சாஃப்ட்வேர் என்ஜினீயர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் Devin AI.. கடைசில அந்த நாள் வந்துடுச்சு!
என்றாவது ஒருநாள்.. ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) ஆனது சாஃப்ட்வேர் என்ஜினீயர்களின் (Software Engineers) வேலைகளை பறிக்கும் என்கிற விவாத பேச்சுகளுக்கு இனி இடமில்லை. ஏனென்றால் ஏஐ தொழில்நுட்பமானது அதை "இன்றே" செய்ய தொடங்கிவிட்டது!
காக்னிஷன் (Cognition) என்கிற அமெரிக்க ஏஐ ஆய்வகமானது டெவின் ஏஐ (Devin AI) என்று அழைக்கப்படும் உலகின் முதல் ஏஐ சாஃப்ட்வேர் என்ஜினீயரை (World's First AI Software Engineer) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டெவின் ஏஐ ஏஜென்ட் ஆனது என்னென்ன வேலைகளை செய்துள்ளது என்பதை சொன்னால்.. அதை கேட்கும் ஒவ்வொரு சாஃப்ட்வேர் என்ஜினீயர்களுக்கும் பீதி தானாக கிளம்பும்!

காக்னிஷன் ஆய்வகத்தின் கூற்றுப்படி, டெவின் என்கிற ஏஐ ஏஜென்ட் ஆனது முன்னணி ஏஐ நிறுவனங்களால் நடத்தப்பட்ட ப்ராக்டிக்கல் என்ஜினீயரிங் நேர்காணல்களில் (Practical engineering interviews) தேர்ச்சி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஃப்ரீலான்சிங் தளமான அப்ஒர்க்கில் (Upwork) போஸ்ட் செய்யப்பட்ட உண்மையான வேலைகளையும் (Real Jobs) இது நிறைவு செய்துள்ளது.
ஆனால் காக்னிஷன் ஆய்வகமோ, டெவின் ஏஐ ஏஜென்ட் ஆனது ஒரு திறமையான டீம்மேட் (Skilled teammate) ஆக இருக்கும் என்று கூறுகிறது. இது மனிதர்களோடு (அதாவது உண்மையான சாஃப்ட்வேர் என்ஜினீயர்களோடு) இணைந்து வேலை செய்யும்; சுவாரஸ்யமான சிக்கல்களில் கவனம் செலுத்த உதவும்; அதிக அளவிலான டார்கெட்களை அடைய உதவும் என்றெல்லாம் கூறுகிறது.

டெவின் ஏஐ ஏஜென்ட்டால் என்னென்ன வேலைகளை செய்ய முடியும்? டெவின் ஏஐ ஏஜென்ட் ஆனது கோடிங் (Coding), டீபக்கிங் (Debugging), ப்ராப்ளெம் சால்விங் (Problem solving) போன்ற சாஃப்ட்வேர் டெவெலப்மென்ட்டிற்கான சில மேம்பட்ட திறன்களை (Advanced capabilities in software development) கொண்டுள்ளது.
மேலும் டெவின் ஏஐ ஏஜென்ட் ஆனது தொடர்ந்து கற்றுக்கொள்ளவும், தான் கற்றதை மேம்படுத்தி கொள்ளவும், மற்றும் புதிய சவால்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளவும் மெஷின் லேர்னிங் அல்காரிதங்களையும் (Machine learning algorithms) பயன்படுத்துகிறது. இன்னும் தெளிவான கூறவேண்டுமென்றால் டெவின் ஏஐ ஏஜென்ட்டால் அதன் சொந்த ஏஐ மாடல்களுக்கு பயிற்சி அளித்து, அவைகளை மேம்படுத்த முடியும். காலப்போக்கில் சுயமாக கற்றுக்கொண்டு தவறுகளை சரிசெய்ய முடியும்!

ஏஐ தொழில்நுட்பமானது மனிதர்களின் வேலைகளை மட்டுமல்ல உயிரையும் பறிக்க போகிறது! கடந்த அக்டோபர் 2022 இல் தொடங்கப்பட்டு தற்போது முடிவுக்கு வந்துள்ள, ஏஐ தொடர்பான ஒரு ஆய்வின் முடிவின்படி "ஏஐ தொழில்நுட்பமானது மனித இனங்களுக்கு அழிவு நிலை அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்" (AI can lead to extinction of humans) என்று கூறுகிறது
அதாவது மேம்பட்ட ஏஐ (Advanced AI) மற்றும் ஏஜிஐ (AGI - Artificial General Intelligence) ஆகியவற்றின் எழுச்சியானது, அணு ஆயுதங்களின் அறிமுகத்தை நினைவூட்டும் விதங்களில் உலகளாவிய பாதுகாப்பை சீர்குலைக்கும் (Destabilise global security) திறனை கொண்டுள்ளதாக அந்த ஆய்வின் முடிவு கூறுகிறது.
இந்த ஆய்வின் அறிக்கையானது மூன்று ஆராய்ச்சியாளர்களால் எழுதப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகாக இவர்கள் அரசு அதிகாரிகள், வல்லுநர்கள் மற்றும் ஓப்பன் ஏஐ (OpenAI), கூகுள் டீப்மைண்ட் (Google DeepMind), ஆந்த்ரோபிக் (Anthropic) மற்றும் மெட்டா (Meta) போன்ற சில முக்கிய ஏஐ நிறுவனங்களின் பணியாளர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்ட நபர்களுடன் பேசி உள்ளனர்.
இந்த அறிக்கை, ஏஐ தொடர்பான சவால்களை முன்னெச்சரிக்கை உடன் எதிர்கொள்வதற்கான செயல் திட்டத்தையும் (Action Plan) பற்றியும் பேசுகிறது. இந்த அறிக்கை, குறிப்பிட்ட கணக்கீட்டு சக்தி வரம்பை (Specified computational power limit) மீறி ஏஐ மாடல்களை பயிற்றுவிப்பதை சட்டவிரோதமாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.


Click it and Unblock the Notifications








