"எதற்கும் துணிந்தவன்" சூர்யா சொல்லும் அறிவுரை- இதை வைத்திருந்தால் காவல்துறை உங்களுடன்: பெண்களே!
கலகலப்பான கதைக்களம், குடும்பம் சார்ந்த கதை என ஒரு வட்டத்துக்குள் மட்டும் வெற்றியை சுவைத்து வந்த இயக்குனர் பாண்டிராஜ் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தின் மூலம் சமூகம் சார்ந்த கதையிலும் தன்னை நிரூபித்திருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். தொழில்நுட்ப முன்னேற்றத்தில் பெண்கள் படும் துயரம் மற்றும் கஷ்டத்தை எடுத்துரைத்து அதை துணிந்து எதிர்கொள்ள வேண்டும் என்ற பாடத்தை எடுத்துரைப்பதே இந்த திரைப்படம்.

சூரரைப் போற்று, நவரசா, ஜெய் பீம்
சூரரைப் போற்று, நவரசா, ஜெய் பீம் என தொடர்ந்து ஓடிடியில் வெளியான சூர்யா படங்களுக்கு மத்தியில் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு எதற்கும் துணிந்தவன் திரையில் வெளியானது. மறுபுறம் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் பாண்டிராஜ் திரைப்படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் வெளியானது. பெண்களின் அந்தரங்க வீடியோக்களை அவர்களுக்கு தெரியாமல் பதிவு செய்து இணையத்தில் விடுவதாக மிரட்டும் கும்பலை சார்ந்து இந்த படத்ததின் கதைக்களம் அமைந்திருக்கிறது.

பெண்களுக்கான அறிவுரை
காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி தகாத முறையில் நடந்துக் கொள்ளும் இளைஞர்கள் கூட்டம் அவர்களை வழிநடத்தும் அரசியல் பிரமுகர் மகனான வில்லன் ஒருபக்கம். சாமானியக் குடும்பத்தில் வழக்கறிஞராக இருக்கும் கதாநாயகன் ஒருபக்கம். தனக்கென்ற கதை பாணியை மிக்ஸ் செய்யும் விதமாக இரண்டு கிராமங்களுக்கு இருக்கும் பிரச்சனை என்ற கதைத்தளத்தை மையப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். இந்த திரைப்படத்தில் கதாநாயகன் சூர்யா பாதிக்கப்படும் பெண்களுக்கு களத்தில் இறங்கி செயல்படுகிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகன் சூர்யா தமிழக அரசின் காவலன் ஆப் ஒவ்வொரு பெண்ணின் மொபைல் போனில் டவுன்லோட் செய்து கொடுத்து, ஏதும் ஆபத்து வந்தால் இந்த செயலி மூலம் காவல்துறைக்கும், குடும்பத்தினருக்கும் தெரியப்படுத்தலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

செயலி குறித்து முழு விவரங்கள்
ஒரு காட்சியில் இந்த ஆப் தனியாக ஸ்க்ரீனில் காண்பித்து, அதோடு இந்த செயலி குறித்து கதாநாயகன் சூர்யா விளக்குகிறார். அந்த காட்சியில் தான் அனைத்து சகோதரிகளுக்கும் இந்த செயலி பதிவிறக்கம் செய்து கொடுத்து ஆக்டிவேட் செய்து கொடுப்பதாக கூறினார். இந்த செயலி பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்தாலும் இந்த இரண்டு தினங்களாக இந்த செயலி மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்த செயலிக்குள் சென்று ஒரு பட்டன் அழுத்தினாலும் போதும் உடனடியாக காவல்துறைக்கு செய்தி அனுப்புப்படும். இந்த செயலி குறித்து முழு விவரங்களை பார்க்கலாம்.

தமிழகக் காவல்துறை சார்பில் வடிவமைக்கப்பட்ட செயலி
தமிழகக் காவல்துறை சார்பில் வடிவமைக்கப்பட்டு பொதுமக்களுக்காக வெளியிடப்பட்ட பாதுகாப்பு பயன்பாட்டுச் செயலி தான் 'காவலன்' Kavalan SOS app. பொதுமக்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது காவல்துறையைத் தொடர்புகொள்ள 100 என்ற எண்ணை டயல் செய்ய வேண்டாம். இந்தச் செயலியில் உள்ள SOS பட்டனை அழுத்தினால் போதும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பு செயலியாக இந்த காவலன் SOS செயலி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மட்டுமின்றி முதியவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், உடனே காவல் துறையைச் சம்பவ இடத்திற்கு அழைக்க இந்த செயலி போதுமானது என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவசர நேரம் மற்றும் ஆபத்தான நேரத்தில்
அவசர நேரம் மற்றும் ஆபத்தான நேரத்தில் உங்கள் பாதுகாப்பிற்கு காவல்துறையின் உதவி தேவைப்பட்டால் உடனே இந்த செயலியில் உள்ள SOS என்ற பட்டனை அழுத்தினாள் போதும். நீங்கள் பட்டனை அழுத்திய அடுத்த நொடியில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்படும். நீங்கள் இருக்கும் இடத்தின் ஜி.பி.எஸ் லொகேஷனும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றுவிடும். சம்பவ இடத்துக்குக் காவல்துறை ரோந்து வாகனம் விரைந்து வரும்.

KAVALAN SOS APP
பொதுமக்கள் 'KAVALAN SOS APP' செயலியைப் பயன்படுத்துமாறு காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த செயலியில் உங்களின் லைவ் லொகேஷன், ஜி.பி.எஸ். லைவ் ட்ராக்கிங், அழைப்பவரின் இருப்பிடத் தகவல் மற்றும் வரைபடம் கட்டுப்பாடு அறைக்கு அனுப்பப்படும், செயலியில் பதிவு செய்துள்ள உங்கள் குடும்பத்தினரின் எண்களுக்குத் தானாகவே மெசேஜ் அனுப்பப்படும் சேவை போன்று பல சேவைகள் உள்ளது. இந்த செயலி தற்பொழுது கூகுள்பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. இதை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் எண், மாற்று பயன்பாட்டு எண், ஈமெயில் ஐடி, குடும்பத்தினர் விலாசம் போன்ற தகவல்களைப் பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். ஆபத்தான நேரத்தில் மிக எளிமையாக பயன்படுத்தும் விதத்தில் ஷேக் ட்ரிக்கர் வசதியும் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் தங்கள் விபரங்களை ஒருமுறை பதிவு செய்தால் போதுமானது. பிறகு செயலியை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். பயனாளர்கள் ஆபத்தில் இருக்கும் போது மூன்று நபர்களுக்குத் தகவல் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்குப் பெரிதும் பயன்படும் இந்த செயலியை உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் என்று காவல்துறை கேட்டுக்கொண்டது.


Click it and Unblock the Notifications