தமிழில் பேசும் டைனோசர், கொசு, கிளி- டுவிட்டரை கைப்பற்றும் ஒன்றிய உயிரனங்கள்: வேறலெவல் டிரெண்ட்!

|

தமிழ் மொழியின் தொன்மை குறித்து அனைவரும் அறிந்ததே. பிரதமர் மோடியில் தொடங்கி அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வரை தமிழ் உச்சரிப்பை மேற்கொண்டவர்கள் பலர். செந்தமிழை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டும் பிற நாட்டவர்கள் ஏராளம். தமிழ் மொழியின் பழமை குறித்து அகழாய்வு ஆராய்ச்சிகள் ஆதாரங்கள் நீட்டி வருகின்றன.

தமிழில் பேசி கலக்கும் டைனோசர், மாடு, கொசு

தமிழில் பேசி கலக்கும் டைனோசர், மாடு, கொசு

இதில் சற்று வித்தியாசமாக தமிழில் பேசி நக்கலடிக்கும் டைனோசர், மாடு, கொசு போன்ற உயிரனங்கள் குறித்து கேள்விப்பட்டுள்ளீர்களா?., ஆம் இது டுவிட்டர் பக்கத்தில் நடந்து வருகிறது. அதுவும் குறிப்பாக டைனோசரஸ் பக்கத்தை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை குறுகிய காலத்தில் அதிகளவு அதிகரித்து வருகிறது.

டுவிட்டரில் டைனோசர், மாடு, கொசு, அனகோண்டா

டுவிட்டரில் டைனோசர், மாடு, கொசு, அனகோண்டா

டுவிட்டரில் டைனோசர், மாடு, கொசு, அனகோண்டாவில் தொடங்கி மண்புழு, கொசு, எறும்பு என பல கணக்குகள் தொடங்கி நெட்டிசன்கள் அட்டகாசப் படுத்தி வருகின்றனர். இதற்கான விதை எங்கிருந்து போடப்பட்டது, கணக்குகள் அதிகரித்து வருவதன் காரணம் குறித்து பார்க்கலாம்.

மத்திய அரசா., ஒன்றிய அரசா

மத்திய அரசா., ஒன்றிய அரசா

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன், அரசை நிர்வகித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசை ஒன்றிய அரசு என்றும் அவர் குறிப்பிட்டு வருகிறார். இதனால், ஒன்றிய அரசா? மத்திய அரசா? என்ற கேள்வி புதிய விவாதத்தை ஏற்படுத்தியது.

விமர்சனங்களும் பதிலும்

விமர்சனங்களும் பதிலும்

மறுபுறம்., தமிழக அரசு மற்றும் திமுகவை இந்து மக்கள் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக கடந்த 4 ஆம் தேதி இந்து மக்கள் கட்சியன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் "இவனுங்க பேசுற பேச்ச பார்த்தா டைனோசர் கூட தமிழ்ல தான் பேசுச்சின்னு சொல்லுவாங்க போல" என பதிவிடப்பட்டுள்ளது.

டைனோசர் பெயரில் டுவிட்டர் கணக்கு

டைனோசர் பெயரில் டுவிட்டர் கணக்கு

இந்த பதிவையடுத்து நெட்டிசன்கள் டைனோசர் பெயரில் டுவிட்டர் கணக்கு தொடங்கி, ஆம் தமிழில் தான் பேசுனேன் என ரீடுவிட் செய்தனர். மேலும் பல டுவிட்களை ரீடுவிட் செய்து டைனோசர் தரப்பில் கருத்துகள் வெளியிடுவது போல் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து டைனோசர் பக்கத்துக்கு டுவிட்டரில் பலத்த வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது.

மண்புழு, எறும்பு, கொசு உட்பட பல உயிரினங்கள்

மண்புழு, எறும்பு, கொசு உட்பட பல உயிரினங்கள்

இதையடுத்து டுவிட்டரில் சிங்கம், மாடு, அனகோண்டா, மண்புழு, எறும்பு, கொசு உட்பட பல உயிரினங்களின் பெயரில் கணக்கு தொடங்கி டுவிட்டரை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றனர். ஒவ்வொரு கணக்குகளில் இருந்தும் பல கருத்துகள் உயிரினங்கள் தரப்பில் இருந்து பதிவிடப்பட்டு வருகிறது. மேலும் இவை அனைத்தையும் ஒன்றிய உயிரினங்கள் என குறிப்பிடப்பட்டு வருகிறது. "ஒன்றிய" வார்த்தை குறித்த விவகாரத்தை முன்னதாகவே அறிந்தோம்.

நகைச்சுவையும், சுவாரஸ்யமும்

நகைச்சுவையும், சுவாரஸ்யமும்

ஒன்றிய உயிரினங்கள் பெயரில் வரும் பதிவுகள் அனைத்தும் நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்து வருகிறது. நகைச்சுவை உணர்வோடு மட்டுமின்றி கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு, முதல்வரின் தனி பிரிவு, நீட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் டுவிட்டரில் #ஒன்றியஉயிரினங்கள் என்ற ஹேஸ்டேக் டிரண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Dinosaur, Mosquito, Lion started Twitter account - Tamil speaking Animals

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X