Home
News

ஆபாச படங்கள், கேம்களுக்கு அடிமையாகும் குழந்தைகள்- காவல்துறை அதிரடி: இனி டிஜிட்டல் டி-அடிக்ஷன் சென்டர்!

ஆன்லைன் கேம்கள் மற்றும் ஆபாசப் படங்களில் இருந்து குழந்தைகளை விலக்கி உளவியல் ரீதியாக ஆதரவை உறுதி செய்ய அதிநவீன சேவைகளுடன் கூடிய பிரத்யேக மையமாக டிஜிட்டல் டி-அடிக்ஷன் மையங்கள் இருக்கும் என கூடுதல் காவல்துறை இயக்குனர் (ஏடிஜிபி) மனோஜ் ஆபிரகாம் தெரிவித்தார்.

இணையப் பயன்பாட்டை சமாளிக்கும் நடவடிக்கை

இணையப் பயன்பாட்டை சமாளிக்கும் நடவடிக்கை

குழந்தைகளிடையே உள்ள கட்டாய இணையப் பயன்பாட்டை சமாளிக்கும் நடவடிக்கையாக கேரள காவல்துறை டி-டாட் என்ற டிஜிட்டல் டி-அடிக்ஷன் மையத்தை உருவாக்கி இருக்கிறது. ஆன்லைன் கேம்கள் மற்றும் ஆபாசப் படங்களில் கவனம் செலுத்தும் குழந்தைகளை விலக்கி உளவியல் ரீதியாக ஆதரவை உறுதி செய்ய அதிநவீன சேவைகளுடன் கூடிய பிரத்யேக மையமாக டிஜிட்டல் டி-அடிக்ஷன் மையங்கள் இருக்கும் என கூடுதல் காவல்துறை இயக்குனர் (ஏடிஜிபி) மனோஜ் ஆபிரகாம் தெரிவித்தார்.

அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டது

அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டது

இந்த முயற்சியானது கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டாலும், கடந்த புதன்கிழமை முதல் அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் கேம்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் பலரும் அடிமையாகிக் கிடக்கின்றனர். குழந்தைகள் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாவது என்பது பிற்காலத்தில் அவர்களுக்கு பெரும் விளைவை ஏற்படுத்தும். இதையடுத்து அதுபோன்ற குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக உதவு டி-டாட் என்ற டிஜிடட்ல் டி-அடிக்ஷன் மையம் அமைக்க கேரள காவல்துறை முடிவெடுத்துள்ளது. இந்த திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது என்றாலும், தற்போது கேரள காவல்துறை சமர்பித்த முன்மாதிரிக்கு கேரள அரசு தற்போதுதான் ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த திட்டமானது அடுத்த இரண்டு மாதங்களில் முழுமையாக நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக ஆலோசனை

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக ஆலோசனை

டி-டாட் ஆனது உளவியலாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் குழந்தைகளுக்கான நட்பு கருவிகள் மூலம் நிர்வகிக்கப்படும். இந்த டிஜிட்டில் டி-அடிக்ஷன் மையமானது முதற்கட்டமாக திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் திருச்சூர் பகுதிளில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. ஊடாடும் கல்வி, விஞ்ஞான ரீதியாக திருப்பல் உக்திகள் உள்ளிட்டவைகள் செயல்படுத்தப்படும். இந்த மையங்களில் இருப்பவர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக ஆலோசனை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

நாட்டிலேயே முதன்முறையாக செயல்படுத்தப்படுகிறது

நாட்டிலேயே முதன்முறையாக செயல்படுத்தப்படுகிறது

மேலும் பல்வேறு மாவட்டங்களில் உள்ளவர்கள் கூடுதல் ஆலோசனை தேவைப்படும் பட்சத்தில் ஆஃப்லைன் ஆலோசனைகள் வழங்கப்படும். திறமையான தனித்தனி விசாரணைக்கு பின் விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என ஏடிஜிபி கூறினார். மேலும் இந்த மையம் நாட்டிலேயே முதன்முறையாக செயல்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார். மேலும் முதற்கட்டமாக செயல்படுத்தப்படும் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் திருச்சூர் ஆகிய நான்கு இடங்களில் மையங்கள் அமைக்க மாநில அரசு சார்பில் ரூ.1.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குழந்தைகளையும் பாதுகாப்பது என்பது நமது கடமை

ஒவ்வொரு குழந்தைகளையும் பாதுகாப்பது என்பது நமது கடமை

ஒவ்வொரு குழந்தைகளையும் பாதுகாப்பது என்பது நமது கடமை, தங்கள் குழந்தைகளை போதை பழக்கத்தில் இருந்த மீட்க உதவுமாறு கவலையடந்த பெற்றோர்களிடம் இருந்து அழைப்புகள் வருகின்றன. அதை நிவர்த்தி செய்யும் நோக்கத்தில் உருவானதே இந்த திட்டம், அதேபோல் இந்த திட்டத்துக்கு தகுதியான மென்பொருளை உருவாக்குவது குறித்து தொழில்நுட்ப நிறுவனங்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாம் குறிப்பிட்டார்.

இன்டெர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா

இன்டெர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா

இன்டெர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் தகவல்படி, 46% இந்தியர்கள் இணையத்தை தீவிரமாகப் பயன்படுத்துகின்றனர் எனவும் மகாராஷ்டிரா 61% உடன் முதலிடத்தில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதில் கேரளா 59 சதவீதத்தைக் கொண்டிருக்கிறது. ஆன்லைனில் அதிக நேரம் செலவழிக்கும் குழந்தைகள் ஆன்லைன் பாலியல் துஷ்பிரயோகம், ஆபாசப் படங்கள் மற்றும் பல தனியுரிமை தொடர்பான சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும் எனவும் இதை சரிபார்க்காவிட்டால் எந்த நேரத்திலும் அவர்கள் அடிமையகளாக மாறக்கூடும் எனவும் சைபர் நிபுணர்கள் குறிப்பிட்டனர். அதேபோல் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்படி, 2020-21 இல் நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

File Images

Best Mobiles in India

English summary
Digital de-addiction center set up by Kerala Police For Protect Every Child
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X