Just In
- 38 min ago
உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!
- 1 hr ago
கூகுளையே தூக்கிச் சாப்பிடும் 'ChatGPT' என்றால் என்ன? பள்ளி, கல்லூரிகளில் தடை செய்வது ஏன்?
- 1 hr ago
வாட்ஸ்அப் செயலியில் லைவ் லொகேஷன் ஷேர் செய்ய சிம்பிள் டிப்ஸ்.!
- 2 hrs ago
Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!
Don't Miss
- Sports
"இவ்வளவு நாளா இது தெரியலையே.. இஷான் கிஷானுக்கு நிறைய விஷயம் தெரியல".. கவுதம் கம்பீர் கடும் விளாசல்!
- Lifestyle
உங்க குடலில் இந்த பிரச்சினைகள் இருந்தால் உங்களால் உடலுறவில் சரியாக செயல்பட முடியாதாம்...பார்த்து நடந்துக்கோங்க
- Movies
தளபதி 67 ப்ரோமோவில் சிம்பு.. அப்போ அவரு தான் மெயின் வில்லனா?: எகிறும் எதிர்பார்ப்பு... உண்மை என்ன?
- News
பாகிஸ்தானில் இடைத்தேர்தல்.. 33 தொகுதியிலும் நானே போட்டி.. இம்ரான் கான் தடாலடி முடிவு
- Finance
ஹிண்டர்ன்பர்க் சரியான ஆய்வு செய்யவே இல்ல.. எல்லாம் தவறு.. அதானி குழுமம் ஒரே போடு..!
- Automobiles
டாடாவுக்கு எதிராக மிக பெரிய திட்டம்.. மாருதி சுஸுகியின் பார்வை இந்த பக்கமும் திரும்பிடுச்சா!!!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
OTP பெறுவதில் சிக்கலா?- காரணம் இதுதான்: கடுமையாக்கப்பட்ட புதிய விதிகள்!
இப்போது வரும் பல தொழில்நுட்பங்கள் நமக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பங்களை மிகவும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். வங்கி பரிவர்த்தனை, ஆன்லைன் ஆர்டர்கள், டிக்கெட் முன்பதிவு உட்பட பல்வேறு தேவைகளுக்கு ஓடிபி சேவை என்பது பிரதானமாக்கப்பட்டு வருகிறது. ஓடிபி என்பது மிக பிரதானமாக்கப்பட்ட விஷயமாகும் அதேசமயத்தில் அதை கவனமாக கையாள வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. கடந்த திங்கட்கிழமை முதல் இகாமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து ஓடிபி பெறுவதில் சிக்கலை சந்தித்திருந்தால் அதற்கு காரணம் ஸ்பேம் செய்திகளுக்கான புதிய விதிகளை டிராய் இடைநிறுத்தியதுதான்.

இகாமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து ஓடிபி எண்ணை பெறுவதில் பலர் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் ஸ்பேம் மெசேஜ்களுக்கான புதிய விதிகளை டிராய் இடைநிறுத்தியுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் ரிசர்வ் வங்கி புதிய விதிகளை ஒத்திவைக்க விரும்புவதால் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டாளர்கள் ஏழுநாட்களுக்கு மட்டும் நிறுத்தி வைத்துள்ளது என்பது தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கும் இதுகுறித்த நினைவூட்டல்களை முன்னதாகவே அனுப்பியதால் வங்கிகள் சங்கம் மற்றும் ஆர்பிஐ கோரிக்கையை ஏற்க மறுத்தது. இருப்பினும் கோரிக்கைகளை பரிசீலித்து புதிய விதிமுறைகளை ஏழுநாட்களுக்கு தாமதப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் சிரமத்திற்குள்ளாவது தொடர்பான புகார்களை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம், திங்கள் கிழமை முதல் கொண்டுவந்த எஸ்எம்எஸ் ஸ்கிராப்பிங்கை ஏழு நாட்களுக்கு தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளோம் என டிராய் மூத்த அதிகாரி ETயிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
புதிய டிராய் எஸ்எம்எஸ் விதிமுறைகள் என்ன?

இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தில்லி உயர்நீதிமன்றம் டிராய் இடம் புதிய தொலைத் தொடர்பு வர்த்தக வாடிக்கையாளர்கள் முன்னுரிமை ஒழுங்குமுறையை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டது. வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதற்கு முன்பு அனைத்து மெசேஜ்களும் சரிபார்க்க வேண்டும் என்றும் அனைத்தும் டிராய் விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பம் டிஎல்டி தளத்திற்கு பதிவு செய்யப்பட்டுன என்றும் டிராய் கூறியது. இவை சரிபார்ப்பு குறியீடு மற்றும் அனைத்து வகையான ஓடிபி எண்ணுக்கு உள்ளடக்கத்தியது எனவும் தெரிவித்தது.
வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதற்கு முன்பு அனைத்து செய்திகளையும் சரிபார்க்க வேண்டும் என்றும், குறுஞ்செய்திகள் அனுப்பும் நிறுவனங்கள் என்ன வகையான குறுஞ்செய்திகளை அனுப்பும் என்பது குறித்த தகவலை பதிவு செய்ய வேண்டும் என்பதை பதிவு செய்ய வேண்டும் எனவும் இது அறிவிப்புகள், சரிபார்ப்புக் குறியீடு மற்றும் அனைத்து வகையான OTP-ஐ உள்ளடக்கியது எனவும் தெரிவிக்கப்பட்டது.
டிராய்-ன் விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பம் டிஎல்டி தளம் என்றால் என்ன?

டிஸ்டிரிப்ட் லெட்ஜர் டெக்னாலஜி (டி.எல்.டி) என்பது ஒரு பிளாக்செயின் அமைப்பாகும், அங்கு டெலிமார்க்கெட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு செய்திகளை அனுப்புவதற்கு முன்பு தங்களை பதிவு செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது. மார்க்கெட்டிங் நிறுவனங்களின் ஸ்பேம் மெசேஜ்களையும் அழைப்புகளையும் கட்டுப்படுத்த இது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பங்கேற்பாளர்கள் அனைவராலும் செய்யப்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளையும் டி.எல்.டி இயங்குதளம் பதிவு செய்கிறது. வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு செய்தியையும் அனுப்புவதற்கு முன்பு அனைத்து டெலிமார்க்கெட்டர்களும் ஒரே தளத்தில் பதிவு செய்வது முக்கியம் என கட்டுப்பாட்டாளர் கூறினார்.
பல ஆபரேட்டர்கள் ஒரே தொழில்நுட்பத்தை தங்கள் தளங்களில் பதிவு செய்துள்ளனர் செயல்படுத்துகின்றனர். இது அதிக வெளிப்படைத்தன்மையை வழங்குகிறது, மெசேஜ்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் குறைக்கப்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சரிபார்த்து வணிக நிறுவனங்கள் தாங்கள் குறிப்பிட்ட எண்ணில் இருந்துதான் குறிஞ்செய்திகள் அனுப்பப்படுகிறதா என கண்டறியமுடியும்.
புதிய கட்டுப்பாடு கடந்த திங்கள் கிழமைமுதல் செயல்படுத்தப்பட்டது, இருப்பினும் மெசேஜ்கள், ஓடிபி மற்றும் பிற அறிவிப்புகளை பெறுவதில் மக்கள் சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கினர். நிகர வங்கி, ரயில் டிக்கெட் முன்பதிவு, ஆதார் இயக்கப்பட்ட பரிவர்த்தனைகள், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு தங்களை பதிவு செய்தல் போன்ற சேவைகளில் சிக்கலை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை முதல் பணப்பரிமாற்றம், இணையத்தில் ஷாப்பிங் செய்துவிட்டு ஓடிபிக்கும் காத்திருக்கும் போது சிக்கல் ஏற்பட்டிருக்கும். காரணம் டிராய் விதித்த புதிய விதிமுறைகள்தான். வணிக ரீதியாக குறுஞ்செய்திகள் மட்டுமின்றி தனிப்பட்ட முறையில் அனுப்பும் பெறும் குறுஞ்செய்திகள் உட்பட 100 கோடி குறுஞ்செய்திகள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. இதில் ஓடிபி, விளம்பர குறுஞ்செய்திகள், மோசடி குறுஞ்செய்திகளும் அடங்கும்.
பயனர்கள் இதுகுறித்து பலமுறை புகார்கள் தெரிவித்தனர். 2018 முதலே டிராய் ஒழுங்குமுறையை அமல்படுத்தியது, வணிகரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பும் நிறுவனங்கள், தாங்கள் குறுஞ்செய்தி அனுப்பும் எண் மற்றும் எவ்விதமான குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகிறது உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தது. இந்தநிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் டிசிசிசிபிஆர் முறையை தீவிரமாக்கும்படி உத்தரவிட்டது.
டிராய்., வணிக ரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பும் நிறுவனங்கள் குறித்த தகவலை உடனடியாக பதிவு செய்யும்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிப்பு அனுப்பியது. அப்படி பதிவு செய்யாத நிறுவனங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை தடை செய்யப்பட்டன. இந்த முறைகள் ஏழுநாட்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதற்குள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறுஞ்செய்தி அனுப்பும் எண் மற்றும் எவ்வகையான குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் போன்ற தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
எஸ்எம்எஸ் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி
உங்கள் வங்கி கணக்கு இருப்பை கட்டணமில்லா எண் மூலமாக சரிபார்க்கவும், உங்கள் வங்கியின் விண்ணப்பத்தையும், அனைத்து நடவடிக்கைகளையும் சரிபார்க்கலாம். மேலும் விவரங்களை சரிபார்க்க உங்கள் வங்கியை அணுகலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470