Home
News

Digital Arrest.. ஸ்க்ரீன் ஷாட் எடுத்தல்.. கால் ரெக்கார்ட் செய்தல்.. மன் கி பாத்தில் PM Modi எச்சரிக்கை!

டிஜிட்டல் கைது ஊழல் (Digital arrest scam) குறித்து, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மன் கி பாத் (Mann Ki Baat) நிகழ்ச்சியின் 115 வது எபிசோடில் உரையாற்றிய பிரதமர் மோடி, டிஜிட்டல் கைது ஊழலின் செயல்பாடு குறித்து விரிவாக பேசினார்.

அதில் எந்த அரசு நிறுவனமும் தனி நபர்களை தொலைபேசியில் மிரட்டுவதும் இல்லை, பணம் கேட்பதும் இல்லை என்பதை தெளிவுபடுத்தினார். மேலும் டிஜிட்டல் கைது மோசடியின் கீழ், உங்களை அழைக்கும் நபர்கள் தங்களை ஒரு காவல்துறை, சிபிஐ, ரிசர்வ் வங்கி அல்லது போதைப்பொருள் துறை அதிகாரிகளாக காட்டிக்கொள்கிறார்கள்; அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பேசுகிறார்கள்.

Digital Arrest.. மன் கி பாத்தில் PM Modi எச்சரிக்கை!

இதுகுறித்து மன் கி பாத்தில் பேசும்படி மக்கள் என்னிடம் கேட்டார்கள். இதுகுறித்து 3 முக்கியமான படிகளை குறித்து எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். முதல் படி - உங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பார்கள். இரண்டாவது படி - பயமான சூழ்நிலையை உருவாக்குவார்கள், இதனால் நீங்கள் தெளிவாக சிந்திக்க முடியாது. மூன்றாவது படி - நேரம் தொடர்பான அழுத்தத்தை உருவாக்குவார்கள். இப்படியாக நீங்கள் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்படுவீர்கள்.

இப்படியான டிஜிட்டல் அரெஸ்ட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அனைத்து வகையான பின்னணி மற்றும் வயதை சேர்ந்தவர்களாக உள்ளனர் இப்படியாக நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஆனது இதுபோன்ற அழைப்புகளால் பறிபோவது போல் தெரிந்தால்.. நினைவில் வைத்து கொள்ளவும் எந்த புலனாய்வு நிறுவனமும் இதுபோன்ற விசாரணைகளை தொலைபேசி அல்லது வீடியோ அழைப்பின் மூலம் நடத்துவதில்லை.

"நிறுத்துங்கள், சிந்தியுங்கள் மற்றும் செயல்படுங்கள். முடிந்தால், ஸ்கிரீன்ஷாட் (ScreenShot) எடுக்கவும் அல்லது அழைப்பை பதிவு (Call Record) செய்யவும்" என்றும் மோடி நாட்டு மக்களை கேட்டு கொண்டுள்ளார். டிஜிட்டல் கைது என்ற பெயரில் நடத்தப்படும் மோசடியை எதிர்த்துப் போராட மாநில அரசுகளுடன் இணைந்து புலனாய்வு அமைப்புகள் (Investigative agencies) செயல்பட்டு வருவதாகவும் மோடி கூறியுள்ளார்.

டிஜிட்டல் கைது என்று எந்த சட்ட அமைப்பும் இல்லை; இது முற்றிலும் மோசடி, வஞ்சகம், சமூக விரோதிகளின் கிரிமினல் தொடர்பான விஷயமாகும். பல்வேறு புலனாய்வு அமைப்புகள், மாநில அரசுகளுடன் இணைந்து, இந்த மோசடிக்கு தீர்வு காண தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தேசிய சைபர் ஒருங்கிணைப்பு மையம் (National Cyber Coordination Centre) இந்த ஏஜென்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வளர்ப்பதற்காக நிறுவப்பட்டுள்ளது என்றும் மோடி கூறியுள்ளார்.

சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த, டிஜிட்டல் அரெஸ்ட் குறித்த ஒரு மோசடி இங்கே குறிப்பிடத்தக்கது. அக்ரிபாடா காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் வினய் குமார் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு நபரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.

சட்டவிரோத விளம்பரங்களில் உங்களுடைய மொபைல் எண்ணை தவறாக பயன்படுத்தியதற்காக உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு வரவும் என்று மிரட்டப்பட்டு உள்ளார். வர மறுத்ததால், உயர் அதிகாரிகள் உங்களை அணுகுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளார்

பின்னர், சிபிஐயில் இருந்து ஆகாஷ் குல்ஹாரி என்று கூறிக்கொள்ளும் நபரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது, அவர் நரேஷ் கோயலின் சொத்துகளில் செய்த சோதனையின் போது உங்களுடைய கணக்கில் இணைக்கப்பட்ட ஏடிஎம் கார்டு கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறி உள்ளார். மும்பையில் உள்ள அவரது கனரா வங்கி கணக்கில் ரூ.2 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாகவும் அவர் கூறி உள்ளார்.

அதன்படி, அவர் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும். அவர் சிபிஐயால் கைது செய்யப்படுவார் என்றும், உரிய ஆவணங்களுடன் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் எச்சரிக்கப்பட்டுளார். ஒருவேளை நேரில் ஆஜராக முடியாவிட்டால் 'ஆன்லைன் விசாரணை' என்கிற மாற்று வழியை பயன்படுத்தலாம் என்று கூறி, அதன் வழியாக பாதிக்கப்பட்ட பெண்ணின் வங்கி கணக்குகள் மற்றும் பிக்ஸடு வைப்புத்தொகை விவரங்கள் கேட்டு வாங்கப்பட்டுள்ளது.

பின்னர் சிபிஐயில் இருந்து பேசுவதாக கூறிய ஆகாஷ் குல்ஹாரி, இந்த விசாரணையை தவிர்க்க ரிசர்வ் வங்கி கணக்கிற்கு நிதியை மாற்றுமாறு அறிவுறுத்தினார், அக்டோபர் 19 ஆம் தேதி, பந்தன் வங்கியின் வராச்சா கிளையான ஷிவானி எண்டர்பிரைசஸுக்கு ரூ.50 லட்சத்தை அனுப்புமாறு அறிவுறுத்தினார். அவரது அறிவுறுத்தலை பின்பற்றி, பாதிக்கப்பட்ட பெண்ணும் பணத்தை கொடுத்து ஏமாந்துளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Digital Arrest Scam PM Modi New Warning Be Alert Take Screenshot Record Call All You Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X