இந்தியர்கள் எல்லாம் முட்டாள்கள்: சர்ச்சையை கிளப்பும் ஐன்ஸ்டீன் டைரி.!

ஆனால் அந்த நோய் ஆல்பர்ட் ஐன்ஸ்டினையும் விட்டு வைக்கவில்லையோ எனச் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அவருடைய நாட்குறிப்புகள் அமைந்துள்ளன.

|

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இயற்பியல் அறிஞராகத் திகழ்ந்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின். இயற்பியல், கணிதவியல், அணு அறிவியல் போன்ற பல துறைகளின் பயன்பாட்டுக்குத் தேவையான அடிப்படைக் கோட்பாடுகளை உருவாக்கியவர் இவர்.

இந்தியர்கள் எல்லாம் முட்டாள்கள்: சர்ச்சையை கிளப்பும் ஐன்ஸ்டீன் டைரி.!

அறிவியல் சிந்தனைகளால் மட்டுமின்றி உலகம் தழுவிய மனிதநேயச் சிந்தனைகளாலும் இவர் புகழ்ப்பெற்று விளங்கினார். 1946 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஒரு கல்லூரியில் கருப்பின மாணவர்களுக்கான முதல் பட்டமளிப்பு விழாவில் பேசிய இவர் நிறவெறிக்கு எதிரான தன்னுடைய கண்டனக் குரலை ஓங்கி ஒலித்தார். " நிறவெறி என்பது வெள்ளையின மக்களின் நோய் " என வர்ணித்தார். ஆனால் அந்த நோய் ஆல்பர்ட் ஐன்ஸ்டினையும் விட்டு வைக்கவில்லையோ எனச் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அவருடைய நாட்குறிப்புகள் அமைந்துள்ளன.

ஐன்ஸ்டின் எழுதிய நாட்குறிப்புகள்.!
ஐன்ஸ்டின் ஆய்வுத் திட்ட இயக்குநரும் மூத்த பதிப்பாளருமான ஜீவ் ரோசென்கிரான்ஸ் (Ze'ev Rosenkranz) தொகுத்துள்ள "ஜன்ஸ்டின் பயணக் குறிப்புகள் ( The Travel Diaries of Albert Einstein) " என்னும் நூல் பல விவாதங்களை எழுப்பியுள்ளன. ஆசிய நாட்டினரைப் பற்றிய ஜன்ஸ்டினின் மதிப்பீடுகள் அவ்வளவு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக அமையவில்லை. குறிப்பாக, இந்தியா, இலங்கை, சீனா மற்றும் ஜப்பான் நாட்டவரைப் பற்றிய ஜன்ஸ்டினுடைய கருத்துக்கள் அவருடைய குறுகிய மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

ஜன்ஸ்டின் மேற்கொண்ட பயணமும், பயணக் குறிப்புகளும்
ஆல்பர்ட் ஐன்ஸ்டின் 1920 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட பயணங்களின் போது எழுதப்பட்ட குறிப்புகள் இவை. குறிப்பாக, 1922 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல், 1923 ஆம் ஆண்டு மார்ச் வரையிலான காலகட்டத்தில் இவர் மேற்கொண்ட பயணத்தின் போது எழுதப்பட்டவை இந்த நாட்குறிப்புகள். இப்பயணத்தின் போது பாலஸ்தீனம் உட்பட ஆசிய நாடுகள் பலவற்றுக்கும் ஸ்பெய்ன் நாட்டுக்கும் சென்று வந்தார்.

இந்தியர்களைப் பற்றிய ஐன்ஸ்டினுடைய குறிப்பு.!
இந்தியர்களைப் பற்றிய இவருடைய கணிப்பு மெச்சத் தகுந்த வகையில் இல்லை. "இந்தியர்கள் உயிரியில் ரீதியாகவே தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். அவர்களுடைய சூழல், அவர்களை முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ ஒரு 15 நிமிடங்களுக்கு மேலாகக் கூட முழுமையாகச் சிந்திக்க விடுவதில்லை." என ஜன்ஸ்டின் இந்தியர்களைப் பற்றி மதிப்பிட்டுள்ளார்.

"ஐன்ஸ்டினுடைய இக்கருத்துக்கள் அவர் மீது வைக்கப்பட்டிருந்த உயர்ந்த மதிப்பீட்டைச் சிதைக்கும் வகையில் உள்ளன" என்று த கார்டியன் (The Guardian) ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் இந்நூலைத் தொகுத்த பதிப்பாளர், ஜீவ் ரோசென்கிரான்ஸ். இக்குறிப்புகள், ஜன்ஸ்டின் கொண்டிருந்த இனரீதியான வெறுப்புணர்வைக் வெளிப்படுத்துபவையாக உள்ளன எனவும் அவர் கருதுகிறார்.

சீனர்களைப் பற்றிய ஐன்ஸ்டினுடைய மதிப்பீடு.!
சீனாவைப் பற்றிய அவருடைய மதிப்பீட்டைக் கேட்டால் பெண்ணியவாதிகள் (Feminists) போர்க்கொடி உயர்த்திவிடுவர். " சீனாவில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறைந்த அளவே வேறுபாடுகள் உள்ளன. ஆண்களைக் கவர்ந்து இழுக்கக் கூடிய அளவுக்கு சீனப் பெண்களிடம் எதுவுமில்லை. இருந்தும் தங்களுடைய வாரிசுகளைப் பெற்றுத்தர சீனப் பெண்களை சீன ஆண்கள் எப்படி அனுமதிக்கின்றனர் எனத் தெரியவில்லை. இப்படியான சீனர்கள் பிற இனத்தவரைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறப் போகிறார்கள் என நினைக்கவே வருத்தமாக உள்ளது. " என ஐன்ஸ்டின் தன்னுடைய நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். "சீனர்கள் சாப்பிடும்பொழுது பெரும்பாலும் உட்கார்ந்து சாப்பிடுவதில்லை. ஆனால் சாப்பிடுவதை வெளியயேற்ற இலைகள் அடர்ந்த மரங்களுக்கு இடையே குந்துகின்றனர்." என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையைப் பற்றிய குறிப்புகள்.!
"மிகவும் அழுக்கடைந்த நிலையில், மிகவும் தரமற்ற இருப்பிடச் சூழலில் வாழ்கின்றனர். குறைவாக உழைத்து, குறைவான தேவைகளைக் கொண்டு , மிகக் குறைந்த வருமானத்தில் வாழ்கின்றனர்." இலங்கைக்குச் சென்ற பொழுது, தன் கண்ணில் கண்ட இலங்கை மக்களைக் கண்ட ஜன்ஸ்டினுடைய கருத்து இது.

ஜப்பானியர்கள் குறித்த கருத்து.!
ஜப்பானியர்கள் குறித்து உயர்வான எண்ணம் கொண்டிருந்தாலும் அங்கும் கொக்கியைப் போட்டுள்ளார் ஐன்ஸ்டின். " ஜப்பானியர்கள் ஆடம்பரமில்லாமல், நாகரிகம் மிகுந்தவர்களாகவும், உழைப்பு மிக்கவர்களாகவும் அனைவரும் விரும்பக் கூடிய வகையிலும் உள்ளனர். ஆனால் அந்நாட்டுக்கான அறிவுசார் தேவை ஜப்பானியர்களின் கலைத்திறமையைக் காட்டிலும் பலவீனமாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டின் ஒர் இனவாதியா?
இவையெல்லாம் அவருடைய தொடக்ககால எண்ணங்களாக இருந்திருக்கலாம். யூத இனத்தைச் சேர்ந்த ஐன்ஸ்டின் 1879 ஆம் ஆண்டு ஜொ்மனியில் பிறந்தார். பள்ளிப் படிப்பை ஜெர்மனியிலும், கல்லூிப் படிப்பை சுவிட்சர்லாந்திலும் பயின்றார். 1955 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இறந்தார். 1921 ஆம் ஆண்டு இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்றார். ஹிட்லரின் இனவெறியின் காரணமாக ஜொ்மனியை விட்டு வெளியேறியவர். மிகச் சிறந்த அறிவியல் அறிஞராக இருந்தும், சுவிட்சர்லாந்து அமெரிக்கா எனப் பல நாடுகளில் குடியுரிமையைப் பெற்றிருந்தும் தனக்கென சொந்த நாடு இல்லாததால் ஒரு கட்டத்தில் தன்னை அகதியைப் போல உணர்ந்தார் ஜன்ஸ்டின். எனவே, நிறம், இனம், பாலினம், குறித்த 1921 ஆம் ஆண்டைய ஐன்ஸ்டினுடைய சிந்தனைகள் பின்னாட்களில் வெகுவாக மாற்றம் அடைந்திருக்கக் கூடும். அதனால்தான் அக்காலத்தைய அவருடைய நாட்குறிப்புகளை அவர் பொதுவெளியில் வெளியிடவில்லை.

இருந்தாலும் கொஞ்சம் வருத்தம்தான்.!
இருந்தாலும், இனம். மொழி, நாடுகள் என எல்லைகளைக் கடந்து உலக மக்கள் அனைவராலும் மதிக்கப்படுகின்ற ஒரு நபர், உலக மக்களினம் குறித்து, குறிப்பாக ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் வசிப்போர் குறித்து இனக் கண்ணோட்டத்தில் (Racism) அமைந்த எண்ணங்களைக் கொண்டிருந்தார் என்பதை அவருடைய நாட்குறிப்புகள் மூலம் அறிய வரும்பொழுது சற்று வருத்தமாகத்தான் உள்ளது.

Best Mobiles in India

English summary
Did Einstein believe Indians were stupid? His diaries suggest so. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X