யார் போன்ல எல்லாம் DigiLocker ஆப்ஸ் இருக்கு? அடிச்சது லக்கு.. இனி கவலையே இல்லை.. எல்லாம் நேரா கைக்கே வந்தது..
பொதுவாக, பெரும்பாலான இந்திய மக்களின் ஸ்மார்ட்போனில் நிச்சயம் இந்த டிஜிலாக்கர் மொபைல் ஆப்ஸை (DigiLocker Mobile Apps) நம்மால் பார்க்க முடியும். அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த அணைத்து வகையான அதிகாரப்பூர்வ சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை பத்திரமாக பாதுகாப்புடன் அணுகி பயன்படுத்த இந்த டிஜிலாக்கர் ஆப்ஸ் பயன்படுத்தப்படுகிறது. மக்களுக்கு பல வகையில் உதவிகரமாக இருந்து வந்த DigiLocker தளத்தில் இப்போது மற்றொரு புதிய அம்சத்தை தேசிய மின் ஆளுமைப் பிரிவு (NeGD) தற்போது இணைத்துள்ளது. அது தான் UMANG சேவை. உங்கள் டிஜிலாக்கர் ஆப்ஸில் எப்படி இனி UMANG சேவையை பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
தேசிய மின் ஆளுமைப் பிரிவு (NeGD) சமீபத்தில் UMANG செயலியை DigiLockerஆப்ஸ் உடன் இணைத்துள்ளது. டிஜிலாக்கர் இந்தியாவின் டிஜிட்டல் வாலட்டுடன் UMANG செயலியை அதிகாரப்பூர்வமாக ஒருங்கிணைப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டாண்மையானது குடிமக்களுக்கு பரந்த அளவிலான அரசாங்க சேவைகளுக்கு தடையற்ற அணுகலை வழங்கும் நோக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் போன்ல எல்லாம் DigiLocker ஆப்ஸ் இருக்கு? அடிச்சது லக்கு.. இனி கவலையே இல்லை:
முன்பை விட, பொதுமக்களுக்கு இனி DigiLocker ஆப்ஸ் அதிக வசதியை வழங்கும் மற்றும் பயனர்கள் ஒரே தளத்தின் மூலம் பல சேவைகளை நிர்வகிக்க இந்த புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளதாக NeGD தெரிவித்துள்ளது. இந்த ஒருங்கிணைப்பு அரசாங்கத்துடனான குடிமக்களின் தொடர்புகளை எளிமைக்குகிறது. UMANG உடன் ஒருங்கிணைப்பதன் மூலம், பயணத்தின்போது அணுகக்கூடிய சேவைகளின் வரம்பை DigiLocker விரிவுபடுத்தியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
UMANG ஆப்ஸ் அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடைக்கிறது. இது iOS க்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. இப்போது, சில எளிய வழிமுறைகளுடன், இந்த சேவைகளை DigiLocker பயன்பாட்டின் மூலமாகவும் மக்கள் அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. UMANG போன்ற மின்-ஆளுமைச் சேவைகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், DigiLocker அணுகல் தன்மை மற்றும் வாழ்க்கையின் எளிமையை மேலும் மேம்படுத்த உறுதிபூண்டுள்ளது. இந்த சேவையை பொதுமக்கள் மற்றும் DigiLocker பயனர்கள் எப்படி பயன்படுத்தலாம் என்ற விபரம் இதோ.
இந்தப் புதிய சேவையைப் பயன்படுத்த, பயனர்கள் பின்வரும் செயல்முறையை பின்பற்ற வேண்டும்:
1. உங்கள் DigiLocker பயன்பாட்டை சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்துகொள்ளவும்.
2. உங்கள் Android சாதனத்தில் DigiLocker பயன்பாட்டைத் திறக்கவும்.
3. DigiLocker செயலியில் உள்ள UMANG ஐகானைக் கிளிக் செய்யவும்.
4. கேட்கும் போது UMANG பயன்பாட்டை இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.
5. DigiLocker பயன்பாட்டில் பல்வேறு அரசாங்க சேவைகளை அணுகவும்.
DigiLocker என்பது டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் கீழ் இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் வழங்கப்படும் ஒரு டிஜிட்டல் சேவையாகும். டிஜிலாக்கர் ஓட்டுநர் உரிமங்கள், வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் கல்வி மதிப்பெண் பட்டியல்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களின் டிஜிட்டல் பதிப்புகளை அணுக அனுமதிக்கிறது. இதில் இப்போது UMANG சேவைகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், கூடுதல் அரசாங்க ஆவணங்கள் மற்றும் சேவைகளை இனி மக்கள் ஒரே இடத்தில் அணுக முடியும்.


Click it and Unblock the Notifications