Home
News

உறைஞ்சுட்டாங்க எல்லாரும்.. மீண்டும் உயிர்பெற்ற மர்லின் மன்றோ.. இறந்து 60 வருடம் ஆச்சு.. இப்போ எப்படி உயிர்?

மர்லின் மன்றோ (Marilyn Monroe) என்ற பெயரை யாரும் மறக்கவே முடியாது. 1950 மற்றும் 1960-களில் வெளியான ஹாலிவுட் திரைப்படங்களின் மூலம் உலக ஆண்களின் கனவு கன்னியாக மாறியவர் இவர். இவர் இறந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Digital Marilyn Monroe: ஆனால், இப்போது இவர் மீண்டும் உயிர்பெற்றிருக்கிறார். செயற்கை நுண்ணறிவு என்றழைக்கப்படும் (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு நிறுவனம் மீண்டும் இவருக்கு உயிர் கொடுத்துள்ளது. ஆம், டிஜிட்டல் தளத்தில் சொந்தமாக பதில் அளிக்கும் திறனுடன், மீண்டும் இந்த அழகியை உயிருடன் இயங்கும் வகையில், சோல் மெஷின் (Soul Machines) என்ற நிறுவனம் மர்லின் மன்றோனை உருவாக்கியுள்ளனர்.

உறைஞ்சுட்டாங்க எல்லாரும்.. மீண்டும் உயிர்பெற்ற மர்லின் மன்றோ..

மர்லின் மன்றோ: நீங்கள் மர்லின் மன்றோவின் ரசிகரா இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த பதிவில் உள்ள சுவாரசியமான தகவலை படிக்க மறக்காதீர்கள். மர்லின் மன்றோ மட்டுமில்லாமல், இன்னும் பல இறந்த பிரபலங்களை இந்த நிறுவனம் மீண்டும் உரியிர்பிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. AI உதவியுடன் எப்படி இது சாத்தியமானது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

உண்மையான இறந்த பிரபலங்களை, டிஜிட்டல் நபர்களாக உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற AI நிறுவனமான சோல் மெஷின்ஸ் (Soul Machines) ஆல் இந்த புதிய டிஜிட்டல் மர்லின் மன்றோ உருவாக்கப்பட்டது. இது ஆதென்டிக் பிராண்ட்ஸ் குரூப் (Authentic Brands Group) உடன் இணைந்து, AI உதவியுடன் மர்லின் மன்றோவிற்கு உயிர் வழங்கியுள்ளது.

மார்க்கெட்டிங் நிறுவனம் பிராண்ட்களின் போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது. இதில் மன்ரோ மற்றும் இறந்த பிற பிரபலங்களின் உரிமைகளை கொண்டுள்ள நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. சோல் மெஷின் நிறுவனம் இப்போது உருவாக்கியுள்ள மர்லின் மன்றோவுடன் நீங்கள் மிகவும் யதார்த்தமாக உரையாடலாம். டிஜிட்டல் மர்லின் மன்றோ உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது.

உறைஞ்சுட்டாங்க எல்லாரும்.. மீண்டும் உயிர்பெற்ற மர்லின் மன்றோ..

இறந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மர்லின் மன்றோ:

மர்லின் மன்றோ இறந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு, AI உதவியுடன் இந்த டிஜிட்டல் உலகில் மீண்டும் உயிர்பெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த AI மர்லின் மன்றோ செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை டெக்சாஸின் ஆஸ்டினில் உள்ள சவுத் பை சவுத்வெஸ்ட் தொழில்நுட்ப மாநாட்டில் இந்த AI மர்லின் மன்றோ அறிமுகமாம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு சாதாரண கருப்பு டர்டில்னெக் ஸ்வெட்டருடன், இதுவொரு கம்ப்யூட்டர் மானிட்டர் டிஸ்பிளேவில் தோன்றி, மர்லின் மன்றோவின் அழகுக்கு பெயர் போன பிக்சி ப்லோண்டே ஹேர்ஸ்டைல் உடன், மர்லின் மன்றோ அழகாக திரையில் தோன்றுகிறார். மர்லின் மன்றோ நடிகையின் டிஜிட்டல் டாப்பல்கேஞ்சர் தனது பழக்கமான ஹஸ்கி குரலில் உரையாடுகிறது.

ஒவ்வொரு முறையும் பயனர்கள் மர்லினுடன் பேசும்போது, ​​அது ஒரு சிறப்பு உணர்வை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர். சோல் மெஷின்ஸின் CEO மற்றும் இணை நிறுவனர் கிரெக் கிராஸ் கூறிகையில், AI மர்லின் மன்றோவுடன் ஒரு நல்ல உறவை வைத்திருப்பதாக கூறியுள்ளனர். தி இன்ஃபர்மேஷன் வழங்கும் நிகழ்வில் சோல் மெஷின்ஸ் டிஜிட்டல் மர்லினை இன்னும் கூடுதல் பயனர்கள் அணுகும் படி வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது.

உயிர்பெற போகும் இறந்த பிரபலங்கள்: இதில் பங்கேற்பாளர்கள் அனைவரும் மர்லின் மன்றோ கதாபாத்திரத்துடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று நிறுவனம் கூறியுள்ளது. இவர்களுடய பிராண்ட் இப்போது இன்னும் பல இறந்த பிரபலங்களின் AI உருவத்தை உருவாக்க முயன்று வருகின்றது. வெகு விரைவில் இன்னும் பல பிரபலங்கள் இந்த AI அம்சத்தின் மூலம் உயிர்பெற்று மக்களுடன் உரையாடுவர் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Digital Marilyn Monroe created with the help of artificial intelligence AI by Soul Machines
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X