இந்த ஐபோன் 6 விலை 22 கோடி
விலை உயர்ந்த தொழில்நுட்ப கருவிகளை வடிவமைக்கும் கோல்டுஜென் நிறுவனம் 24 கேரட் தங்கம் மற்றும் வைரம் பொருத்தப்பட்ட ஐபோன் 6 போனை வெளியிட்டுள்ளது. காதலர் தனத்தை முன்னிட்டு இந்த வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை 10 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது.

டைமன்ட் எக்ஸ்டஸி கலெக்ஷனில் ஐபோன் 6 முழுவதும் 24 கேரட் தங்கம், மஞ்சள், ரோஸ் கோல்டு அல்லது ப்ளாட்டினம் என அனைத்து வித டைமன்ட்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐபோனில் பொருத்தப்படும் வைரங்களுக்கு ஏற்றவாரு அதன் விலை நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதனை முன்பதிவு செய்து வாங்க வேண்டும், என்பதோடு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய அளவு வைரங்களை இதல் பொருத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலர் தினத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் கொண்டாட விரும்புபவர்கள் இதனை வாங்க தயாராகி வரும்புவார்கள். ப்ரெத்யேகமாக வடிவமைக்கப்படும் இந்த ஐபோன்களின் விலை சுமார் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.22 கோடி வரை அதன் சிறப்பம்சங்களுக்கு ஏற்றவாரு நிர்ணயிக்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications