அதிர்ச்சி : இந்தியாவின் ரகசிய 'பாதுகாப்பு திட்டம்' ஆன்லைனில் வெளியானது..!

|

ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிக்கப்பல்கள் பிரஞ்சு டிசிஎன் மற்றும் ஸ்பானிய நிறுவனம் நவன்டியாவின் கூட்டு முயற்சியால் உருவான டீசல் மின் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களின் ஒரு வர்க்கமாகும். இவ்வகை நீர்மூழ்கிகள் டீசல் உந்துவிசை மற்றும் ஒரு கூடுதல் காற்று சுயாதீன உந்துவிசை (ஏவிவிடப்பட்ட) கொண்டு இயங்கும்.

உலகின் மிகவும் முன்னேறிய நீர்மூழ்கிகளாக கருதப்படும் இவ்வகை ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிகள் இந்திய பாதுகாப்பிற்காக மும்பை மஸ்கொன் கப்பல்கட்டும் தளத்தில் 3.5 பில்லியன் டாலர்கள் செலவில் கட்டப்பட்டு வந்தது.

கசிந்துள்ளது :

கசிந்துள்ளது :

இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த மிகவும் ரகசியமான, கட்டமைக்கப்படும் இந்த ஆறு நீர்மூழ்கிகள் சார்ந்த தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

ஆன்லைன் மூலம் :

ஆன்லைன் மூலம் :

ஸ்கார்ப்பின் நீர்மூழ்கி இயக்க கையேடு பணியாற்ற வல்ல 22,000 க்கும் மேற்பட்ட பக்கங்களை ஒரு ஆஸ்திரேலிய செய்தித்தாள் நிறுவனம் ஆன்லைன் மூலம் வெளியிட்டுள்ளது.

அமைதி :

அமைதி :

இவ்வகை நீர்மூழ்கிகளை கண்டறிவது மிகவும் கடினமாகும், சாத்தியமற்றது என்றே கூறலாம் அவ்வண்ணம் இவைகள் மிகவும் அமைதியாக நீரில் மூழ்கி இருக்கும்.

சோனார் திறன் :

சோனார் திறன் :

ஆனால் இப்போதைய சோனார் திறன்கள் மூலம் சப்தங்கள் மற்றும் போர் முறை விவரங்களை முற்றிலும் வெளிப்படுத்த முடியும்.

ஆய்வு :

ஆய்வு :

சரியாக கசிந்துள்ள தகவல்கள் என்னென்ன என்பதை ஆய்வு செய்யவும் இதுவொரு ஹாக்கிங் செயலா என்ற கோணத்தில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சேதம் :

சேதம் :

நிச்சயமாக இந்தியாவுக்கு வெளியே தான் இந்த கசிவு நிகழ்த்தப்பட்டுள்ளது என்றும் இந்த கசிவின் சேதம் கணிசமானதாக இருப்பது போல் தெரியவில்லை என்றும் கடற்படை வட்டாரங்கள் உறுதியாக தெரிவித்துள்ளன.

 2011 :

2011 :

ஆஸ்திரேலிய செய்தித்தாளோ இந்த தரவு சார்ந்த கசிவானது 2011ஆம் ஆண்டு பிரான்சில் நடந்தது என்று அறிக்கை அளித்திருந்தது அந்த நேரத்தில் இந்த கசிவு பிரான்சில் அல்லது இந்தியாவில் நிகழ்ந்ததா என்பது கேள்விக்குறியாக இருந்தது.

எதிரிகள் :

எதிரிகள் :

நீர்மூழ்கி கப்பல்கள் ஒரு இறுதி ஸ்டீல்த் ஆயுதமாக கருதப்படுகிறது ஒரு நீர்மூழ்கி கப்பல் நீருக்கடியில் எவ்வளவு ஒலி எழுப்புகிறது என்பதை பொருத்தே எதிரிகள் அந்த நீர்மூழ்கியை கண்டறிய முடியும்.

மிகப் பெரிய பாதுகாப்பு :

மிகப் பெரிய பாதுகாப்பு :

பகிரங்கமாக வைக்கப்பட்டுள்ள இவ்வகை நீர்மூழ்கிகள் சார்ந்த தகவல்கள் ஒரு வகையான கடற்படையின் கனவு பொருள் எனலாம். ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிகள் - உலகின் மிகப் பெரிய பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

அதிர்ச்சி :

அதிர்ச்சி :

ஆஸ்திரேலிய செய்தித்தாள் வலைத்தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் நீர்மூழ்கியின் பகுதிகள், தொழில்நுட்ப கையேடுகள் மற்றும் அதிமுக்கியமான ரகசிய தகவல்கள் என மிகவும் முக்கியமான விவரங்களை உள்ளடக்கி இருக்கிறது என்பது அதிர்ச்சி.

இந்திய கடற்படை :

இந்திய கடற்படை :

இந்தியாவின் ஐஎன்எஸ் கல்வாரி தான் இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட முதல் ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிக்கப்பல் ஆகும். மே மாதம் கடல் சோதனையில் பங்கேற்ற அது இந்திய கடற்படையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ஒரு இலக்கையும் விட்டுவைக்காத இந்தியாவின் புதிய 'சர்ஃபேஸ்-டூ-ஏர் மிஸைல்'..!


சாத்தியமே இல்லாத 'ஏலியன் வாகனம்' - ஹிட்லர் சாதித்தது எப்படி..?!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
India's $3.5 Billion Secret Is Out, Details of Scorpene Submarines Leaked. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X