Home
News

தெரியாத நபரிடமிருந்து உங்களுக்கு பணம் வந்ததா? உஷார் மக்களே! ஏமாந்துடாதீங்க! இது மோசடி!

தெரியாமல் உங்கள் கணக்கிற்கு பணம் அனுப்பியதாக கூறி, உங்களை யாரேனும் தொடர்புகொண்டால் உடனே உஷார் ஆகிவிடுங்கள். இது இந்தியாவில் நடக்கும் ஒரு புது மோசடியாகும். வெறும் 16 நாளில் 1 கோடி பணம் வரை இந்த முறையில் திருடப்பட்டுள்ளது.

இத்தகைய மோசடியில் நீங்களும் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? எதை செய்ய கூடாது? என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க. தெரியாத எண்ணிலிருந்து நீங்கள் பணத்தைப் பெற்றாலோ அல்லது அந்த பணத்தை அனுப்புபவர் உங்களிடம் உடனே திருப்பி அனுப்பச் சொன்னாலோ, நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தெரியாத நபரிடமிருந்து உங்களுக்கு பணம் வந்ததா? உஷார் மக்களே! இது மோசடி!

மும்பையில் 16 நாட்களில் 81 நபர்களிடம் இருந்து ரூ.1 கோடி திருடப்பட்ட புதிய மோசடியில் இந்த நுட்பத்தை மோசடி செய்பவர்கள் பயன்படுத்தி தான் பணத்தை சூறையாடியுள்ளனர் என்று கூறப்படுகிறது. பணத்தை திரும்பி தரும்போது பயனர் தகவல் மற்றும் தரவுகளை திருடுகி, நூதன முறையில் திருடியுள்ளனர் என்று கூறப்படுகிறது. உங்கள் கணக்கிற்கு தவறாக பணம் தெரியாத நபரிடம் இருந்து வந்தால் உஷார்.

வெளியான ஊடக அறிக்கைகளின்படி, ஆன்லைன் கான் ஆர்டிஸ்ட்களால் பணம் செலுத்தும் பிழை நுட்பங்களைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி பணத்தை திருடுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பொதுமக்களின் அறியாமையை பயன்படுத்தி UPI இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. எப்படி இது சாத்தியம்? UPI பாதுகாப்பு என்ன ஆனது?

UPI ஆப்ஸைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரின் கணக்கிற்கு பணத்தை அனுப்பிய பிறகு, மோசடி செய்பவர் தற்செயலாக பரிவர்த்தனை செய்யப்பட்டதாக கூறி, அந்த நபரிடம் இருந்து பணத்தை மீண்டும் அனுப்ப கூறி கோரிக்கையை வைக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் பின்னர் அழைப்பாளரின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பணம் அனுப்புமாறு கேட்கப்படுகிறார்.

தெரியாத நபரிடமிருந்து உங்களுக்கு பணம் வந்ததா? உஷார் மக்களே! இது மோசடி!

UPI ஆப்ஸ் ஒன்றின் மூலம் பயனர் பணத்தைத் திருப்பித் தந்தால், வங்கித் தகவல் மற்றும் PAN மற்றும் ஆதார் போன்ற KYC தரவு உட்பட வாடிக்கையாளரின் அனைத்து தகவல்களையும் மோசடி செய்பவரால் அணுக முடிவதாக கூறப்படுகிறது. இந்தத் தகவலின் மூலம், மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கை அணுகி பணத்தைத் திருடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த மோசடி எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது பற்றிய விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. Duggal இன் கருத்து உட்பட பல வெளியீடுகள் செய்தியைப் புகாரளித்த பிறகு, PhonePe ஒரு அறிக்கையை வெளியிட்டது மற்றும் அந்த கட்டுரையில் இது 'தவறானவை' என்று போன்பே நிறுவனம் கூறியுள்ளது. ஏனெனில் ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போது பயனர்களின் KYC விவரங்கள் பகிரப்படும் என்று அறிக்கைகள் பரிந்துரைத்தன.

இந்தக் கதைகள் இந்திய நுகர்வோரின் மனதில் தவறான கவலைகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அதேபோல், UPI என்பது பணப் பரிமாற்றத்திற்கான பாதுகாப்பான முறையாக இருப்பதாக அவர்கள் கருதுவதாகவும் தளம் கூறியது. இதற்கிடையில், NPCI இந்த விஷயத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில், UPI மூலம் செய்யப்படும் எந்தவொரு கட்டணமும் அனுப்புநரின் KYC தகவலை வெளிப்படுத்தாது என்று கூறியுள்ளது.

தெரியாத நபரிடமிருந்து உங்களுக்கு பணம் வந்ததா? உஷார் மக்களே! இது மோசடி!

பயனரின் மொபைல் சாதனம் அல்லது UPI ஆப்ஸ் சமரசம் செய்யப்படுவதில்லை என்று பயனர்களுக்கு உறுதியளிக்கிறது. NPCI இன் படி, UPI ஆனது விர்ச்சுவல் பேமெண்ட் முகவரி அல்லது UPI ஐடி, பாதுகாப்பான சாதன பிணைப்பு நுட்பம் மற்றும் UPI பின் ஆகியவற்றைப் பயன்படுத்தி பணம் செலுத்தப்படுகிறது என்ற கொள்கையின் கீழ் செயல்படுகிறது. UPI பரிவர்த்தனையில் KYC தகவலை பகிர்வது இல்லை என்று கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த மோசடியை எப்படி மோசடிக்காரர்கள் செய்து வருகிறார்கள் என்பது நமக்கு தெளிவாக தெரியவில்லை. தெரியாத எண்ணிலிருந்து இனி நீங்கள் பணம் பெற்றால், அதைச் சமாளிப்பதற்கான சிறந்த வழி, அருகிலுள்ள காவல்நிலையத்தில் செட்டில்மென்ட் செய்வதாக கூறுங்கள். அல்லது வங்கி மூலம் இணைந்து அந்த பணத்தை திரும்பி தருவதாக கூறி, மாற்று வழிகளை செய்வது இப்போதைக்கு பாதுகாப்பானது. இந்த தகவலை மற்றவர்களுடன் உடனே பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Did you receive money from an unknown person Be careful people Don't be fooled This is fraud Scam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X