வைத்து அவரது வாட்ஸ் ஆப் எண் உள்ளிட்ட பல்வேறு அந்தரங்க தகவல்களையும் ஹேக்கர்கள் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

இதில் முக்கியமானவர்:
பிரெஞ்சு இணைய பாதுகாப்பு ஆய்வாளர் எலியட் அல்டர்சன் தான் முக்கியமாக ஆர்எஸ் சர்மாவின் அந்தரங்க தகவல்களை வெளியிட்டு பெரும் சர்சையை ஏற்படுத்தினார். இதுகுறித்து எதிர்கட்சிகள் பெரிய பிரச்னையை கிளப்பினர்.

வெளியிட வேண்டாம்:
பொது வெளி மற்றும் சமூக இணையதளங்களில் ஆதார் எண்களை வெளியிடக் கூடாது என ஆதார் ஆணையம் எச்சரித்தது. இதுபோன்று வெளியிடுவது ஆதார் ஆணைய சட்டப்படி குற்றம் என்று கூறியது. அதில் பிறர் ஒருவருடைய ரகசியங்களை மற்றவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆகவே இந்த சாவால்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று ஆணையம் கேட்டுக் கொண்டது.

மீண்டும் சர்ச்சையில் ஆர்எஸ் சர்மா:
ஆதார் எண்ணை வெளியிடுவதால், இணையதங்கள் வழியாக ஏற்படும் ஆபத்துக்கள் அதிகரிக்காது என்று ஆர்எஸ்சர்மா தெரிவித்தார். மேலும், என்னைபோலவே மற்றவர்களும் வெளியிடுமாறு கூறவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இவரின் கருத்து தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications