ஐபோன் இவ்வளவு விஷயங்களை செய்யுமா, இது தெரியாமா போச்சே!

By Meganathan
|

உலகளவில் பிரபலமான ஐபோன்களை தினசரி வாழ்வில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் எத்தனை பேர் அவைகளில் மறைந்திருக்கும் அத்தனை அம்சங்களையும் பயன்படுத்துகின்றனர் என்றால் அதன் எண்ணிக்கை நிச்சயம் குறைவாக தான் இருக்கும்.

அவ்வாறு மறைக்கப்பட்டிருக்கும் பல அம்சங்கள் பொதுவாக ஐபோனின் செட்டிங்ஸ் பகுதியில் தான் இருக்கும். கீழ் வரும் ஸ்லைடர்களில் ஐபோன்களால் செய்ய முடியும் என உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்களை பாருங்கள்...

குறுந்தகவல்

குறுந்தகவல்

ஐபோனை அன்லாக் செ்யாமல் குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க முடியும். இதற்கு லாக் ஸ்கிரீனை கீழ் பக்கமாக இழுத்து டெக்ஸ்ட் நோட்டிபிகேஷனை இடது புறமாக ஸ்வைப் செய்தால் பதில் அளிக்க திரை ஒன்று காணப்படும். இவ்வாறு போனை அன்லாக் செய்யாமல் குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க முடியும்.

செயலி

செயலி

மற்ற செயலிகளை பயன்படுத்தும் போது குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க முடியும். இவ்வாறு செய்ய முன்பு செய்ததை போன்று நோட்டிபிகேஷன் பாரை கீழ் பக்கமாக ஸ்வைப் செய்யலாம்.

பேட்டரி

பேட்டரி

ஐபோன் பேட்டரியை எந்த செயலி அதிகமாக பயன்படுத்துகின்றது என்பதை பார்க்க முடியும். இதற்கு Settings >General >Usage>Battery Usage சென்று பார்க்கலாம்.

போட்டோ

போட்டோ

புகைப்படங்களை பார்க்க மெசேஜஸ் செயலி சென்று அங்கு டீடெயில்ஸ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் போதுமானது.

ஆடியோ வீடியோ

ஆடியோ வீடியோ

இரண்டு நிமிடங்களில் தானாக அழிந்து போகும் ஆடியோ க்ளிப் அல்லது வீடியோக்களை அனுப்ப முடியும். இவ்வாறு செய்ய Settings>Messages சென்று audio and video messages ஆப்ஷனை தேர்வு செய்து இரண்டு நிமிடங்களில் தானாக அழிந்து போகமாறு செட் செய்ய வேண்டும்.

லோகேஷன்

லோகேஷன்

நீங்கள் இருக்கும் இடத்தை சுலபமாக தெரிவிக்க மெசேஜின் வலது புறமாக காணப்படும் டீடெயில்ஸ் பட்டனை க்ளிக் செய்து "Send My Location." என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் போதுமானது.

டிராக்

டிராக்

உங்களது குடும்பத்தாருக்கு நீங்கள் இருக்கும் இடத்தை தெரிவிக்க முன்பு செய்ததை போல "Share My Location" என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் போதுமானது.

குறுந்தகவல்

குறுந்தகவல்

டெக்ஸ்ட் மெசேஜ்களுக்கான நோட்டிபிகேஷன்களை ம்யூட் செய்ய முடியும். இவ்வாறு செய்ய மெசேஜிங் ஆப்ஷனிற்கு சென்று "Do Not Disturb." ஆப்ஷனை தேர்வு செய்தால் போதுமானது.

க்ரூப் கான்வெர்சேஷன்

க்ரூப் கான்வெர்சேஷன்

க்ரூப் கான்வெர்சேஷனில் இருந்து வெளியேற டீடெயில்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்து "Leave Conversation." என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் போதுமானது.

பெயர்

பெயர்

க்ரூப் கான்வெர்சேஷனில் க்ரூப் பெயரிட டீடெயில்ஸ் சென்று "Group Name" என்ற ஆப்ஷனை தேர்வு செய்து க்ரூப் பெயரை குறிப்பிடலாம்.

Best Mobiles in India

English summary
Things you didn't know your iPhone could do. Here you will find some things you didn't know your iPhone could do. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X