Home
News

எலும்பும் சதையுமாக இருந்த டைனோசர் கால்- 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கு., விண்கல் தான் காரணமா?

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் என ஒரு உயிரினம் வாழ்ந்ததாகவும், பூமியின் மீது விண்கல் விழுந்த காரணத்தால் அந்த உயிரினங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் உறுதிப்படுத்துகிறது. பூமியில் விண்கல் மோதியதால் பூமி முழுவதுமாக வெப்பநிலை கடுமையாக அதிகரித்து மாபெரும் அழிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வில் தான் மிகப்பெரிய உயிரனமான டைனோசர் அழிந்திருக்கிறது. டைனோசர் வாழ்ந்த சான்றை தெரிவிக்கும் வகையில் அவ்வப்போது ஆராய்ச்சியாளர்கள் பல தடங்களை கண்டுபிடித்து வருகின்றனர்.

தீவிரமாக நடந்து வரும் ஆராய்ச்சி

தீவிரமாக நடந்து வரும் ஆராய்ச்சி

அதன்படி தற்போது அமெரிக்காவின் டகோட்டா பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு ஆராய்ச்சி தீவிரமாக நடைபெற காரணம் இங்கிருக்கும் பாறைகள் விண்கல் மோதியதன் காரணமாக உருவானது என கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த பேரிடரில் சிக்கி உயிரிழந்த படிமங்கள் பாறைக்கு இடையே தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆராய்ச்சியாளர்கள் படிமங்களை கண்டறிய தீவிரமாக முயற்சித்து வருகின்றன.

டைனோசரின் கால் பகுதி ஒன்று கண்டெடுப்பு

டைனோசரின் கால் பகுதி ஒன்று கண்டெடுப்பு

இந்த பகுதியில் நடைபெற்ற ஆய்வில் டைனோசரின் கால் பகுதி ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள டைனோசரின் கால் பகுதியானது சிதைவடையாமல் எலும்பும் சதையுமாக இருக்கிறது. இந்த கால் பகுதியானது பாறைக்கு அடியில் இருந்து கிடைத்திருக்கிறது. இந்த கால் பகுதியின் மூலம் டைனோசரின் வயதை கண்டறியும் முயற்சியில் ஆராய்ச்சியாளர் ஈடுபட்டனர். இதில் இந்த டைனோசரின் வயதானது 66 மில்லியன் வருடங்கள் என கணக்கிடப்பட்டிருக்கிறது.

டைனோசரின் எச்சங்கள் பல்வேறு இடங்களில் கண்டெடுப்பு

டைனோசரின் எச்சங்கள் பல்வேறு இடங்களில் கண்டெடுப்பு

இதற்கு முன்புவரை டைனோசரின் எச்சங்கள் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை அனைத்தும் விண்கல் விழுந்ததாக அறியப்பட்ட காலங்களில் மாறுபட்டே கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும். ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசர் கால் பகுதியானது சரியாக விண்கல் விழுந்தது என கணிக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்த டைனோசர் இனத்தை சார்ந்ததாகும்.

விண்கல் விழுந்ததாக கணிக்கப்பட்ட காலம்

விண்கல் விழுந்ததாக கணிக்கப்பட்ட காலம்

விண்கல் விழுந்ததாக கணிக்கப்பட்ட காலத்தில் இருந்த டைனோசரின் எச்சங்கள் கண்டுபிடிப்பது இதுவே முதன்முறையாகும். மேலும் இந்த பாறையில் இருந்து சிறிய வகை மீன்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பகுதியின் அருகே ஏரியோ, குளமோ, ஆறு என எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விண்கல் விழுந்த தாக்கத்தில் நீர்நிலைகளில் ஏற்பட்ட அதீத பாதிப்பால் இது இங்கே தூக்கி எறியப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது.

தாவரவகையான டைனோசரின் கால்

தாவரவகையான டைனோசரின் கால்

சமீபத்திய கண்டுபிடிப்பானது மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பழங்கால ஆராய்ச்சியாளர் ராபர்ட் டிபால்மாவால் செய்யப்பட்டது. தாவரவகையான டைனோசரின் கால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது விண்கல் தாக்கி திடீரென ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அழிக்கப்பட்டிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இதன் மூலம் சிறுகோள் டைனோசர்களை அழித்த காலத்தை துல்லியமாக கணிக்கிடலாம். இது குறித்து டிபால்மா பிபிசியிடம் தெரிவித்த கருத்துக்கள் குறித்து பார்க்கையில், இது நாம் கற்பனை செய்யக்கூடிய மிகவும் நம்ப முடியாத விஷயம், சிறந்த சூழ்நிலை., இந்த தளத்தில் நாங்கள் கண்டுபிடிக்க விரும்பிய ஒரு விஷயம் ஆகும். அதை நாங்கள் தற்போது பெற்றுள்ளோம் என குறிப்பிட்டார்.

70 சதவீதம் ஒரே இடத்தில் முழுமையாக கண்டெடுப்பு

70 சதவீதம் ஒரே இடத்தில் முழுமையாக கண்டெடுப்பு

தென்மேற்கு சீனாவில் உள்ள பாலியான்டாலஜிஸ்டுகள் (Paleontologists) ஜுராசிக் காலத்திலிருந்த ஒரு புதைபடிமத்தைக் கண்டுபிடித்தனர். இந்த புதைபடிமம் அப்படியே 70 சதவீதம் ஒரே இடத்தில் முழுமையாகக் கிடைத்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த புதைப்படிமம் கிட்டத்தட்ட 8 மீட்டர் நீளம் இருப்பதாக நம்பப்படும் டைனோசருக்கு சொந்தமானது என்று அவர்கள் தெரிவித்தனர். இது 180 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய புதைபடிமம், மே மாத இறுதியில் தெற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லுஃபெங் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புதுமையான கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, டைனோசர் புதை படிவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஊழியர்கள் மீதமுள்ள எலும்புகளுக்குச் சேதம் ஏற்படாமல் தடுக்க அவசர அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

டைனோசர் புதை படிவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்

டைனோசர் புதை படிவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்

இந்த பகுதி மண் அரிப்புக்கு ஆளாகும் என்பதால் இது விரைவாகச் செய்யப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. லுஃபெங் நகரத்தின் டைனோசர் புதை படிவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் வாங் தாவோ கூறுகையில், ''கிட்டத்தட்ட முழுமையான 'லுஃபெங்கோசொரஸ்' (Lufengosaurus) என்ற டைனோசரின் முழுமையான எலும்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

Best Mobiles in India

English summary
Dinosaur leg Found with flesh: Dinosaur species killed by Asteroid
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X