Home
News

புது விதிகள்.. ஏப்.1 முதல் அமல்.. இனி பணம் அனுப்ப இது கட்டாயம்.. 2,000 ரூபாயோ.. 3,000 ரூபாயோ.. என்ன மாறுது?

பேங்க் அக்கவுண்ட் மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் ஆர்பிஐ (RBI) என்று அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) ஆனது புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இந்த விதிகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல் செய்யப்படுகின்றன. பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் அனுப்பும்போது இதை செய்ய வேண்டிய கட்டயாம் இருக்கும். இந்த புதிய டிஜிட்டல் பரிவர்த்தனை விதிகள் (Digital Transaction Rules From April 1) என்ன சொல்கிறது? முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த விதிகள் யுபிஐ பரிவர்த்தனைகள் (UPI Transactions) மட்டுமல்லாமல், ஆர்டிஜிஎஸ், நெப்ட் பரிவர்த்தனைகள் (RTGS NEFT Transactions) போன்ற ஒட்டுமொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் அமல் செய்யப்பட இருக்கிறது. அதாவது, பேங்க் பணத்தை டிஜிட்டலாக பரிமாற்றம் செய்யும்போது, ஓடிபி (OTP) அல்லது பின் நம்பர் (PIN Number) பயன்படுத்தப்படுகிறது.

புது விதிகள்.. ஏப்.1 முதல் அமல்.. இனிமே பணம் அனுப்ப இது கட்டாயம்!

இதில், எஸ்எம்எஸ் அடிப்படையிலான அனுப்பி வைக்கப்படும் ஓடிபி டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதிலேயே கூடுதலாக வெரிபிகேஷன் வர இருக்கிறது. அதாவது, பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணத்தை அனுப்பும்போது, ஓடிபி மட்டுமல்லாமல், கூடுதலாக ஒரு வெரிபிகேஷனை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சேர்க்க இருக்கிறது.

இந்த 2-பேக்டர் வெரிபிகேஷன் (Two-Factor Verification) ஆனது பாஸ்வோர்ட்கள் (Passwords), பாஸ்பேர்ஸ் (Passphrase) அல்லது பின் நம்பருடன் கூடுதலாக பயன்படுத்தலாம். மேலும், ஆதார் கார்டு பேஸ்டு பயோமெட்ரிக் வெரிபிகேஷன் பயன்படுத்தப்படலாம். ஆகவே, ஃபிங்கர்பிரிண்ட் (Fingerprints) மற்றும் பேசியல் ரிககனைசேஷன் (Facial Recognition) பயன்படுத்தப்படலாம்.

இதுபோக ஹார்ட்வேர் டோக்கன்கள் (Hardware Tokens), சாப்ட்வேர் டோக்கன்கள் (Software Tokens) போன்ற கூடுதல் பேக்டர் ஆதன்டிகேஷன்களும் (Additional Facter authentication) இருக்கின்றன. இதில் ஏதாவது ஒரு வெரிபிகேஷன், ஓடிபி மட்டுமல்லாமல், அதில் 2ஆவது இடம்பெற இருக்கிறது. இந்த கூடுதல் வெரிபிகேஷனே ஏப்ரல் 1ஆம் தேதி அமலுக்கு வர இருக்கிறது.

இதனால், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை கூடுதல் பாதுகாப்புடன் பேங்க் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். அதேபோல பேங்க் கஸ்டமர்களின் அனுமதியில்லாமல், யாராலும் அவர்களது பணத்தை டிஜிட்டலாக பரிமாற்றம் செய்ய முடியாது. இதனாலேயே ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, இந்த புதிய 2-பேக்டர் வெரிபிகேஷன் விதிகளை கொண்டுவர இருக்கிறது.

ஆகவே, டிஜிட்டல் பரிவர்த்தனையில் ரூ.2,000 அனுப்பினாலும் சரி, ரூ.3,000 அனுப்பினாலும் சரி அல்லது எவ்வளவு தொகை அனுப்பினாலும் சரி, இந்த கூடுதல் வெரிபிகேஷன் இருக்கும். மேலும், என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது.

இந்த விதிகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் அமல் செய்யப்பட்ட இருக்கிறது. ஆகவே, கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm), பீம் (BHIM) போன்ற ஒட்டுமொத்த யுபிஐ ஆப்களிலும் இந்த விதிகளின்படியே பரிவர்த்தனைகளை செய்ய முடியும். இதில் யுபிஐ கலெக்ட் ரெக்கொஸ்ட் (UPI Collect Request) சேவை நிறுத்தப்படுகிறது.

ஆனால், இது பி2பி (P2P) பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். பி2எம் (P2M) பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது. ஆகவே, தனிப்பட்ட நபர்கள் யுபிஐ ஆப்கள் மூலமாக யாரிடமும் பணம் கேட்டு கலெக்ட் ரெக்கொஸ்ட் அனுப்ப முடியாது. ஆனால், வணிக ரிதீயாக கலெக்ட் ரெக்கொஸ்ட் அனுப்ப முடியும். ஆனால், இது வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் ஆனது, பி2பி பரிவர்த்தனைகளில் யுபிஐ கலெக்ட் ரெக்கொஸ்ட் கொடுக்க அதிகபட்சமாக ரூ.2,000 வரம்பாக வைத்திருக்கிறது. அக்டோபர் 1ஆம் தேதியில் இந்த விதிகள் அமலுக்கு வந்துவிட்டால், அதன் பிறகு ரூ.2,000 மட்டுமல்ல, எந்த தொகையையும் கலெக்ட் ரெக்கொஸ்ட் மூலமாக பெற்று கொள்ள முடியாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Digital Transaction Rules From April 1 RBI To Mandate Two Factor Authentication For Digital Payments
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X