காற்றின் வேகத்தில் பயணிப்போமா?- அடுத்தக்கட்டத்திற்கு தயாராகும் இந்தியா
இந்தியாவில் 4 ஜி இணைய வேகம் அறிமுகம் செய்யப்பட்டு அனைத்து பகுதியிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2ஜி, 3ஜி, 4ஜி போன்ற இணைய சேவைகள் ஒவ்வொரு காலக்கட்டங்களாக அறிமுகம் செய்யப்பட்டது. காற்றின் வேகத்தில் நாம் பயணிக்க ஆசைப்பட்டால் காற்றோடு பயணிக்கும் பறவைகள் எங்கு போகும் என்ற கேள்விகள் நம் மனதில் எழாமல் இல்லை.

அறிமுகமாகும் 5ஜி
2ஜி சேவையில் எம்எம்எஸ், 3 ஜி சேவையில் வீடியோ கான்பரன்ஸ் என தொடங்கி தற்போதைய 4 ஜி சேவையில் பெரும்பாலான சேவைகளை வீடியோ மூலமாக மேற்கொண்டு வருகிறோம். அதேபோல் அடுத்த தலைமுறையாக 5 ஜி சேவை அறிமுகமாக போகிறது என்று சாதாரணமாக கடந்து விடமுடியாது.

பலமடங்கு இணையவேகம்
அடுத்த தலைமுறைக்கான 5 ஜி சேவையில் இந்தியாவின் தொழில்நுட்பங்கள் பல்வேறு கட்டங்களுக்கு முன்னேறப் போகிறது. தற்போது பயன்படுத்தப்படும் 4 ஜி சேவையை விட பலமடங்கு இணைய வேகம் அதிகரிக்கும். 5 ஜி சேவையானது 28 ஜிகா ஹெட்ஜில் இருந்து 39 ஜிகாஹெட்ஜ் அலைவரிசையில் இயங்க இருக்கிறது. அதாவது இணைய வேகம் 56 mbpsஇல் இருந்து 490 mbps வேகத்திற்கும், பதிவிறக்கம்(Download) 8mbps இல் இருந்து 100 mbps வேகத்திலும் இருக்கும்.

2020 முழுமையாக பயன்பாட்டிற்கு வரும்
இந்த சேவைக்கான சோதனை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தப்பட்டு வருவதன் மூலம் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் முழுமையாக பயன்பாட்டிற்கு வருவது உறுதியாகியுள்ளது.ஆரம்பக்காலக்கட்டத்தில் வீட்டில் உள்ள தொலைக்காட்சிக்கும் ரிமோட்டுக்கும் மட்டுமே சென்சார் பயன்படுத்தப்பட்டது. தற்போது வீட்டில் உள்ள டியூப் லைட், பேன் என பல்வேறு பொருட்களுக்கும் சென்சார் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கமாண்டிங் ஆப்பரேஷன்
இந்நிலையில் 5 ஜி அறிமுகத்தின் மூலம் வீடுகளில் உள்ள பல்வேறு பொருட்களையும் கமாண்டிங் ஆப்பரேஷன் மூலம் இயக்க உள்ளோம். அதேபோல் இந்தியாவில் உபர் போன்ற பல்வேறு நிறுவனங்களும் தானியங்கி வாகனங்கள் அறிமுகப்படுத்த உள்ளன. அதற்கு இணைய வேகம் என்பது முக்கியமான ஒன்று. தற்போதைய 4 ஜி சேவையில் தானியங்கி வாகனங்கள் இயக்குவதில் சவால்கள் இருந்தாலும், 5 ஜி சேவை மூலம் தானியங்கி வாகனங்கள் சர்வசாதாரனமாக இயக்கலாம்.

மருத்துவ முன்னேற்றம்:
லேப்ரோஸ்கோபி, ஆன்ஜியோ போன்ற மருத்துவசிகிச்சைகளும் பல்வேறு கட்டங்களுக்கு முன்னேறி மருத்துவத்திலும் அடுத்தக்கட்டத்தை சந்திக்க உள்ளோம். விரல் நுணியில் ஒவ்வொரு செயல்பாடுகளையும் அதிவேகமாக பயன்படுத்தப்படும் 5 ஜி சேவை ஒவ்வொரு செல்போன்களிலும் இணைப்பதற்கு, பல்வேறு செல்போன் கோபுரங்களை அமைக்க வேண்டும்.

விர்ட்சுவல் ரியாலிட்டி
விர்ட்சுவல் ரியாலிட்டி தொழில் நுட்பங்களும் அடுத்தக்கட்டத்துக்கு சென்று செல்போன் கேம்களும் அதிநவீன முறையில் பயன்படுத்துவோம். பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களும் அடுத்தக்கட்டத்திற்கு பயணிக்கும். கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 ஜி வீடியோ கால் சோதனை இந்தியாவில் நடைபெற்ற செல்போன் மாநாட்டில் செய்யப்பட்டது.

2.o திரைப்படம் நியாபகம் இருக்கிறதா
இந்தியா போன்று வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் 5 ஜி போன்ற இணைய வேகம் அவசியம் என்றாலும். உலகம் என்பது அனைவருக்கும் சமமானது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்து நடித்து வெளியான படத்தில் 2.o என்ற படத்தின் கதைக்கருவானது செல்போன் பயன்பாடுகளால் வெளியாகும் கதிர் வீச்சுகள் மூலம் பறவைகள் அழிந்து வருவதை சுட்டிக்காட்டியிருக்கும். நெதர்லான்ட்டில் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் ஏராளமான பறவை இணங்கள் வேகமாக அழிந்து வருவதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டிருந்தது.

2020-ல் 5 ஜி சேவை உறுதி:
இருப்பினும் 5 ஜி இணைய வேகத்தில், 4 ஜி இணைய வேக கதிர்வீச்சுகளை விட குறைவாக இருக்கும் என தொழில் நுட்ப வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் 2020 ஆம் ஆண்டுக்குள் 5ஜி இந்தியாவிற்கு முழுமையாக வரும் என்பது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications