Just In
- 10 hrs ago
Instagram-ல தினமும் Reels பார்க்குறோம்! ஆனால் இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?
- 10 hrs ago
அட்ராசக்கை! இந்த Oppo போன்லாம் இவ்ளோ கம்மி விலையா? இந்த சலுகைக்கு மேல் வேறென்ன வேணும்?
- 10 hrs ago
தரமான அம்சங்களுடன் ஒரு லேப்டாப் வேண்டுமா? அப்போ இந்த புதிய Acer லேப்டாப் பாருங்க.!
- 11 hrs ago
ஓஹோ! இப்படி செஞ்சா 12 மாதத்திற்கு YouTube Premium இலவசமா? இது தெரியாம போச்சே!
Don't Miss
- News
ராசியில்லாத ராஜா.. உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியில் இருந்து உருட்டி விட்ட கண்டச்சனி,அஷ்டம குரு
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணி அறிவிப்பு.. கேப்டனாக ஹர்திக் நியமனம்
- Movies
அஜித் சார்.. டேட் கூட தெரியாதா?.. ரசிகருக்கு எழுதிய கடித வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
- Automobiles
ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?
- Finance
அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்ய வேண்டும்.. ஆப்பிள், கூகுள்-க்கு பறக்கும் கடிதம்..!
- Lifestyle
ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்தியாவில் புழங்கும் ஜீரோ ரூபாய் நோட்டுகள்.. இதன் மதிப்பே வேற.. எதற்காக இதை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?
மனித வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கியமான மூலப்பொருளாக நம் கரங்களில் இன்று பாதுகாப்பாகப் புழங்கிக்கொண்டிருக்கும் பணம் மற்றும் காசுகளுக்கென்று ஒரு மிகப் பெரிய வரலாறு இருக்கிறது. இந்தியாவில் பணம் உருவாக்கப்பட்ட வரலாறே மிகப் பெரியது. இதன் வரலாற்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், உண்மையில் நீங்கள் பல நூறு ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். அதிலும் உலகளவில் உருவாக்கப்படப் பணத்தின் வரலாறு மற்றும் அதன் பண்டைய மதிப்பு பற்றி அறிந்துகொள்ள நாம் கிமு அல்லது கிபி வரை சொல்லவேண்டியது உள்ளது.

மனித வாழ்வில் வெவ்வேறு விதமான மதிப்பை உருவாகியுள்ள பணம்
இப்படி மனித வாழ்வுடன் மிக நெருக்கமான பந்தத்தை ஏற்படுத்திக்கொண்ட பணத்தின் மதிப்பை எல்லோரும் அறிவார்கள். இந்தியாவில் இப்போது நாம் பல மதிப்பிலான பணம் மற்றும் காசுகளைப் பயன்படுத்தி வருகிறோம். உதாரணத்திற்கு, ஒரு 10 ரூபாய் நோட்டின் மதிப்பு பள்ளி செல்லும் மாணவனுக்குப் பெரியதாய் தோன்றும், ஆனால், அதே 10 ரூபாய் நோட்டின் மதிப்பு பெரியவர்களுக்குப் பற்றாக்குறையாகத் தெரியலாம். கையில் இருக்கும் பணம் என்னவோ ஒன்று தான், ஆனால் ஒவ்வொரு மனித வாழ்விலும் இது வெவ்வேறு விதமான மதிப்பை உருவாக்கியுள்ளது.

கிமு அல்லது கிபி-யை தாண்டும் பணத்தின் வரலாறு
கையில் புழங்கும் ரூபாய் நோட்டுகளின் அச்சுக்கள் எல்லாம் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. ஆனால், இவற்றின் தேவை மற்றும் பயன்பாடு ஒவ்வொரு மனிதனுக்கும் மத்தியில் அதிக வேறுபாட்டைக் கொண்டுள்ளது. பணத்தின் வரலாற்றைப் பற்றி நாம் அறிந்துகொள்ள கிமு அல்லது கிபி வரை சென்று புரட்டிப் பார்க்காமல், ஆனால் அதற்கு நம்மிடம் நேரம் இல்லாதலால், இந்தியாவில் முதன் முதலில் காகித வடிவில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டின் வரலாற்றில் இருந்து ரூபாய் நோட்டின் வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். பிறகு ஜீரோ நோட்டின் வரலாற்றுக்கு நேரடியாகச் செல்வோம்.

இந்தியாவின் முதல் காகித நோட்டு எப்போது அச்சிடப்பட்டது தெரியுமா?
இந்தியாவில் முதல் காகித கரன்சி நோட்டு என்பது 1861 ஆம் ஆண்டில் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. முதன் முதலில் இந்தியாவில் அச்சிடப்பட்ட காகித ரூபாய் நோட்டின் மதிப்பு 10 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் 10 ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்ட காகித ரூபாய் தாள்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில், பல்வேறு மதிப்புகளின் பல நோட்டுகளாக விரிவாகத் துவங்கியது. இது மக்களின் வாழ்க்கையில் அதன் மதிப்பையும் அதிகரித்துக்கொண்டது. அதிகப்படியாக இப்போது 2000 ரூபாய் வரை கரன்ஸி நோட்டுகள் சென்றுள்ளது.

யாராவது உங்களிடம் ஒரு பூஜ்ஜிய ரூபாய் நோட்டைக் கொடுத்தால், என்ன செய்வீர்கள்?
சரி, யாராவது உங்களிடம் ஒரு பூஜ்ஜிய ரூபாய் நோட்டைக் கொடுத்தால், நீங்கள் அதை என்ன செய்வீர்கள்? முதலில் உங்கள் கண்களை விரிவுபடுத்தி ரூபாய் நோட்டில் உள்ள பூஜ்யத்தை உற்றுப் பார்ப்பீர்கள். அல்லது, இந்த ரூபாய் நோட்டில் எதோ தவறாக உள்ளது என்று நினைப்பீர்கள் அல்லது இது மதிப்பற்றது என்றோ அல்லது இது கள்ளநோட்டு என்றோ தானே நினைப்பீர்கள். ஆனால், இந்த பூஜ்ஜியம் பதிவிடப்பட்ட நோட்டுகள் இந்தியாவில் செய்யும் வேலையே வேறு. இதைப் பற்றி நீங்கள் நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது என்பதே உண்மை.
SBI ATM கார்டின் பின் நம்பரை வங்கிக்குச் செல்லாமல் ஆன்லைனில் மாற்றுவது எப்படி? ஈஸி டிப்ஸ் மக்களே..

பூஜ்ஜிய ரூபாய் நோட்டின் பின்னணியில் உள்ள மிகப் பெரிய நோக்கம் என்ன தெரியுமா?
உங்கள் கையில் இந்த ஜீரோ ரூபாய் நோட்டுகள் கிடைத்தால், அதை இனி பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். தினமும் உங்கள் கைகளில் கிடைக்கும் 10, 20, 50, 100 மற்றும் அதிக மதிப்புள்ள 500 அல்லது 2000 ரூபாய் நோட்டுகள் போன்றதில்லை இந்த ஜீரோ ரூபாய் நோட்டுகள். இந்தியாவில் பூஜ்ஜிய ரூபாய் நோட்டுக்கென்று ஒரு மிகப் பெரிய நோக்கம் இருக்கிறது. அது வெறும் காகிதம் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும் பொது உண்மையில் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மதிப்பற்றது என்று நீங்கள் கருதும் இந்த ஜீரோ ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் உள்ள ஊழல் மற்றும் அநியாயத்தை எதிர்த்து நிற்கிறது.

50 ரூபாய் நோட்டுகளை ஒத்திருக்கும் ஜீரோ ரூபாய் நோட்டுகள்
இந்தியாவில் பூஜ்ஜிய ரூபாய் நோட்டு என்பது லஞ்சம் மற்றும் ஒட்டுமொத்த முறையான அரசியல் ஊழலைக் கட்டுப்படுத்தும் வழிமுறையாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளாகச் செயல்படுகிறது. இந்தியாவின் வழக்கமான 50 ரூபாய் நோட்டுகளை ஒத்திருக்கும் வகையில் இந்த ஜீரோ ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகிறது. இந்த ஜீரோ ரூபாய் நோட்டுகள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் மக்கள் மத்தியில் விநியோகிக்கப்படுகின்றன. உண்மையில், இவை இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) அச்சிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஜீரோ ரூபாய் நோட்டுகளை இந்தியாவில் யார் அச்சிடுகிறார்கள்?
அப்படியானால், இதை யார் அச்சிடுகிறார்கள் என்று தானே கேட்கிறீர்கள். இந்த ஜீரோ ரூபாய் நோட்டுகளை ஐந்து தூண், அதாவது ஃபைவ் பில்லர் எனப்படும் அரசு சாரா அமைப்பு தான் தொடர்ந்து அச்சிட்டு மக்கள் மத்தியில் இதைப் புழக்கத்திற்கு வெளியிட்டு வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான இந்த ஃபைவ் பில்லர், லஞ்சம் வாங்க மறுத்ததைப் பதிவு செய்வதற்காக 2007ல் பூஜ்ஜிய ரூபாய் நோட்டை உருவாக்கியது. இது 50 ரூபாய் நோட்டுக்கு மிகவும் ஒத்ததாகத் தோன்றினாலும், அதில் எழுதப்பட்டுள்ள எழுத்துகள் ஊழலுக்கு எதிரானது.

லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன்
ஜீரோ ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ள ஊழலுக்கு எதிரான வாசகங்கள், "எல்லா நிலைகளிலும் ஊழலை ஒழிப்போம்" மற்றும் "லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன்" என்று இது குறிப்பிடுகிறது. சட்டப்பூர்வமான சில இலவச சேவைகளுக்குக் கூட லஞ்சம் கொடுக்கக் கோரப்பட்ட இந்தியக் குடிமக்கள் பயன்படுத்தும் வகையில் இந்த நோட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, டிரைவர் உரிமம் பெறுவது போன்ற வழக்கமான அரசாங்க பரிவர்த்தனைகளில் சட்டவிரோத கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுபவர்களுக்கு இது பயன்படுத்தப்பட்டது.

ஜீரோ ரூபாய் நோட்டை வைத்து உண்மையில் நடந்த கதை பற்றி தெரியுமா உங்களுக்கு?
"அதிகாரத்தில் உள்ளவர்களுடன் எதிர்கொள்ளும் சந்திப்பை அச்சமின்றி எந்தவொரு மனிதனும் ஊழலை வேண்டாம் என்று கூறுவதற்கு இந்த ஜீரோ ரூபாய் நோட்டுகள் ஒரு வழியாகும்" என்று ஃபைவ் பில்லர் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியுள்ளது. ஃபைவ் பில்லர் தலைவர் விஜய் ஆனந்த், இந்த ஜீரோ ரூபாய் நோட்டின் செயல்திறன் குறித்தும் இந்த திட்டம் குறித்தும் திருப்தி அடைவதாகத் தெரிவித்துள்ளார். உதாரணத்திற்கு, பூஜ்ஜிய ரூபாய் நோட்டை வைத்து உண்மையில் நடந்த கதை ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுனரிடம் லஞ்சம் கேட்ட அதிகாரிக்கு 'ஜீரோ ரூபாய் நோட்டு'
"மக்கள் இந்த ரூபாய் நோட்டுகளை ஏற்கனவே பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர், அது இந்தியாவில் அற்புதமாய் வேலை செய்கிறது. ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரை நள்ளிரவில் ஒரு போலீஸ்காரர் பிடித்துவிட்டார், அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் "கவனித்தால்" ஆட்டோ ரிக்ஷா டிரைவரை விடுவிப்பதாக அந்த அதிகாரி கூறியுள்ளார். அந்த ஆட்டோ ஓட்டுநர் அவரிடம் ஜீரோ ரூபாய் நோட்டைக் கொடுத்திருக்கிறார். போலீஸ்காரர் அதிர்ச்சியடைந்தார்.

அடுத்து என்ன நடந்தது தெரியுமா? இது தான் ஜீரோ ரூபாய் நோட்டின் பவரா?
அடுத்து என்ன நடந்தது என்பதை நீங்கள் நிச்சயமாக நம்பமாட்டீர்கள். அந்த ஜீரோ ரூபாய் நோட்டை பார்த்த அதிகாரி புன்னகைத்துக் கொண்டே அந்த ஆட்டோ ஓட்டுனரை விடுவித்துவிட்டார். அந்நேரத்தில், அந்த ஆட்டோ ஓட்டுநர் ஊழலை எதிர்த்து ஜீரோ ரூபாய் நோட்டை அதிகாரியிடம் கொடுத்து தனது எதிர்ப்பை தெரிவித்ததோடு. அங்கிருந்து நியாயத்துடன் தனது வழியில் அமைதியாக சென்றிருக்கிறார். இந்த ரூபாய் நோட்டுகளின் நோக்கம் லஞ்சம் வேண்டாம் என்று மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாகும்," அதை இது அற்புதமாகச் செயல்படுத்தி வருகிறது.

உங்கள் கையில் ஒரு ஜீரோ ரூபாய் நோட்டு கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
இப்போது இந்த ஜீரோ ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் புழக்கத்தில் உள்ளது. இதுவரை லட்சக்கணக்கான பூஜ்ஜிய ரூபாய் நோட்டுகளை ஃபைவ் பில்லர் அமைப்பு அச்சிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஊழல், லஞ்சம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள் மற்றும் பிற பொது இடங்களில் தன்னார்வலர்களால் இந்த ஜீரோ ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நோட்டில் உள்ள தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் மூலமாக ஊழலை புகார் செய்யலாம். ஊழலை ஒழிக்க உங்கள் கையில் ஒரு ஜீரோ ரூபாய் நோட்டு கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086