பூமியின் 'அதிசயமான' மிகப்பெரிய நீர்வீழ்ச்சி இதுதான்! இது எங்கே இருக்கிறது தெரியுமா?

|

பூமியின் பள்ளத்தாக்குகளில் பாயும் ஆறுகள் இயற்கை அதிசயமான நீர்வீழ்ச்சிகளை உருவாக்குகிறது. அழகான நீர்வீழ்ச்சி இருக்கும் தளங்கள் முக்கிய சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டிற்கு சுமார் மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கிறது. ஆனால், பூமியின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி மனிதர்களின் பார்வைக்கு எட்டாத தொலைவில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி எங்கே உள்ளது என்று தெரியுமா?

பூமியின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி

பூமியின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி

பூமியின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் இந்த சக்திவாய்ந்த நீர்வீழ்ச்சி பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. இதற்கான முக்கிய காரணம் இந்த பூமியின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி மனிதர்களின் பார்வைக்கு எட்டாத தூரத்தில் உள்ளது, இன்னும் சரியாக சொன்னால் தூரத்தில் இல்லை ஆழத்தில் அமைந்து உள்ளது. மனிதர்களுக்கு எட்டாத தூரமா? அப்படி எங்கே இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது என்று தானே யோசிக்கிறீர்கள், சொல்கிறோம்..

கடலுக்கு அடியில் அமைந்திருக்கும் நீர்வீழ்ச்சி

கடலுக்கு அடியில் அமைந்திருக்கும் நீர்வீழ்ச்சி

ஏனென்றால், பூமியின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாந்தைப் பிரிக்கும் டென்மார்க் நீரிணையின் கீழ், கடலுக்கு அடியில் அமைந்திருக்கிறது. கடலுக்கு அடியில் நீர்வீழ்ச்சியா! இது எப்படி சாத்தியம், அதிசயமா இருக்கிறதே என்று நினைப்பவர்களுக்கு இந்த செய்தி நம்பமுடியாத சில கூடுதல் தகவல்களை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. இறுதி வரை தொடர்ந்து படியுங்கள்.

திடீரென சாம்சங் கேலக்ஸி நோட்10 லைட் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!திடீரென சாம்சங் கேலக்ஸி நோட்10 லைட் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!

டென்மார்க் ஸ்ட்ரெயிட் காட்ராக்ட்

டென்மார்க் ஸ்ட்ரெயிட் காட்ராக்ட்

கிரீன்லாந்தின் தெற்கு முனைக்கு அருகிலுள்ள டென்மார்க் நீரிணையின் கீழ், டென்மார்க் ஸ்ட்ரெயிட் காட்ராக்ட் (Denmark Strait cataract) என்று அழைக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சி அமைத்துள்ளது. கடல் மேற்பரப்பிலிருந்து சுமார் 2,000 அடி (600 மீட்டர்) ஆழத்தில் இந்த நீர்வீழ்ச்சி கடலுக்கு அடியில் தொடங்குகிறது. டென்மார்க் ஸ்ட்ரெயிட் காட்ராக்ட் நீர்வீழ்ச்சியின் மொத்தம் உயரம் 11,500 அடியாம், கிட்டத்தட்ட 2 மைல் தூரத்திற்கு இந்த நீர்வீழ்ச்சி கடலுக்கு அடியல் செல்கிறது.

ஏஞ்சல் நீர்வீழ்ச்சியை விட எத்தனை மடங்கு பெரியது தெரியுமா?

ஏஞ்சல் நீர்வீழ்ச்சியை விட எத்தனை மடங்கு பெரியது தெரியுமா?

டென்மார்க் ஸ்ட்ரெயிட் காட்ராக்ட் நீர்வீழ்ச்சி, வெனிசுலாவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் உயரத்தை விட 3 மடங்கு பெரிதானதாகும், ஏஞ்சல் நீர்வீழ்ச்சி தான் பூமியின் மிக உயரமான நிலத்தில் உள்ள நீர்வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது. டென்மார்க் ஸ்ட்ரெயிட் காட்ராக்ட் நீர்வீழ்ச்சி வினாடிக்கு 123 மில்லியன் கன அடி (3.5 மில்லியன் கன மீட்டர்) குளிர்ந்த கடல் நீரை பாய்ச்சுகிறது. இதன் உச்ச ஓட்டம் கிட்டத்தட்ட 2,000 நயாகரா நீர்வீழ்ச்சிக்குச் சமம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலில் எப்படி நீர்வீழ்ச்சிகள் இருக்க முடியும்?

கடலில் எப்படி நீர்வீழ்ச்சிகள் இருக்க முடியும்?

வெனிசுலாவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி, நிலத்தின் மிக உயரமான நீர்வீழ்ச்சி என்று கூறியிருந்தோம், டென்மார்க் ஸ்ட்ரெயிட் காட்ராக்ட் நீர்வீழ்ச்சியை விட 3 மடங்கு சிறியது, மேலும் உச்ச ஓட்டங்களின் போது கூட நயாகரா நீர்வீழ்ச்சியை விட 2,000 மடங்கு குறைவான நீரைக் கொண்டு செல்கிறது. ஆனால், கடலில் எப்படி நீர்வீழ்ச்சிகள் இருக்க முடியும்? இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் உண்மை இதுதான்.

விற்பனைக்கு வந்தது ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடல்..! விலை இவ்வளவு தான்.!விற்பனைக்கு வந்தது ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடல்..! விலை இவ்வளவு தான்.!

கடலுக்கு அடியில் குளிர்ந்த நீர்வீழ்ச்சி

கடலுக்கு அடியில் குளிர்ந்த நீர்வீழ்ச்சி

கடலுக்கு அடியில் குளிர்ந்த நீர், வெதுவெதுப்பான நீரை விட அடர்த்தியானது மற்றும் டென்மார்க் நீரிணையில், நோர்டிக் கடலிலிருந்து தெற்கே பாயும் நீர் இர்மிங்கர் கடலிலிருந்து வெப்பமான நீரை சந்திக்கிறது. குளிர்ந்த, அடர்த்தியான நீர் விரைவாக வெப்பமான நீருக்குக் கீழே மூழ்கி கடல் தளத்தின் மிகப்பெரிய வீழ்ச்சியின் மீது பாய்கிறது, இது ஒரு விநாடிக்கு 123 மில்லியன் கன அடி (3.5 மில்லியன் கன மீட்டர்) க்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் சக்திவாய்ந்த ஆற்றல்

இதன் சக்திவாய்ந்த ஆற்றல்

இருப்பினும், இந்த பூமியின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி பற்றிய கூடுதல் தகவல்களை இன்னும் ஆராய்ச்சியாளர்களால் முழுமையாகக் கண்டறிய முடியவில்லை. கடல் மேற்பரப்பிற்கு அடியில் பாய்கிற இந்த டென்மார்க் ஸ்ட்ரெயிட் நீரிணையின் சக்திவாய்ந்த ஆற்றல் இன்னும் சரியான அறிவியல் கருவிகளின் உதவியின்றி முற்றிலுமாக கண்டறியப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்பமான மேற்பரப்பு நீரை மாற்றும் டென்மார்க் ஸ்ட்ரெயிட்

வெப்பமான மேற்பரப்பு நீரை மாற்றும் டென்மார்க் ஸ்ட்ரெயிட்

டென்மார்க் ஸ்ட்ரெயிட் நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் நீர் கடல் தளத்தை அடையும் போது, ​​அது தெற்கே பயணிக்கும் ஒரு பெரிய மின்னோட்டத்தை உருவாக்குகிறது, இது வடக்கே பாயும் வெப்பமான மேற்பரப்பு நீரை மாற்றுகிறது. இந்த பிரம்மாண்டமான ஓட்டத்தில் உள்ள நீரின் அளவு, அட்லாண்டிக் கடலில் பாயும் அனைத்து நதி நீரின் தொகையில் 20 முதல் 40 மடங்கு வரை சமம் என்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Denmark Strait Is The Largest Waterfall On Planet Earth : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X