செல்போன் வாங்கிதராததால் மாணவி தீக்குளித்து பலி: பிறந்த நாளில் சோகமான குடும்பம்.!
சென்னை கொளத்தூர் ஜிகேம்எம் காலனியில் வசித்து வருபவர் மாசன் இவரது மகள் மாலதி (18). சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து முதலாமாண்டு படித்து வந்தார். தனது தந்தையிடம் செல்போன் வாங்கி தரும்படி வலியுறுத்தி
பிறந்த நாள் அன்று செல்போன் பரிசளிப்பதாக மாணவியின் தந்தை உறுதி கூறியிருந்தார்.

அதேபோல் மாணவியின் தந்தை பிறந்தநாள் அன்று மகளுக்கு காசு இல்லாத காரணத்தால், பரிசு அளிக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் மாணவி தீக்குளித்து பலியானர்.

கல்லூரி மாணவி:
சென்னை கொளத்தூர் ஜிகேம்எம் காலனியில் வசித்து வருபவர் மாசன் இவரது மகள் மாலதி (18). சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து முதலாமாண்டு படித்து வந்தார். தனது தந்தையிடம் செல்போன் வாங்கி தரும்படி வலியுறுத்தி வந்தார்.

பிறந்த நாள்:
பிறந்த நாள் அன்று செல்போனை பரிசளிப்பதாக உறுதி மொழி கூறியிருந்தார். மேலும் கடந்த வியாக்கிழமை உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடினார்.

செல்போன் கேட்ட மாணவி:
தனது தந்தையிடம் செல்போன் குறித்து கேட்டுள்ளார். அதற்கு இந்த மாதம் குடும்ப செலவு அதிகமாக இருக்கின்றது. ஆகையால் உனக்கு அடுத்த மாதம் கண்டிப்பாக வாங்கி தருவேன் என தெரிவித்துள்ளார்.

தீவைத்துக் கொண்ட மாணவி:
இந்நிலையில், திடீரென வீட்டிற்குள் சென்று தாழிட்டு மண்ணெண்ணை எடுத்து தீவைத்து கொண்டார். குடும்பத்தினர் கதறல் சத்தம் கேட்டு கதவை உடைத்து மாணவியை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மாணவி பலி:
மாணவிக்கு சிக்சைபலனளிக்காமல் இறந்துவிட்டார். இதை பார்த்து மாணவியின் பெற்றோர் கதறி அழுதனர். சமூக வலைதளங்களில் உள்ள நண்பர்களின் புகைப்படங்கள் பார்க்கவும், கருத்துக்களை தெரிவிக்கவும், படிப்பு சமந்தமாகவும் நண்பர்களுடன் கேட்க வேண்டியுள்ளதால், தந்தையிடம் செல்போன் கேட்டுள்ளார். தந்தை மறுத்ததால் அவர் தற்கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

உதவி மையம் எண்:
உங்களின் குடும்பத்தில் கஷ்டமும் தற்கொலை செய்யும் எண்ணம் இருந்தால், உடனடியாக சுகாதாரத்துறையின் கீழ் இயக்கும் மக்கள் நல்வாழ்வு உதவி எண் 104ஐ அழைக்கலாம். மேலும், 044 24640050 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications