ஒய்எஸ்எம்எஸ் தொழில்நுட்பம் தான் புல்வாமா தாக்குதலுக்கு முக்கியகாரணமா?

இது செல்போன் கோபுரங்களின் உதவியின்றியே மொபைல்போன்கள் மூலம் தகவல்களை பரிமாற்றிக் கொள்வதற்கான நுட்பமாகஉருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

|

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய, தற்கொலைத் தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம்
தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

ஒய்எஸ்எம்எஸ் தொழில்நுட்பம் தான் புல்வாமா தாக்குதலுக்கு முக்கிய காரணமா?

இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு திட்டமிட்ட சதிகாரர்கள் தங்கள் தகவல் பரிமாற்றங்களை உளவுத்துறை இடைமறித்துக் கேட்க முடியாத வகையில் நூதனமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

 மிகஉயர் அதிர்வெண் ரேடியோ

மிகஉயர் அதிர்வெண் ரேடியோ

குறிப்பாக மொபைல் போன்களையும், மிகஉயர் அதிர்வெண் ரேடியோ செட்டுகளையும் இணைந்து தகவல் தொடர்புக்கு பயன்படுத்தும் நுட்பம், நியூயார்க்கில் 2012ஆம் ஆண்டில் சாண்டி சூறாவளி தாக்குதலின்போது மீட்புப் பணிகளுக்காக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செல்போன் கோபுரங்களின் உதவியின்றி...

செல்போன் கோபுரங்களின் உதவியின்றி...

இது செல்போன் கோபுரங்களின் உதவியின்றியே மொபைல்போன்கள் மூலம் தகவல்களை பரிமாற்றிக் கொள்வதற்கான நுட்பமாக
உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தொழில்நுட்பத்தை இப்போது எல்லை எல்லை கட்டுப்பாட்டுக்கோட்டின்
இருபுறமும் உள்ள தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை ஏமாற்றி ஊடுருவல், நாசவேலைகளுக்கு திட்டமிடுவதற்கு
பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

சஜ்ஜத் அகமது

சஜ்ஜத் அகமது

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சஜ்ஜத் அகமது என்ற பாகிஸ்தான் தீவிரவாதி ராணுவத்திடம் உயிரோடு பிடிபட்டபோது ஸ்மார்ட்போன்களையும்,ரேடியோ செட்டுகளையும் இணைந்து எஸ்எம்எஸ் உள்ளிட்டவற்றை அனுப்பும் முறை குறித்து தெளிவாக தெரிவித்துள்ளான்.

ஒரே நேர்கோட்டில்...

ஒரே நேர்கோட்டில்...

மேலும் இந்த வகை நுட்பத்தை பயன்படுத்தும்போது, தொடர்பு கொள்ளும் இரு கருவிகளும் ஒரே நேர்கோட்டில் வைத்து தான்
பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. பின்பு தீவிரவாதிகள் இந்த நூதன முறையை கையாள்வதை கண்டுபிடித்த பிறகு, அத்தகையை
தகவல் தொடர்புகளை இடைமறிப்பதற்கு உரிய முறைகள் பாதுகாப்புத்துறையால் உருவாக்கப்பட்டாலும்,அது பெருமளவுக்கு பயனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பியர்-டூ-பியர் வகை

பியர்-டூ-பியர் வகை

ஆகவே தான் மொபைல்போன் தகவல் பரிமாற்றங்கள் கண்காணிக்கப்படுவதையும் மீறி புல்வாமா தாக்குதல் சதிகாரர்கள், தகவல்
தொடர்புகொள்வதற்கு இம்முறையை பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்காக ஒய்எஸ்எம்எஸ் (YSMS) எனப்படும் பியர்-டூ-பியர் வகை மென்பொருள் சேவையை பயன்படுத்தியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது

Best Mobiles in India

English summary
Did handlers use peer-to-peer software service to contact Pulwama bomber : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X