18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிம் கார்டு கிடையாது.. DTO சட்டம் கடுமையானது.. இனி இதை தான் பின்பற்ற வேண்டும்

|

இந்தியாவில் உள்ள சிறார்களுக்கு சிம் கார்டுகள் வழங்கக் கூடாது என்று தொலைத்தொடர்புத் துறை (DTO) தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியாவில் 18 வயதிற்குக் குறைவாக உள்ள நபர்கள் யாருக்கும் சிம் கார்டுகள் வழங்கக்கூடாது என்று இந்திய தொலைத்தொடர்புத் துறை கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. ஏன்? 18 வயதிற்குப்பட்டவர்கள் சிம் கார்டுகளை வாங்கக் கூடாது என்றும், அது எப்படி சட்டத்திற்குப் புறம்பானது என்றும் இந்தியத் தொலைத்தொடர்புத் துறை விளக்கமளித்துள்ளது.

18 வயதிற்குட்பட்ட நபர் இந்தியாவில் சிம் கார்டு வாங்கலாமா?

18 வயதிற்குட்பட்ட நபர் இந்தியாவில் சிம் கார்டு வாங்கலாமா?

சமீபத்தில் வெளியான இந்தியத் தொலைத்தொடர்புத் துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, இனி 18 வயதிற்குட்பட்ட எந்தவொரு நபரும் நாட்டின் எந்தவொரு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களிடமிருந்தும் சிம் கார்டுகளை வாங்க முடியாது. இருப்பினும், இந்தியாவில் ஏராளமான சிறார்கள் மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள். டெலிகாம் ஆபரேட்டரால் 18 வயதுக்கு மேல் உள்ள நபருக்கும் மட்டுமே புதிய சிம் கார்டை விற்க வேண்டும் என்பது கட்டாயம்.

மைனர் அல்லது தகுதியற்ற சிறார்களுக்கு சிம் விற்பனை செய்வது சட்டவிரோத குற்றமா?

மைனர் அல்லது தகுதியற்ற சிறார்களுக்கு சிம் விற்பனை செய்வது சட்டவிரோத குற்றமா?

புதிதாக ஒரு சிம் கார்டை மைனர் அல்லது தகுதியற்ற சிறார்களுக்கு விற்பது தொலைத்தொடர்பு ஆபரேட்டரின் சட்டவிரோத செயலாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இந்த பதிவில் விளக்கப்பட்டுள்ளது. புதிய சிம் கார்டைப் பெற, ஒரு நபர் வாடிக்கையாளர் கையகப்படுத்தல் படிவத்தை (CAF) நிரப்ப வேண்டும். இந்தப் படிவம் உண்மையில் ஒரு வாடிக்கையாளருக்கும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநருக்கும் (TSP) இடையிலான ஒரு ஒப்பந்த படிவமாகும்.

இறந்து 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 'உயிர்' பெற்ற அதிசய பெண்.. உலக மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட நிகழ்வு..இறந்து 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 'உயிர்' பெற்ற அதிசய பெண்.. உலக மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட நிகழ்வு..

CAF படிவம் என்பது எதற்காக வழங்கப்படுகிறது? இது அவ்வளவு முக்கியமானதா?

CAF படிவம் என்பது எதற்காக வழங்கப்படுகிறது? இது அவ்வளவு முக்கியமானதா?

இந்த படிவம் TSP மற்றும் வாடிக்கையாளர் இருவரும் சந்திக்க வேண்டிய சில விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் குறிப்பிடுகிறது. CAF என்பது வாடிக்கையாளருக்கும் TSP-க்கும் இடையிலான ஒப்பந்தம் என்பதால், அது இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872 ஆல் நிர்வகிக்கப்படுகிறது. நீதிமன்றம் ஒப்பந்தம் செய்திருந்தால், அந்த ஒப்பந்த நபருக்கு குறைந்தபட்சம் 18 வயது அல்லது 21 வயது இருக்க வேண்டும் என்று சட்டம் குறிப்பாகக் கூறுகிறது. பெற்றோர்கள் இல்லாமல், சட்டப்பூர்வ பாதுகாவலர் கீழ் இருக்கும் நபர்களுக்கான வயது தான் 21 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் பார்வைக்கு வரும் போது என்னவாகும்?

நீதிமன்றத்தின் பார்வைக்கு வரும் போது என்னவாகும்?

மேலும், ஒப்பந்தம் செய்யும் நபர் நல்ல மனதுடன் சுயநினைவுடன் இருக்க வேண்டும் என்று சட்டம் குறிப்பிடுகிறது. அதேபோல், நல்ல மனதுடன் ஒப்பந்தம் செய்கிறார் என்பதைப் பதிவிட வேண்டும். இல்லையென்றால், இந்த ஒப்பந்தம் எதிர்கால நீதிமன்றத்தின் பார்வைக்கு வரும் போது செல்லுபடியாகாது என்று கூறப்பட்டுள்ளது. கடைசியாக, ஒப்பந்தம் செய்யும் நபர் வேறு எந்த சட்டத்தாலும் சட்ட ஒப்பந்தங்களைச் செய்யத் தகுதியற்றவராக இருக்கக்கூடாது என்பது கட்டாயம்.

ஏர்டெல் vs ஜியோ: ரூ. 349 திட்டத்தில் இப்படி ஒரு ஜாக்பாட் நன்மைகளா? இனி இது தான் ரீசார்ஜ் பண்றோம்..ஏர்டெல் vs ஜியோ: ரூ. 349 திட்டத்தில் இப்படி ஒரு ஜாக்பாட் நன்மைகளா? இனி இது தான் ரீசார்ஜ் பண்றோம்..

ஒரு தனி நபர் அவரின் பெயரில் எத்தனை சிம் கார்டுகளை வாங்க முடியும்?

ஒரு தனி நபர் அவரின் பெயரில் எத்தனை சிம் கார்டுகளை வாங்க முடியும்?

இந்தியாவில் உள்ள சிறார்களுக்கு சிம்கள் கொடுக்கக்கூடாது என்று சமீபத்தில் DoT கூறியது. இது TSP க்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான ஒப்பந்தம் என்பதால், தகுதியான பெரியவர்கள் மட்டுமே ஒப்பந்தம் செய்ய முடியும். ஒரு வாடிக்கையாளர் தனது பெயரில் எத்தனை சிம் கார்டுகளை வாங்க முடியும்? என்ற கேள்வியும் இதனால் எழுந்துள்ளது. இந்தியத் தொலைத்தொடர்பு சட்டத்தின் படி, ஒரு தனிநபர் அவரின் பெயரில் அதிகபட்சமாக 18 சிம் கார்டுகளை வாங்க முடியும்.

18 சிம்களில் எத்தனை சிம் கார்டுகளை நீங்கள் மொபைல் அழைப்பிற்காக பயன்படுத்தலாம்?

18 சிம்களில் எத்தனை சிம் கார்டுகளை நீங்கள் மொபைல் அழைப்பிற்காக பயன்படுத்தலாம்?

இதில் 18 சிம்களில், ஒன்பது சிம் கார்டுகளை மட்டுமே மொபைல் அழைப்புகளுக்காக அந்த நபர் பயன்படுத்த முடியும். அதேபோல், அவர்கள் பெயரில் வாங்கப்பட்ட மற்ற ஒன்பது சிம் கார்டுகளை அந்த பயனர்கள் வெறும் M2M தகவல்தொடர்புகளுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் பெயரில் வாங்கி பயன்படுத்திய சிம் கார்டுகளை நீங்கள் பயன்படுத்த விரும்பாத போது அவற்றை நீக்கம் செய்வது பாதுகாப்பானது. மேலும் சில சுவாரசியமான தகவல்களுக்கு எங்கள் செய்தி பக்கத்தைப் பார்வையிடுங்கள்.

Best Mobiles in India

English summary
Department Of Telecommunication Recently Said That SIM Cards Should Not Be Issued Strictly To Minors : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X