பேஸ்புக் நிறுவனத்தில் நடைபெற்ற தகவல் மோசடிக்கு பிறகு, அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் புதுமையான தொழில்நுட்பங்கள் மீதான ஆர்வம் குன்றத்துவங்கியது. ஆனாலும் இந்த வாரம் நடைபெற்ற டெட் மாநாடு (TED conference) அனைத்து தொழில்நுட்ப கனவுகளும் உயிர்ப்புடன் இருப்பதை காட்டுகிறது.

இந்த டெட் மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரும், பேஸ்புக் பிரச்சனை முதல் ஆளில்லா ஊபர் கார் ஏற்படுத்திய விபத்து மூலம் சைக்கிளில் சென்ற பெண்மணி கொல்லப்பட்டது வரை , சமீபத்திய தொழில்நுட்ப பிரச்சனைகள் அனைத்தையும் அறிந்து வைத்திருந்தனர்.
நமக்கு நாமே சொல்லும் அழகான கதை என்றவென்றால், "நாம் உலகத்தை ஒன்றாக இணைத்தாலும் அனைத்தும் நன்றாக நடக்கும் என கூற முடியாது" என்கிறார் டெட் மாநாட்டின் பொறுப்பாளர் கிரிஸ் ஆண்டர்சன்.
"என்னதான் கனவுகள் தள்ளாடினாலும், அவை ஒரு போதும் உடைந்துவிடுவதில்லை" , என்பது தான் மாநாட்டில் கலந்துகொண்ட பெரும்பாலானோரின் கருத்தாக இருந்தது.

"தொழில்நுட்பத்துடன் நமது சூழ்நிலை கடினமாக தெரிந்தாலும், உண்மையில் அது மிகவும் எளிதானது" என்கிறார் எம்.ஐ.டி பேராசிரியர் மேக்ஸ் டெக்மார்க்.
எதிர்காலத்தை பற்றி மெத்தனமாக இருக்கலாம் அல்லது துடிப்பில்லா படகில் மிதப்பது போல, ஒன்று கைவிட்டுவிடலாம் அல்லது லட்சியத்தோடு தொழில்நுட்பத்தை எப்படி அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துசெல்லலாம் என பார்க்கலாம்.
எழுத்தாளர் மற்றும் தொழில்நுட்பலியலாளர் , ஜேரன் லெனியர் கூறுகையில் , நாம் கத்தி முனை வருங்காலத்தை எதிர்கொள்கிறோம். அப்போது நாம் எந்த தொழில்நுட்பத்தை விரும்பினோமோ, அதுவே நம்மை செயலிழக்க வைக்கும் என்றார். "நமக்கு ஒரு சவால் உள்ளது" என்று டெட் மாநாட்டில் கூறிய லெனியர், " தொழில்நுட்பத்தை சுற்றி ஒரு கலாச்சாரத்தை உருவாக்கவது மிகவும் அழகானது, அர்த்தமுள்ளது, நம்மை மொத்தமாக தற்கொலை செய்வதிலிருந்து தடுக்கும் ஆற்றல் பெற்றது" என்றார்.
ப்ரீ மாடல்
மேலும் லெனியர் கூறுகையில், தற்போதைய இன்டர்நெட் மாடலை பற்றி அதிகம் கலந்துரையாட வேண்டும். விளம்பரத்தை மட்டுமே நம்பி இலவசமாக சமுகவலைதளம் மற்றும் தேடுபொறிகள் கிடைக்கின்றன.
எப்போது இந்த விளம்பரங்கள் நடத்தையை மாற்றுபவையாக மாறின. இனிமேல் சமூக வலைதளங்களை 'நடத்தை மாற்றும் சாம்ராஜ்யம்' என தான் அழைக்கபோகிறேன். என்றார் லெனியர்.

அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் போல, கூகுள் மற்றும் பேஸ்புக்கும் சப்ஸ்கிரிப்சன் மாடலை பின்பற்றும் என டெட் மாநாட்டில் அனைவரும் நம்புகின்றனர். இந்த மாடல் மூலம் மக்களுக்கு பணம் கொடுத்து பொருளாதார ரீதியில் கட்டிப்போடலாம் மற்றும் அனைத்து பயனர்களுக்கும், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பயனுள்ள அவர்களுடைய தனிப்பட்ட தகவல்களுக்காக பணம் அளிக்கப்படலாம்.

Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.