Just In
- 39 min ago
எதிர்பார்த்ததை விட ரூ.3,000 கம்மி விலைக்கு அறிமுகமான தரமான Camera Phone!
- 42 min ago
46 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்வாட்ச்: விலையை சொன்னா நம்புவீங்களா?
- 1 hr ago
ரூ.9,000 கூட இல்ல.. அதை விட கம்மி விலைக்கு Jio-வின் புதிய 5G போன்!
- 3 hrs ago
10.6-இன்ச் டிஸ்பிளேவுடன் சும்மா கில்லி மாதிரி களமிறங்கும் Moto Tab G62: எப்போது அறிமுகம்?
Don't Miss
- Movies
விவாகரத்து பெற்ற கையோடு பாக்கியா செய்த அதிரடி.. அதிர்ச்சியில் எழில்!
- Sports
ஹலோ நான் தோனி.. ஒரு 500 ரூபாய் கிடைக்குமா.. ஆன்லைனில் நடைபெறும் புது மோசடி
- Finance
பிக்சட் டெபாசிட் செய்ய திட்டமா.. இது தான் சரியான நேரம்.. !
- News
தங்கச்சின்னா சும்மா இல்ல.. ஒரு தங்கச்சிய சமாளிக்கறது.. ஊரையே சமாளிக்கிறதுக்கு சமம்!
- Lifestyle
வெஜ் சால்னா
- Automobiles
மாருதி ஆல்டோ கே10 காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கியாச்சு... ரூ. 11 ஆயிரம் கொடுத்தாலே போதும்!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?
இதுவரை வரலாற்றில் நடந்திடாத ஒரு அரிய நிகழ்வு இப்போது இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. உலக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கவனம் இப்போது இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. காரணம், சமீபத்தில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியில் சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்த டைனோசர் இனத்தின் முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கண்டுபிடிக்கப்படாத அரிய கண்டுபிடிப்பு
இது என்ன பிரமாதம், உலக நாடுகள் பல இது போல் பல டைனோசர் முட்டைகளைக் கண்டுபிடித்துள்ளதே, ஏன் ஒரு முழு உருவ டைனோசர் படிமங்கள் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது என்ன பிரமாதம் என்று சிலர் நினைக்கலாம். விஷயம் இருக்கு மக்களே, இது வரை கண்டுபிடிக்கப்படாத வகையில் இந்த டைனோசர் முட்டைக்குள் மற்றொரு முட்டை இருப்பது உலக ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பூமியில் எப்போது டைனோசர் என்ற இனம் அடையாளம் காணப்பட்டது?
ஆம், டைனோசர் முட்டைக்குள் ஒரு முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும், முதல் முறையாக இந்த கண்டுபிடிப்பு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முதல் கண்டுபிடிப்பு என்பதால், கொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கி சென்று, பூமியில் எப்போது டைனோசர் என்ற இனம் மனிதனுக்கு முன் வாழ்ந்தது என்று அடையாளம் காணப்பட்டது என்பதையும் சேர்த்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.

பூமியில் யாரால், எப்போது முதல் டைனோசர் இனம் கண்டுபிடிக்கப்பட்டது?
வரலாற்றைப் புரட்டிப் பார்த்ததில், விஞ்ஞான ரீதியாக விவரிக்கப்பட்ட முதல் டைனோசர் 'மெகலோசரஸ் (Megalosaurus)' என்று நம்பப்படுகிறது. பிரிட்டிஷ் புதை படிவ வேட்டைக்காரர் வில்லியம் பக்லாண்ட் (William Buckland) என்பவர் தான் 1819 ஆம் ஆண்டில் சில டைனோசர் புதைபடிமங்களைக் கண்டுபிடித்திருக்கிறார். இறுதியாக 5 வருட ஆராய்ச்சிக்குப் பிறகு, அதிகாரப்பூர்வமாக இது ஒரு டைனோசர் என்ற ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து, 1824 இல் டைனோசர் பற்றி உலகிற்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

எது? 1677 ஆம் ஆண்டே டைனோசர் கண்டுபிடிக்கப்பட்டதா? அப்போ ஏன் வரலாற்றில் நிலைக்கவில்லை?
அதிகாரப்பூர்வமாக டைனோசர் பற்றிய தகவல் வெளியிடப்பட்டது 1824 ஆம் ஆண்டு என்றாலும் கூட, அதற்கு முன்னரே, வரலாற்றில் பெயரிடப்படாத ஒரு பதிவு பதிவாகியுள்ளது. ஆம், 1677 ஆம் ஆண்டில், ராபர்ட் ப்ளாட் என்பவர் தான் முதல் டைனோசர் எலும்பைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமைக்குரியவர். ஆனால், அவர் செய்த ஒரு சிறிய தவறால் அவரின் பெயர் சரியாக நிலைக்கவில்லை. காரணம், அவர் கண்டுபிடித்த எலும்புகள் இராட்சஸ மனிதர்களுக்குச் சொந்தமானதென்று சொதப்பிவிட்டார்.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டை
சரி, இப்போது நிகழ்காலத்திற்கு வருவோம், தில்லி பல்கலைக்கழகம் மற்றும் தார் மாவட்ட மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று சேர்ந்து, இந்தியாவில் முதல் ஓவும்-இன்-ஓவோ (ovum-in-ovo) என்ற முட்டைக்குள் முட்டை உடைய டைனோசர் முட்டையின் உதாரணத்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த தகவல் Phys.org இன் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிக்கப்பட்ட முட்டையின் சிறப்பு என்ன என்பதைப் பார்க்கலாம்.

இதற்கு முன் இந்தியாவில் டைனோசர் படிமங்கள் கிடைத்துள்ளதா?
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் தான் இந்த கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 2017 ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேசத்தில், டென்வா உருவாக்கத்தின் சிவப்பு மண் கல்லில், கொம்புகள் கொண்ட தாவர வகை டைனோசரான ஷ்ரிங்காசரஸின் புதை படிவ எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போது கண்டுபிடிக்கப்பட்ட முட்டை ஒரு பறவை டைனோசர் இனத்தினுடன் தொடர்புடையதாக இருக்கிறது.

அரிதாக டைனோசர் முட்டைக்குள் ஒரு முட்டை
இப்போது கண்டுபிடிக்கப்பட்ட முட்டை வியக்கத்தக்க வகையில் நல்ல நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முட்டையில் உள்ள முட்டையின் தன்மையை ஆராய்ச்சியாளர்கள் பார்க்க முடிந்தது. ஒரு முட்டை மீண்டும் பறவையின் உடலுக்குள் தள்ளப்பட்டு, இனப்பெருக்க அமைப்பிற்குள் தள்ளப்படும் போது, அது செயல்பாட்டில் இருக்கும் மற்றொரு முட்டையுடன் இணையும் போது இத்தகைய முட்டைக்குள் முட்டை உருவாக வாய்ப்புள்ளது.

ஓவும்-இன்-ஓவோ டைனோசர் முட்டைகள்
இது பறவைகளில் பொதுவானதாகக் காணப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கமளித்துள்ளார். புதை படிவ முட்டையில் இரண்டு முழுமையான ஓடுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒன்று மற்றொன்றின் உள்ளே, ஒரு சிறிய இடைவெளியைப் பிரித்து தனித்தனியாக இருக்கிறது. இது ஓவும்-இன்-ஓவோவை முன்னிலைப்படுத்துகிறது. இத்தகைய முட்டைகள் இன்று வாழும் நவீன பறவைகளில் கூட காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

100 மில்லியன் ஆண்டுகள் பழமையான இனத்தை சேர்ந்ததா இந்த டைனோசர் முட்டை
ஊர்வனவற்றில் இத்தகைய முட்டைகள் காணப்படுவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். முட்டையிட்ட டைனோசரின் இனப்பெருக்க அமைப்பு, ஊர்வனவற்றை விட நவீன பறவைகளுடன் மிகவும் ஒத்ததாக இருந்தது என்றும் கூறியுள்ளனர். முட்டை கூடு தளத்தின் வயதை அறிந்துகொள்ள டேட்டிங் செயல்முறை செய்யப்பட்ட பின்னர், இது சுமார் 66 முதல் 100 மில்லியன் ஆண்டுகள் முன் வாழ்ந்த பழமையான இனத்தைச் சேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைனோசர்கள் உயிர்பெற்று மீண்டும் பூமிக்குள் நடமாடுமா?
இந்த முட்டை நெஸ்ட் p7 பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு இதற்கு முன் பல டைனோசர் புதைபடிமங்கள் காணப்பட்டுள்ளன, ஆனால் அவை அனைத்தும் டைட்டானோசர் (Titanosaurs) இனத்தைச் சேர்ந்தவை. சரி, இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், உங்களுக்கு மற்றொரு ரகசியமான தகவலைப் பற்றிக் கூற வேண்டியதுள்ளது. 2050 ஆம் ஆண்டில் சில 'டைனோசர்கள் உயிர்பெற்று மீண்டும் பூமிக்குள் நடமாடும்' என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.

2050 இல் டைனோசர் உயிருடன் வரலாம் - அறிக்கை தகவல்
ஆடம் ஸ்மித் இன்ஸ்டிடியூட், பிரிட்டிஷ் சிந்தனைக் குழு கணித்த ஒரு புதிய அறிக்கையில் இது பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, 'வரும் 2050 இல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று?" என்ற கேள்விக்கு, "பல வகையான டைனோசர்கள் மீண்டும் பூமியில் உருவாக்கப்படலாம், 66 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின் அவை பூமியில் மீண்டும் தோன்ற வாய்ப்புள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது எவ்வளவு உண்மை என்பது நமக்குத் தெரியவில்லை,

ஜுராஸிக் பார்க் திரைப்படத்தில் வருவது போலல்ல.. இப்படி தான் டைனோசர் உருவாக்கப்படும்
ஆனால் இந்த தகவல் வெளியிடப்பட்டது என்பது மட்டும் உண்மை. நீங்கள் நினைப்பது போல, ஜுராஸிக் பார்க் திரைப்படத்தில் கட்டப்படுவது போல், ஒரு கொசுவின் உடலில் இருந்து எடுக்கப்படும் DNA மூலம் இந்த எதிர்கால டைனோசர்கள் உருவாக்கப்படப்போவதில்லை. இது அறிவியல் ரீதியாகச் சாத்தியமற்றது. அதற்குப் பதிலாக, டைனோசர்கள் பறக்க முடியாத பறவைகளிலிருந்து மீண்டும் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அறிவியல் ரீதியாக பறவைகள் தான் நவீன காலத்து டைனோசர்களாகும்.

DNA-வின் ஆழத்தில் மறைந்திருக்கும் டைனோசர்கள்
ஆனால், அவை இனி டைனோசர்களைப் போலக் காட்சியளிப்பதில்லை. இருப்பினும், இவற்றின் டிஎன்ஏவின் ஆழத்தில், டைனோசர்கள் தொடர்பான தகவல்கள் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட சில இனப்பெருக்கம் மற்றும் மரபணு தொழில்நுட்பத்தின் கலவையின் உதவியோடு பற்கள், வால், சிறிய முன்கைகள் போன்ற டைனோசர்களின் சிறப்பியல்பு அம்சங்கள் கொடுக்கப்படும்.

அறிவியல் ரீதியாக 2050ல் 'இவை' டைனோசர்களாக ஏற்றுக்கொள்ளப்படும்
இந்த உயிரினங்கள் உண்மையில் டைனோசர்களாக இருக்குமா? அல்லது டைனோசர்களைப் போலத் தோற்றமளிக்குமா? அல்லது நவீனக் காலத்தில் செயல்படும் புதிய விலங்குகளாக இருக்குமா? என்ற பல கேள்விகளுக்கு அந்த அறிக்கை இறுதியில் பதிலளித்துள்ளது. "இதுவரை நீங்கள் டிஜிட்டலாக பார்த்திருக்கும் டைனோசர்கள் போல இருக்காது என்றாலும் கூட, அதிலிருந்து அதிக வித்தியாசமாக இருக்காது. எப்படி இருந்தாலும், அறிவியல் ரீதியாக இந்த உயிர்கள் உண்மையான டைனோசர்களாக ஏற்றுக்கொள்ளப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086