Home
News

ஆன்லைன் மோசடி.. பணத்தை இழப்பவர்களுக்கு ரூ25000 இழப்பீடு.. ரிசர்வ் வங்கி பரிசீலனை..

இந்தியா முழுவதும் யுபிஐ, நெட் பேங்கிங் போன்ற ஆன்லைன் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. அதுவம் யுபிஐ மூலம் சில நொடிகளில் பணம் அனுப்பவும், பெறவும் முடியும் என்பதால் அதிக மக்கள் இந்த சேவையைப் பயன்படுத்துகின்றனர். ஆனாலும் சிலர் யுபிஐ, நெட் பேங்கிங், டெபிட் கார்டு கிரெடிட் கார்டு போன்றவற்றில் மோசடி செய்கின்றனர்.

அதாவது மோசடி செய்பவர்கள் மொபைல் போனில் தொடர்பு கொண்டு ஓடிபி கேட்டும், லிங்குகளை அனுப்பி பணத்தைப் பறிக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன. இதுதவிர டிஜிட்டல் கைது என்ற பெயரில் பணத்தைத் திருடும் சம்பவமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதேசமயம் இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

ஆன்லைன் மோசடி.. பணத்தை இழப்பவர்களுக்கு ரூ25000 இழப்பீடு..

ஆனால் புதிய புதிய வழிகளைக் கண்டறிந்து மோசடியாளர்கள் பணத்தைத் திருடும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் டிஜட்டல் மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க புதிய நடவடிக்கையை அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

சமீபத்தில் மும்பையில் ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளரிடம் அறிவித்தார். அதில் டிஜிட்டல் மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பது தொடர்பான புதிய வழிமுறைகளைக் கொண்டு வருவது தொடர்பான தகவல்களை வெளியிட்டார்.

மேலும் டிஜிட்டல் மோசடிகளில் பணத்தை இழந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதற்காக 2017-ல் வெளியிடப்பட்ட வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் ஆய்வு செய்யப்படும். அதுவும் சிறியளவு மோசடி பணப்பரிவர்த்தனைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிமுறைகள் விரைவில் பொது மக்களின் ஆலோசனைக்காக வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அதுவும் மூத்த குடிமக்கள் போன்றவர்களுக்கு கூடுதலாக அங்கீகரிப்பு முறைகள் கொண்டுவரப்படும் எனவும், பெரும்பாலான மோசடி கும்பல்கள் மூத்த குடிமக்களைத் தான் குறி வைக்கிறார்கள் என்பதால் கூடுதல் அங்கீகாரம் சரிபார்ப்பு நடைமுறைகள் கொண்டுவரப்படும் எனவும் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியிருக்கிறார்.

குறிப்பாக ஓடிபி உடன் கூடுதல் சரிபார்ப்பு, பாஸ்வேர்டு, பயோமெட்ரிக் போன்ற பல சரிபார்ப்பு முறைகள் கொண்டுவரப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இதுபோன்ற பதிய வழிமுறைகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மிகப் பெரிய பாதுகாப்பைக் கொடுக்கும். இந்த புதிய வசதி அனைத்து வாடிக்கையாள்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.

ஆன்லைன் மோசடி.. பணத்தை இழப்பவர்களுக்கு ரூ25000 இழப்பீடு..

அதேபோல் உங்கள் போனுக்கு மெசேஜ் மூலம் வரும் தெரியாத இணைப்புகளை (லிங்க்) கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் தேவையில்லாத செய்திகள் அல்லது மெயில்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக யுபிஐ (UPI) தரவுகளை அல்லது OTP-யை பகிர்வதைத் தவிர்க்கவும்.

கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோர் மூலம் அதிகாரப்பூர்வ ஆப்களை மட்டுமே டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். தெரியாத அல்லது உறுதிப்படுத்தப்படாத ஆதாரங்களில் இருந்து ஆப்களை டவுன்லோட் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். ஏதாவது அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்துத் தெரிந்தால் உடனடியாக உங்கள் வங்கிக்குத் தெரிவிக்கவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Digital Fraud Losses: RBI Plans Compensation of Up to Rs.25000: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X