எண்ணிக்கை குறைவு தான், ஆனாலும் நான் தான் நம்பர் ஒன் என்கிறார் டொனால்டு டிரம்ப்

|

ஃபேஸ்புக்கில் முதலிடத்தில் இருப்பற்கு அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் தன்னை வாழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

அதிபர் டொனால்டு டிரம்ப்பை விருந்தின் போது சந்தித்த போது மார்க் சூக்கர்பர்க் இவ்வாறு தெரிவித்ததாக டிரம்ப் தெரிவித்தார். இதுகுறித்து வெளியான தகவல்களில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வானொளி நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறான கருத்தை தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 மார்க் சூக்கர்பர்க்

மார்க் சூக்கர்பர்க்

டொனால்டு டிரம்ப் கூறும் போது, மார்க் தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க், "உங்களுக்கு வாழ்த்துக்கள், நீங்கள் தான் ஃபேஸ்புக்கில் முதலிடத்தில் இருக்கிறீர்கள்." என்ற தெரிவித்தார். இந்த நிகழ்வு விருந்து ஒன்றின் போது நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.!ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.!

 நரேந்திர மோடி

நரேந்திர மோடி

மார்க் சூக்கர்பர்க் எந்த அர்த்தத்தில் இவ்வாறு தெரிவித்தார் என்பது தெரியவில்லை, எனினும் டிரம்ப் ஃபேஸ்புக் விவரங்களை ஆய்வு செய்து பிரதமர் நரேந்திர மோடியின் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டுடன் ஒப்பிடும் போது, இதில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. எண்ணிக்கையை பார்க்கும் போது பிரதமர் மோடி தான் முதலிடத்தில் இருக்கிறார்.

டொனால்டு டிரம்ப் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்

டொனால்டு டிரம்ப் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்

அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான அறிக்கையில், ஃபேஸ்புக்கில் அதிகம் பேர் பின்பற்றும் உலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியும், அவரை தொடர்ந்து டொனால்டு டிரம்ப் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இருவரை பின்தொடர்வோர் எண்ணிக்கை முறையே 4.35 கோடி மற்றும் 2.3 கோடிகளாக இருக்கின்றன. மேலும் தற்சமயம் இந்த எண்ணிக்கை முறையே 4.4 கோடி மற்றும் 2.5 கோடியாக அதிகரித்து இருக்கின்றன.

உலகின் முதல் 16 ஜிபி ரேம் ஸ்மார்ட் போன்., எப்போது அறிமுகம்?உலகின் முதல் 16 ஜிபி ரேம் ஸ்மார்ட் போன்., எப்போது அறிமுகம்?

 டொனால்டு டிரம்ப்

அதிபர் டொனால்டு டிரம்ப் நகைப்புக்காக இவ்வாறு தெரிவித்தாரா என்பதும் தெளிவாக தெரியவில்லை. ஏற்கனவே பலமுறை அவர் இதுபோன்ற நகைச்சுவை மிக்க கருத்துக்களை தெரிவித்சு இருக்கிறார். எனினும், மார்க் சூக்கர்பர்க் இதுகுறித்து எவ்வித தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Despite Having Less Followers Than PM Modi, Donald Trump Boasts He's Number One On Facebook : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X