பட்ஜெட் விலையில் 42 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கும் வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டம் பற்றி தெரியுமா?
வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களில் சில கூடுதல் சலுகைகளையும் வழங்குகிறது. எனவே இதன் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

அதேபோல் வோடபோன் ஐடியா வழங்கும் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங்கே ஆல் நைட் போன்ற சலுகைகளை மற்ற சில தனியார் நிறுவனங்கள் வழங்குவதில்லை. மேலும் வோடபோன் ஐடியா நிறுவனம் பட்ஜெட் விலையில் 42 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ஒரு அருமையான திட்டத்தை வைத்துள்ளது. இப்போது அந்த திட்டத்தைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரு.399 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 42 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம். இதுதவிர வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங்கே ஆல் நைட் மறறும் Vi Movies & TV Classic அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. கண்டிப்பாக வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு பயனுள்ள திட்டம் ஆகும்.

வோடபோன் ஐடியா ரூ.409 ப்ரீபெய்ட் திட்டம்
அதிக டேட்டாவுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டத்தை நீங்கள்விரும்பினால் ரூ.409 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. அதாவது ரூ.409 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் , பிங்கே ஆல் நைட் மறறும் Vi Movies & TV Classic அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

சிறிது டேட்டாவுடன் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை தேடும் வோடபோன் ஐடியா பயனர்களுக்கு ரூ.459 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதாவது இந்த வோடபோன் ஐடியா ரூ.459 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், 1000 எஸ்எம்எஸ், 6ஜிபி மொத்த டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக இந்த ரூ.459 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

வோடபோன் நிறுவனத்தின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டமும் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதன்படி இந்த வோடபோன் ஐடியா ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இதுதவிர வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங்கே ஆல் நைட்மறறும் Vi Movies & TV Classic அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது 5ஜி சோதனையை மேற்கொண்டு வருகிறது. எனவே இந்நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை
இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications