ஆசையோடு ஆர்டர் செய்த லேப்டாப்.. Flipkart டெலிவரி செய்த நூதன பொருள்- ஆடிப்போன நபர்!

|

இந்தியாவில் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமாக பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இருக்கிறது. இந்த இரண்டு தளங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு தள்ளுபடிகளை வழங்குவது வழக்கம். இந்த நிலையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்கள் ஒரே தினங்களில் தள்ளுபடி தினங்களை அறிவித்துள்ளது.

அதிகரிக்கும் ஆர்டர்கள்..

அதிகரிக்கும் ஆர்டர்கள்..

அதாவது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மற்றும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் தினங்களில் ஒரே காலக்கட்டத்தில் நடந்து வருகிறது. இரண்டு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு தள்ளுபடி வழங்குகிறது.

ஸ்மார்ட்போன்களில் தொடங்கி பல்வேறு கேட்ஜெட்களும் அதீத தள்ளுபடியில் கிடைக்கிறது. இதையடுத்து ஆன்லைன் ஆர்டர்களும் இந்த காலக்கட்டத்தில் அதிகரித்து வருகிறது.

தள்ளுபடி காலத்தை பயன்படுத்தி ஆர்டர்கள்..

தள்ளுபடி காலத்தை பயன்படுத்தி ஆர்டர்கள்..

பலரும் இந்த தள்ளுபடி காலத்தை பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமான கேட்ஜெட்களை வாங்கி வருகின்றனர்.

அதன்படி ஒருவர் பிளிப்கார்ட்டில் தள்ளுபடி காலத்தை பயன்படுத்தி லேப்டாப்பை வாங்க திட்டமிட்டு அதை ஆர்டரும் செய்துள்ளார்.

ஆர்டர் செய்த நபருக்கு பொருளும் டெலிவரி செய்யப்பட்டுவிட்டது. அதை பிரித்த பார்த்த நபர் கடுமையாக அதிர்ச்சி அடைந்துள்ளார்.

லேப்டாப்க்கு பதில் துணி துவைக்கும் சோப்புகள் டெலிவரி

லேப்டாப்க்கு பதில் துணி துவைக்கும் சோப்புகள் டெலிவரி

இ-காமர்ஸ் இணையதளத்தில் தனது தந்தைக்கு ஒருவர் லேப்டாப்பை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு அந்த ஆர்டரும் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அந்த ஆர்டரை பிரித்து நபர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

காரணம், அந்த பார்சலுக்குள் லேப்டாப்களுக்கு பதிலாக துணி துவைக்கும் சோப்பு கட்டிகள் இருந்துள்ளது. இதை பார்த்த அந்த நபர் அதிருப்தி அடைந்திருக்கிறார்.

ஆர்டர் செய்த நபர்..

லிங்க்ட் இன் தளத்தில் ஆர்டர் செய்து ஏமாந்த நபர் இந்த நிகழ்வு குறித்து பதிவிட்டுள்ளார். யஷஸ்வி சர்மா ஐஐஎம்-அகமதாபாத்தில் படிக்கும் மாணவர், பிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் லேப்டாப்பை ஆர்டர் செய்துள்ளார். பார்சலை பிரித்து பார்த்த போது அதில் டிடர்ஜென்ட் பார் பாக்கெட்கள் இருந்துள்ளது.

ஓபன் பாக்ஸ் டெலிவரி அம்சம்..

ஓபன் பாக்ஸ் டெலிவரி அம்சம்..

யஷஸ்வி சர்மா பதிவிட்ட பதிவில் இந்த லேப்டாப் தனது தந்தைக்கு ஆர்டர் செய்யப்பட்டது எனவும் ஓபன் பாக்ஸ் டெலிவரி கான்செப்ட் குறித்து தெரியாத தனது தந்தையால் இந்த பேக்கேஜ் பெறப்பட்டது எனவும் கூறினார்.

ஓபன் பாக்ஸ் டெலிவரி என்பது டெலிவரி ஊழியர்களுக்கு முன்னதாக பார்சலை பிரித்து பார்த்து சரியான பொருள் டெலிவரி செய்யப்பட்டதா என்பதை உறுதி செய்து கொள்வதாகும்.

இந்த அம்சம் பொருட்களை வாங்குபவர் மோசடிக்கு பலியாகாமல் இருப்பதை உறுதி செய்கிறது.

லேப்டாப்பிற்கு பதில் டிடெட்ரஜென்ட் சோப்..

லேப்டாப்பிற்கு பதில் டிடெட்ரஜென்ட் சோப்..

யஷஸ்வி சர்மா ஆர்டர் செய்த லேப்டாப் அவரது தந்தையால் பெறப்பட்டுள்ளது. ஓபன் பாக்ஸ் டெலிவரி விருப்பத்தை அறியாத அவரது தந்தை பேக்கேஜைத் திறக்காமலேயே டெலிவரி எக்சிகியூட்டிவ் உடன் OTPயைப் பகிர்ந்துள்ளார்.

பின் பார்சலை திறந்த போது அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் அதில் லேப்டாப்பிற்கு பதில் டிடெட்ரஜென்ட் சோப் இருந்துள்ளது.

பிளிப்கார்ட் இல் அளிக்கப்பட்ட புகார்..

பிளிப்கார்ட் இல் அளிக்கப்பட்ட புகார்..

யஷஸ்வி சர்மா மேலும் இதுகுறித்து கூறுகையில், இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்த அம்சத்தை அறிந்திருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பிளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவையிடம் புகார் அளித்ததாகவும் அதில் திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

பிளிப்கார்ட் பதில் இதுதான்..

ஆர்டரை திரும்பப் பெற முடியாது எனவும் டெலிவரி செய்யப்பட்ட பொருளை சரிபார்க்காமல் ஓடிபி கொடுத்தது உங்கள் தந்தையின் தவறு எனவும் மூத்த வாடிக்கையாளர் ஆதரவு நிர்வாகி தன்னிடம் கூறியதாக ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து வாடிக்கையாளர் ஆதரவு நிர்வாகியிடம் ஷர்மா, டெலிவரி செய்பவர் ஓபன் பாக்ஸ் அம்சம் குறித்து தனது தந்தைக்கு தெரிவித்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டுள்ளார்.

போலீஸ் புகார் பதிவு செய்த நபர்..

போலீஸ் புகார் பதிவு செய்த நபர்..

அதேபோல் வாடிக்கையாளரால் ஆர்டரை பரிசோதிக்கும் முன்பே டெலிவரி நபர் அந்த இடத்தில் இருந்து வெளியேறும் சிசிடிவி காட்சிகள் தன்னிடம் இருப்பதாகவும் ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.

இது சம்பந்தமான ஆதாரங்களுடன் போலீஸ் புகார் ஒன்று பதிவு செய்துள்ளதாகவும் ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.

பதிவை டெலிட் செய்ய மாட்டேன்..

பதிவை டெலிட் செய்ய மாட்டேன்..

தொடர்ந்து பிளிப்கார்ட் குழு தன்னை தொடர்பு கொண்டதாகவும் பணம் திரும்பப் பெறும் முறைகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தது. ஆனால் இந்நாள் வரை பணம் திரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பணத்தை திரும்பப் பெற்றாலும் நான் இந்த பதிவை டெலிட் செய்ய மாட்டேன் என ஷர்மா குறிப்பிட்டுள்ளார். காரணம் இந்த ஓபன் பாக்ஸ் சிஸ்டம் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கோடிக்கணக்கான டெலிவரிகள் பெரும் பட்சத்தில் இதுபோன்ற ஒரு சில பிழைகள் இயல்பு என்றாலும். நிறுவனம் இந்த பிழைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது.

Flipkart பிரத்யேகமாக பதில்..

Flipkart பிரத்யேகமாக பதில்..

இந்த சம்பவம் குறித்து Flipkart பிரத்யேகமாக பதில் அளித்துள்ளது. அதில், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிறுவனமாக Flipkart இருக்கிறது.

வாடிக்கையாளர் நம்பிக்கையை பாதிக்கும் அனைத்து சம்பவங்களிலும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை நிறுவனம் கொண்டிருக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை உறுதி செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

ஓபன் பாக்ஸ் டெலிவரி சிஸ்டம்..

ஓபன் பாக்ஸ் டெலிவரி சிஸ்டம்..

ஓபன் பாக்ஸ் டெலிவரி சிஸ்டத்தை வழங்கும் இந்த குறிப்பிட்ட வழக்கில், வாடிக்கையாளர் பேக்கேஜைத் திறக்காமலேயே டெலிவரி எக்ஸிகியூட்டிவ் உடன் OTPயைப் பகிர்ந்துள்ளார்.

சம்பவத்தின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டதும், எங்கள் வாடிக்கையாளர் சேவைக் குழு பணத்தைத் திரும்ப செலுத்துவதற்கான முறையை தொடங்கி விட்டது.

இது அடுத்த 3-4 வேலை நாட்களுக்குள் வரவு வைக்கப்படும். சிக்கலைக் கண்டறிந்து, தவறு செய்த தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் நலனே பிரதானம்..

வாடிக்கையாளர்களின் நலனே பிரதானம்..

Flipkart இன் ஓபன் பாக்ஸ் டெலிவரி சிஸ்டம் என்பது வாடிக்கையாளரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.

ஓபன் பாக்ஸ் டெலிவரி சிஸ்டத்தில் டெலிவரி பார்ட்னர்கள் டெலிவரி நேரத்தில், வாடிக்கையாளரின் முன் ஆர்டர் பொருளை திறந்து காண்பிப்பார்கள். வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் டெலிவரியை ஏற்றுக்கொண்டு OTPயைப் பகிருவார்கள்.

ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், சிறந்த விநியோகச் சங்கிலியை உருவாக்கவும் Flipkart பல ஆண்டுகளாக மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்று என பிளிப்கார்ட் குறிப்பிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Detergent Bars delivered to Man Who ordered Laptop through Flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X