முழுதும் வைரம் பதிக்கப்பட்ட விமானம்! வைரல் போட்டோவின் கதை...

  ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விமானம் ஒன்றின் புகைப்படம் இணையதளத்தில் உள்ள பலரை ஈர்த்தது மட்டுமின்றி குழப்பமடையவும் செய்துள்ளது. சமூகவலைதளங்களில் வேகமாக வைரலாகி வரும் அந்த புகைப்படத்தில், முழுவதும் வைரம் பதிக்கப்பட்ட எமிரேட்ஸ் விமானம் ஒன்று, பயணத்திற்கு தயாராக இருப்பது போல ஓடுதளத்தில் நிற்பது காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமானது என்னவெனில், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்-ன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளதால், நெட்டிசன்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இந்த அலங்கரிக்கப்பட்டுள்ள விமானம் வெறும் புகைப்படம் தான், உண்மையல்ல.

  முழுதும் வைரம் பதிக்கப்பட்ட விமானம்! வைரல் போட்டோவின் கதை...


  " எமிரேட்ஸ் Bling 777 உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். சாரா சகீல் உருவாக்கிய புகைப்படம்" என டிவிட்டர் பதிவில் கூறியுள்ள விமான நிறுவனம் இது வெறும் புகைப்படம் தான் உறுதிபடுத்தியுள்ளது.


  சாரா சகீல் எனும் கலைஞரால் முதலில் இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது. 4.8 லட்சம் பின்தொடர்பவர்கள் இருக்கும் அவரின் இன்ஸ்டா பக்கம் தனில், சாதாரணமானவற்றை மின்னும் மற்றும் ஒளிரும் வகையில் மாற்றியுள்ள கண்கவர் புகைப்படங்கள் நிரம்பியுள்ளன.


  டிசம்பர் 4 அன்று சாரா இந்த விமானத்தின் புகைப்படத்தை பதிவிட்ட நிலையில், இதுவரை 54000 லைக்குகள் பெற்று அசத்தியுள்ளது. இதன் மூலம் அவரின் பாகிஸ்தான்-மிலன் விமான பயணத்திலும் மேம்பட்ட டிக்கெட் பெற்றார்.


  இவரின் புகைப்படத்தை பெரிதும் விரும்பிய எமிரேட்ஸ் நிறுவனம், வேறு எதுவும் செய்யவில்லை எனினும், படத்தை டிவீட் செய்தனர். செவ்வாய்கிழமையில் இருந்து இதுவரை அந்த டிவீட் 12000க்கு மேற்பட்ட லைக்குகள், 4000க்கு மேற்பட்ட ரீடிவீட்கள் பெற்றுள்ளது.

  இந்த புகைப்படத்தை பார்த்த மக்களால் அமைதியாகவே இருக்க முடியவில்லை. வைர விமானத்தைப் பற்றிய தங்களது கருத்துகளை தெரிவித்து சமூகவலைதளத்தை தெறிக்கவிடுகின்றனர்.

  View this post on Instagram

  Waiting for my Ride 💎 . . So Ladies & Gentlemen , I am officially flying to #milan to fall in love with #art #culture #italy to witness the love #glamourtalentawards has to offer ! I have to remind myself & all of you again and again, This all happened cause some of you prayed & some sent love 💕 to the universe & God just had to make it happen!! Just an ordinary big eyed - hopeful artist trying to live the best out of the world has to offer! Love you and thank you!!! Can’t wait to share everything with you all! . . . P.s I got a freaking upgrade to #milano !!!! . . . #art #artwork #collageart #artist #vision #fly #high #flying #godisgreat #pink #clouds #hope #lovemyjob #plane #emirates #flyhigh #arte #crystalart #crystalartwork #travel #travelphotography #blog

  A post shared by Sara Shakeel (@sarashakeel) on

  "இது உண்மையா" என ஒருவர் கேட்கிறார்."இது உண்மையாகவே பறந்ததா அல்லது சிறிய அளவிலான மாதிரியா அல்லது கணிணி மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படமா" என மற்றொருவர் ஆச்சர்யப்படுகிறார். "இயற்பியல் மற்றும் ஏரோடைனமிக்ஸ் உடன் விளையாடுகிறீர்களா" என கேட்கிறார் ஒருவர். மற்றொருவரோ "அர்த்தமற்றது மற்றும் பகட்டானது, இருக்கைகளை புதுப்பித்து வசதியானதாக வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்" என்கிறார். பெரும்பாலானோர், இது அழகானது, அற்புதமானது என புகழ்ந்து தள்ளுகின்றனர்.

  English summary
  Diamond studded’ plane wows Internet. Here’s the story behind viral photo: Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more