Home
News

ஸ்மார்ட்போன் பெஸ்ட்டா? இல்லை சாட்டிலைட் போன் பெஸ்ட்டா? இரண்டிற்கும் இடையில் என்ன வித்தியாசம்? எது பெஸ்ட்?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் (Digital Era), தொடர்பு தொழில்நுட்பங்கள் மிக வேகமாக வளர்ந்து முன்னேறி வருகின்றன. நமக்கு விருப்பமானவர்களுடன் இணைத்து வைக்கும் சாதனங்களாக ஸ்மார்ட்போன்கள் (Smartphones) செயல்படுகின்றன. உலகம் முழுக்க ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இப்போது, சாட்டிலைட் போன் (Satellite Phone) பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் ஸ்மார்ட்போன் என்றால் என்ன (What Is Smartphone)? சாட்டிலைட் போன் என்றால் என்ன (What Is Satellite Phone)? இவ்விரண்டிற்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்பதை பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சாட்டிலைட் போன் (Satellite phone) என்றழைக்கப்படும் செயற்கைக்கோள் போன்கள் நவீன தொடர்புக்கான குறிப்பிடத்தக்க கருவிகளாகத் தனித்து நிற்கின்றன. இந்த இரண்டு சாதனங்களும் மக்களை இணைத்து வைக்கும் அடிப்படை நோக்கத்தை பூர்த்தி செய்தாலும், அவை முற்றிலும் மாறுபட்ட கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பங்களில் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் செயல்பாட்டை பற்றி வெகு சிலர் மட்டுமே சரியாக புரிந்துகொண்டுள்ளனர்.

ஸ்மார்ட்போன் பெஸ்ட்டா? இல்ல சாட்டிலைட் போன் பெஸ்ட்டா? என்ன வித்தியாசம்

ஸ்மார்ட்போன் பெஸ்ட்டா? இல்லை சாட்டிலைட் போன் பெஸ்ட்டா?

ஸ்மார்ட்போன்களை விட சாட்டிலைட் போன்கள் சக்தி வாய்ந்தவையா? என்றால், ஒரு சில அம்சங்கள் ஸ்மார்ட்போன்களில் மட்டும் தான் கிடைக்கிறது. ஆனால், பூமியில் எங்கிருந்து வேண்டுமானாலும் ஒருவரை தொடர்புகொள்ள வேண்டுமென்றால், அதற்கு சாட்டிலைட் பொங்கல் தான் சிறந்தது. ஆகவே, சாட்டிலை போன்கள் சக்தி வாய்ந்த சாதனங்களாக கருதப்படுகின்றன. இந்த சாதனங்கள் சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களுடன் நேரடியாக இணைக்கப்படுகின்றன.

இதனால் தொலைதூரப் பகுதிகள், அடர்ந்த காடுகள், பாலைவனங்கள், கடல்கள் மற்றும் மலைப்பகுதிகள் போன்ற பாரம்பரிய வலையமைப்பு இல்லாத இடங்களில் கூட இந்த சாதனத்தை பயன்படுத்தி, உங்களால் மற்றவருடன் தொடர்பு கொள்ள முடியும். மறுபுறம், ஸ்மார்ட்போன்கள் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகள், மெசேஜ்ஜிங் மற்றும் இணைய சேவைகளை எளிதாக அனுபவிக்க அனுமதிக்கிறது. குறிப்பாக 4G, 5G அல்லது Wi-Fi போன்றவற்றுடன் சிறப்பாக செயல்படுகிறது.

ஸ்மார்ட்போன் மற்றும் சாட்டிலைட் போன் இடையிலான வித்தியாசம் என்ன?

மொபைல் டவர்கள் இல்லாமல் போனால், ஸ்மார்ட்போன்கள் செயலிழந்துவிடும். இந்த அடிப்படை வேறுபாடு ஒவ்வொரு சாதனத்தின் தனித்துவமான திறன்கள் மற்றும் வரம்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. செயற்கைக்கோள் போன் செயல்பாட்டு முறை, செயற்கைக்கோள்களுடன் நேரடி இணைப்பை ஏற்படுத்தும் ஒரு சிறப்பு ஆண்டெனா மூலம் இணைப்பை உருவாக்குகிறது. அதன் மூலம் வாய்ஸ் கால்ஸ் அழைப்பு அல்லது மெசேஜ் செய்ய சாட்டிலைட் போன் அனுமதிக்கிறது.

சாட்டிலைட் போனில் இருந்து அனுப்பப்படும் சிக்னல் செயற்கைக்கோளுக்கு அனுப்பப்படுகிறது. பின்னர் மற்றொரு செயற்கைக்கோள் அல்லது நிலையான நிலையம் மூலம் நோக்கப்பட்ட பெறுநருக்கு மீண்டும் அந்த செய்தி அனுப்பப்படுகிறது. பாரம்பரிய மொபைல் நெட்வொர்க் விட அதிக ஆற்றல் தேவைப்படும் மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் இந்த செயல்முறை, வழக்கமான போன்கள் தோல்வியடையும் இடத்தில் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது.

இறுதியில் எது பெஸ்ட்? ஸ்மார்ட்போன்-ஆ? இல்ல சாட்டிலைட் போன்-ஆ?

நெட்வொர்க் கட்டமைப்பு கிடைக்காத அல்லது சேதமடைந்த இடங்களில் செயற்கைக்கோள் போன்கள் மதிப்புமிக்கவை. நிலநடுக்கங்கள் அல்லது வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின் போது, அவை அவசரகால தொடர்புக்கான முக்கியமான வழிகாட்டியாக செயல்படுகின்றன. கூடுதலாக, இந்த போன்கள் இராணுவம், தேடுதல் மற்றும் மீட்பு பனி போன்ற நேரங்களில் மிகவும் நம்பகமான சாதனமாக பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், குறிப்பிடத்தக்க நன்மைகளுடன், செயற்கைக்கோள் போன்கள் அவற்றின் சொந்த குறைபாடுகளைக் கொண்டுள்ளன.

சாட்டிலைட் போன்கள் பொதுவாகவே ஸ்மார்ட்போன்களை விட அதிக விலை கொண்டவை. மிகவும் கனமானவை மற்றும் பெரியவை. இதனால் அன்றாட பயன்பாட்டிற்கு குறைவான வசதியாக சாட்டிலைட் போன்கள் உள்ளன. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக சில நாடுகளில் செயற்கைக்கோள் போன்களைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இறுதியில், நகரவாசிகளுக்கு ஸ்மார்ட்போன் சிறந்தது. உலகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் இணைய வேண்டுமென்பவர்களுக்கு சாட்டிலைட் போன் சிறப்பானது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Difference between Smartphone and Satellite Phone Know This Details Today Before Using It
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X