Home
News

புது மாற்றம்.. Google Pay ஆப்ல பணம் அனுப்ப காலக்கெடு.. யூசர்களுக்கு திடீர் அமல்.. என்னென்ன மாறும்?

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் தவிர்க்க முடியாத சேவையை வழங்கிவரும் கூகுள் பே (Google Pay) ஆப்பில் மூன்று அதிரடி மற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. உங்களது கார்டு முதல் பணம் செலுத்தல் வரையில் இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இதுகுறித்த முழு விவரம் இதோ.

இப்போதெல்லாம், பெட்டி கடைக்கு போனால் கூட கூகுள் பே இருக்கா? என்று கேட்கும் அளவுக்கு அதை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. நாள்தோறும் கோடிக்கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யப்படுவதால், அந்த ஆப்பில் செய்யப்படும் அப்டேட்கள் மற்றும் கட்டுப்பாடுகள் நேரடியாக மாற்றத்தை கொண்டு வருகின்றன.

புது மாற்றம்.. Google Pay ஆப்ல பணம் அனுப்ப காலக்கெடு வந்தாச்சு!

இருப்பினும், கூகுள் பே ஆப் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருப்பதால், அதை பயன்படுத்திய பிறகு வேறு ஆப்களுக்கு மக்கள் செல்வது குறைந்துவிட்டது. அதே நேரத்தில் நாளுக்குநாள் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதை தக்க வைக்க கூகுள் நிறுவனம், இப்போது 3 மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

என்னென்ன மாற்றங்கள் வருகிறது: ஆன்லைன் ஷாப்பிங் (Online Shopping), கார்டு விவரங்களை நிரப்புதல் (Card Details Fill), பிங்கர்பிரிண்ட் (Fingerprint), பேஸ் ஸ்கேன் (Face Scan) மற்றும் கிரெடிட் கார்டு ரிவார்ட்களை (Credit Cards Rewards) பெறுதல் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதை ஒவ்வொன்றாக இப்போது பார்க்கலாம்.

கூகுள் பே பை நவ் பே லேட்டர் அம்சம் (Google Pay Buy Now, Pay Later Feature): ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது, அந்த நேரத்தில் பணத்தை செலுத்தாமல், அதற்கு காலக்கெடு வழங்கப்படுவதும், பிறகு அந்த கெடுவுக்குள் பணத்தை செலுத்துவதும் இப்போது அதிகரித்துவிட்டது. இதை பல்வேறு நிதி நிறுவனங்கள் வழங்குகின்றன.

புது மாற்றம்.. Google Pay ஆப்ல பணம் அனுப்ப காலக்கெடு வந்தாச்சு!

இந்த சேவையே பை நவ் பே லேட்டர் என்று சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அந்த பணத்தை செலுத்திவிட்டால், அதற்கு வட்டியோ அல்லது கட்டணமோ இல்லை என்பதால், இந்த சேவை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட இந்த சேவையை கூகுள் பே நிறுவனம், இனிமேல் வழங்குகிறது.

அஃப்ஃபர்ம் (Affirm) மற்றும் ஜிப் (Zip) உள்ளிட்ட பல்வேறு நிதி நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேவையை வழங்குகிறது. இந்த பை நவ் பே லேட்டர் அம்சமானது, ஆன்லைனில் நீங்கள் பொருட்களை வாங்கிய பிறகு பணம் செலுத்தும் டேப்பை ஓப்பன் செய்யும்போதே அதில் தோன்றும். ஆகவே, அன்றே பணம் செலுத்தலாம் அல்லது இந்த அம்சத்தை பயன்படுத்தி பின்னர் செலுத்தலாம்.

இதற்கு நிதி நிறுவனங்களின் அக்கவுண்ட்டை உங்களது கூகுள் பே அக்கவுண்ட் உடன் இணைத்திருக்க வேண்டும். இந்த சேவை முதலில் அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளது. நிதி நிறுவனங்களின் சேவைகளை அதிகமாக பயன்படுத்தும் இந்தியா போன்ற நாடுகளில் விரைவில் கொண்டுவரப்பட்டால் இது மிகப்பெரும் வரவேற்பு பெறும். மற்ற 2 அம்சங்களும் முதலில் அமெரிக்காவிலேயே வந்துள்ளன.

கிரெடிட் கார்டு ரிவார்ட் அம்சம் (Credit Cards Reward Feature): கிரெடிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்யும்போது, சில கார்டுகளில் டிராவல் ரிவார்ட்களும், இன்னும் சில கார்டுகளில் ஃபுட் ஆர்டர் தொடர்பான ரிவார்டுகளும் கிடைக்கின்றன. இப்படியே, அந்தந்த கார்டுகளுக்கு ஏற்ப ரிவார்ட்கள் கொடுக்கப்படுகின்றன.

இதை இப்போது கூகுள் பே அக்கவுண்ட் மூலமே தெரிந்து கொண்டு, அதை எளிதாக பயன்படுத்தலாம். அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், கேபிட்டல் ஒன் போன்ற கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் குரோம் டெஸ்க்டாப் மூலம் கார்டு விவரங்களை பார்க்கும்போது, ஆட்டோஃபில் டிராப்-டவுனில் இந்த ரிவார்ட்கள் காண்பிக்கப்படும்.

கார்டு விவரங்களை நிரப்புதல் அம்சம் (Card Details Fill Feature): நீங்கள் குரோம் அல்லது ஆப்கள் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் செய்த பிறகு, கூகுள் பே மூலம் பணம் செலுத்தும் வேளையில் உங்களது கார்டு விவரங்கள் கேட்கப்பட்டால், அதை நீங்கள் நிரப்ப வேண்டியது கிடையாது. ஆட்டோபில் மூலம் அது செய்துகொள்ளப்படும்.

ஆனால், கார்டு நம்பர், செக்யூரிட்டி கோட் போன்ற முக்கிய விவரங்கள் இதில் இடம்பெற்றிருப்பதால், ஃபிங்கர்பிரிண்ட் (Fingerprint), பேஸ் ஸ்கேன் (Face Scan) அல்லது பின் (PIN) ஆகியவற்றின் மூலம் நீங்கள் வெரிபிகேஷன் செய்து, அந்த விவரங்களை நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும். இந்த 3 அம்சங்களே அமெரிக்காவில் அமலுக்கு வந்துள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Did You Know Three New Features Of Google Pay For Payment Option And Fill in Card Details Check Out
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X