ஏர்டெல்-ரிலையன்ஸ். 4ஜி சேவை குறித்த ஒரு ஒப்பீடு

By Super Admin
|

இந்தியாவில் ஏற்கனவே 4ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் 4ஜி சேவையை வெற்றிகரமாக வழங்கி வரும் ஏர்டெல் நிறுவனம் இதுவரை போட்டியின்றி தனிக்காட்டு ராஜாவாக இந்தியாவில் வலம் வந்தது.

ஏர்டெல்-ரிலையன்ஸ். 4ஜி சேவை குறித்த ஒரு ஒப்பீடு

ஆனால் தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் 4ஜி சந்தையில் மிக பிரமாண்டமாக இறங்கவுள்ளது. இன்னும் இந்நிறுவனம் 4ஜி சேவையை அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கவில்லை எனினும் ஸ்மார்ட்போன் உபயோகிபாளர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது என்பதை மறுக்க முடியாது.

ஜியோ சிம் பெற்ற பின்பு டெலி-வெரிஃபிக்கேஷன் குறுந்தகவலை நிறுத்துவது எப்படி..?

இரண்டுமே பெரிய நிறுவனங்கள் என்பதால் ஒன்றுக்கொன்று பலசலுகைகளை அளித்து தங்கள் வாடிக்கையாளர்களை நிலை நிறுத்திக் கொள்ள போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோஃபை : பாக்கெட் இண்டர்நெட் வசதியை பெறுவது எப்படி..?

இந்நிலையில் இந்நிறுவனங்களின் 4ஜி சேவையை ஒரு ஒப்பீட்டின் மூலம் பார்ப்போம்.,

எந்த பாண்ட்-ல் இருந்து இரு நெட்வொர்க்களும் இயங்குகின்றன?

எந்த பாண்ட்-ல் இருந்து இரு நெட்வொர்க்களும் இயங்குகின்றன?

BWA என்னும் பிராண்ட்பாண்ட் வயர்லஸ் அக்சஸ் என்ற 2300 அலைவரிசையில் இருந்து 15 நாடுகளில் 22 மண்டலமாக ஏர்டெல் தனது 4ஜி சேவையை வழங்கி வருகிறது. மேலும் மொத்தமுள்ள 1800MHz பவரில் இருந்து 97MHz பவரை கூடுதலாக பெற்றுள்ளது.


முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் 2300MHz அலைவரிசையில் இயங்கவுள்ளது. கூடுதலாக 10 மண்டலங்களில் 800MHz பவரும், 6 மண்டலங்களில் 1800MHz பவரும் கையகப்படுத்தியுள்ளது.

4ஜிக்கு உகந்த பேண்ட் 1800MHzதான்:

4ஜிக்கு உகந்த பேண்ட் 1800MHzதான்:

உலகம் முழுவதும் 4ஜி சேவைக்கு 1800MHz அலைவரிசையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் உலகில் உள்ள 44% நிறுவனங்கள் 4ஜி சேவைக்கு 1800MHz அலைவரிசையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். 2300MHz அலைவரிசையில் இருந்து இது மிகவும் அதிகப்படியான வசதியை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் 1800MHz பேண்ட், 2300MHz பேண்ட்-ஐ விட சிறப்பானது:

ஏன் 1800MHz பேண்ட், 2300MHz பேண்ட்-ஐ விட சிறப்பானது:

விலையுயர்ந்த ஸ்மார்ட்போனில் உள்ள அம்சங்கள் அனைத்தும் ரூ.10,000 மொபைல் போனில் கிடைத்தால் நாம் எந்த அளவு சந்தோஷப்படுவோமோ அதேபோல் தான் இந்த பேண்ட் விஷயத்தில் உள்ளது.

2300MHz பேண்ட் கட்டணத்தைவிட 1800MHz பேண்ட் கட்டணம் 30% குறைவு என்பதாலும், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இன்னும் அதிநவீன சிஸ்டம் வரவில்லை என்பதாலும் 1800MHz சிறந்ததாக கருதப்படுகிறது.

TDD/FDD டெக்னாலஜி சிஸ்டம்:

TDD/FDD டெக்னாலஜி சிஸ்டம்:

ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் உள்ள மிகபெரிய வேற்றுமை என்னவெனில் ஏர்டெல் TDD-LTE டெக்னாலஜியையும், ரிலையன்ஸ் நிறுவனம் FDD-LTE டெக்னாலஜியையும் பயன்படுத்துகின்றன.

FDD பயன்படுத்த என்ன காரணம்?

FDD பயன்படுத்த என்ன காரணம்?

கிட்டத்தட்ட அனைத்து சர்வேக்களும் 1800MHz அலைவரிசைக்கு FDD டெக்னாலஜியே சிறந்தது என்று கூறியுள்ளது.

4ஜி LTEக்கு மட்டுமே ரிலையன்ஸ் ஜியோ:

4ஜி LTEக்கு மட்டுமே ரிலையன்ஸ் ஜியோ:

சமீபத்தில் அனைவரும் பயன்படுத்தும் ஒரு வார்த்தை ஜியோ. இந்த ஜியோ, ரிலையன்ஸ் 4ஜி LTEக்கு மட்டுமே கிடைக்கும் என்பது இந்நிறுவனத்திற்கு உள்ள ப்ளஸ் ஆகும்., ஆனால் அதே நேரத்தில் ஏர்டெல் 2ஜி, 3ஜி, மற்றும் 4ஜி LTE சேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.

டவுன்லோடு ஸ்பீடு எதில் அதிகம்:

டவுன்லோடு ஸ்பீடு எதில் அதிகம்:

சந்தேகமே இல்லாமல் ரிலையன்ஸ் ஜியோவில் டவுன்லோடு வேகம் அதிகம் என்பதை அடித்து கூறலாம்.

Best Mobiles in India

English summary
Reliance hasn't been official yet, but the response from the customers towards the trial phase is overwhelming. Reliance has been offering customers to experience the preview offer if they own a Samsung, LG, Asus, Panasonic, Micromax, TCL, and YU smartphones.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X