Home
News

கொஞ்ச நாளுக்கு.. Screen Lock-ஐ ஆஃப் செஞ்சி வைங்க.. இல்லனா? Samsung போன் பயனர்களுக்கு புது எச்சரிக்கை!

சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன்களுக்கான ஒன் யுஐ-யின் லேட்டஸ்ட் அப்டேட் ஆனது பழைய மாடல்களுக்கு வந்துசேர 2 மாதங்கள் ஆகிவிட்டது. நினைவூட்டும் வண்ணம் ஒன் யுஐ 6.1 அப்டேட் ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் உடன் வெளிவந்தது.

முதற்கட்டமாக ஒன் யுஐ 6.1 அப்டேட் (One UI 6.1 Update) ஆனது 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பிளாக்ஷிப் போன்கள் மற்றும் டேப்லெட்டுகளை மட்டுமே வந்து சேர்ந்தது. இந்த ஓஎஸ் அப்டேட்டின் இரண்டாம் கட்டமானது சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதன் கீழ் சாம்சங் நிறுவனத்தின் பல்வேறு பழைய ஸ்மார்ட்போன்களுக்கு ஒன் யுஐ 6.1 அப்டேட் கிடைக்க தொடங்கியுள்ளது.

கொஞ்ச நாளுக்கு.. Screen Lock-ஐ ஆஃப் செஞ்சி வைங்க.. இல்லனா?

ஆனால் பழைய ஸ்மார்ட்போன்களில் ஒன் யுஐ 6.1 அப்டேட் ஆனது எதிர்பார்த்தபடி சீராக வேலை செய்யவில்லை. கொரியாவில் உள்ள கேலக்ஸி எஸ்22, கேலக்ஸி எஸ்22 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா உரிமையாளர்கள், குறிப்பிட்ட அப்டேட்டை இன்ஸ்டால் செய்தபின்னர் தங்கள் போன்களை அணுகுவதில் சில சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

அப்டேட் செய்யப்பட்ட சில யூனிட்களை பூட் செய்ய முடியவில்லை மற்றும் பூட் செய்து, லாக் ஸ்க்ரீனுக்கு வந்தால் அவைகளை அன்லாக் செய்ய முடியவில்லை என்கிற புகார்கள் எழுந்தன. இதனால் ஒன் யுஐ 6.0 அப்டேட்டை வெளியிடுவதை இடைநிறுத்த வேண்டிய கட்டாயம் சாம்சங் நிறுவனத்திற்கு ஏற்பட்டது.

ஒரு பெரிய சாஃப்ட்வேர் அப்டேட்டில் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுவது அசாதாரணமாக நடக்கும் ஒரு விஷயம் அல்ல. எனவே ஒன் யுஐ 6.1 அப்டேட்டிற்கு தகுதிபெற்ற சாம்சங் போன்களை கொண்டுள்ள ஒவ்வொரு பயனருமே அதை இன்ஸ்டால் செய்யும் முன், செய்ய வேண்டிய 2 முக்கியமான படிகள் உள்ளன. அதை செய்யும் பட்சத்தில், உங்களுக்கும், உங்கள் போனிற்கும் எந்த சிக்கலும் ஏற்பாடாது.

1. டேட்டா பேக்கப் (Data Backup): எந்தவொரு பெரிய ஓஎஸ் அப்டேட்டிற்கும் முன்பாக டேட்டா பேக்கப்பை உருவாக்குவது நல்லது. உங்களுக்கு அந்த பழக்கமே இல்லை என்றாலும் கூட ஒன் யுஐ 6.1 அப்பேட்டை இன்ஸ்டால் செய்வதற்கு முன் மறக்காமல் / தவறாமல் டேட்டா பேக்கப் எடுக்கவும்.

2. ஸ்க்ரீன் லாக்கை டிசேபிள் செய்யவும் அல்லது ஸ்க்ரீன் லாக்கை பைபாஸ் செய்யவும்: 100 க்கு 99 பேர்.. பாஸ்வேர்ட், பின் நம்பர் அல்லது ஃபிங்கர் பிரிண்ட் மூலம் மொபைலை லாக் செய்யும் பழக்கத்தை கொண்டுள்ளனர் இருப்பினும் ஒன்யுஐ 6.1 அப்டேட்டை இன்ஸ்டால் செய்த பின்னர் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்ய முடியாமல் போகும் சிக்கல் ஏற்படுவதால் ஸ்க்ரீன் லாக்கை டிசேபிள் அல்லது பைபாஸ் செய்வது நல்லது.

அதாவது உங்கள் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு வரும் ஒன்யுஐ 6.1 அப்டேட்டை இன்ஸ்டால் செய்வதற்கு முன்னர் உங்கள் ஸ்மார்ட்போனிற்கான பாஸ்வேர்ட் / பின் நம்பர் / ஃபிங்கர் பிரிண்ட் லாக்கை ஆஃப் செய்துவிட்டு, அதன் பின்னர் ஒன்யுஐ 6.1 அப்டேட்டை இன்ஸ்டால் செய்யவும். இப்படி நன் ஸ்க்ரீன் லாக் (None screen lock) வகையை தேர்ந்தெடுப்பது லாக் ஸ்க்ரீனை முடக்கி, உங்கள் போன் ஹோம் பேஜிற்கு நேராக பூட் செய்யப்படும்.

எந்தெந்த சாம்சங் போன்கள் ஒன் யுஐ 6.1 அப்டேட்டைபெறும் மற்றும் பெறலாம்?
1. கேலக்ஸி எஸ்24 சீரீஸ் (Galaxy S24 series)
2. கேலக்ஸி எஸ்23 சீரீஸ் (Galaxy S23 series)
3. கேலக்ஸி எஸ்22 சீரீஸ் (Galaxy S22 series)
4. கேலக்ஸி எஸ்21 சீரீஸ் (Galaxy S21 series)
5. கேலக்ஸி எஸ்23 எப்இ (Galaxy S23 FE)

6. கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 (Galaxy Z Fold 5)
7. கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 (Galaxy Z Flip 5)
8. கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 4 (Galaxy Z Fold 4)
9. கேலக்ஸி இஸட் ஃபிளிப் 4 (Galaxy Z Flip 4)

10. கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 3 (Galaxy Z Fold 3)
11. கேலக்ஸி இஸட் ஃபிளிப் 3 (Galaxy Z Flip 3)
12. கேலக்ஸி டேப் எஸ்9 சீரீஸ் (Galaxy Tab S9 Series)
13. கேலக்ஸி டேப் எஸ்8 சீரீஸ் (Galaxy Tab S8 Series)

More from GizBot

Best Mobiles in India

English summary
Disable Screen Lock Feature in Your Samsung phone Before Installing Latest One UI 6 1 Update Why
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X