ஆப்பிள் ஐபோன் 13க்கு இப்படி ஒரு சோதனையா? யாரும் எதிர்பார்த்திடாத திருப்பம்.. இது தான் காரணமா?

|

புளூம்பெர்க்கில் வெளியான ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வரவான ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்திற்கான தேவை குறைந்துவிட்டதாகவும், ஸ்மார்ட்போனின் உற்பத்தியை நிறுவனம் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அதன் சப்ளையர்களுக்குத் தெரிவித்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 13 தொடர் ஆப்பிள் நிறுவனத்தால் சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தொழில்நுட்ப நிறுவனம் தொலைப்பேசிகளுக்கான தேவை குறைந்து வருகிறது என்று கூறியுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்தின் தேவை குறைந்துவிட்டதா?

ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்தின் தேவை குறைந்துவிட்டதா?

சமீபத்திய அறிக்கையின்படி, ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்தின் தேவை உலக சந்தையில் குறைந்துவிட்டது என்று கூறியுள்ளது. இதனால், ஏற்கனவே குறைக்கப்பட்ட ஆர்டர்கள் கூட நடைமுறை செயல்படாது என்று தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அதன் விற்பனையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பால், அனைத்து ஆப்பிள் போன் ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனர். ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்தின் உற்பத்தியை நிறுவனம் குறைக்க என்ன காரணம் என்று நீங்கள் கேட்பது எங்களுக்குக் கேட்கிறது.

ஆப்பிள் ஐபோன் 13 சாதத்தின் உற்பத்தி நிறுத்தப்படுகிறதா?

ஆப்பிள் ஐபோன் 13 சாதத்தின் உற்பத்தி நிறுத்தப்படுகிறதா?

இந்த சமீபத்திய ஆப்பிள் ஐபோன் 13 சாதத்தின் உற்பத்தியை நிறுவனம் குறைக்க இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளது.. அதில் முதல் விஷயம் இந்த புதிய ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்திற்கான தேவை குறைந்துவிட்டது என்று நிறுவனம் கூறியதை முன்பே பார்த்தோம். அதேபோல், உலகளாவிய சிப் பற்றாக்குறையின் காரணமாகவும் ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப்பிள் ஐபோன் 13 இன் உற்பத்தியைக் குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஒரு நிமிடம்., ஏடிஎம்மில் பணம் எடுக்கப்போறீங்களா: இன்றுமுதல் இது கட்டாயம்., இல்லனா திரும்ப வீட்டுக்கு வரணும்!ஒரு நிமிடம்., ஏடிஎம்மில் பணம் எடுக்கப்போறீங்களா: இன்றுமுதல் இது கட்டாயம்., இல்லனா திரும்ப வீட்டுக்கு வரணும்!

10 மில்லியன் யூனிட்களை ஆப்பிள் நிறுவனம் உண்மையிலேயே குறைந்துள்ளதா?

10 மில்லியன் யூனிட்களை ஆப்பிள் நிறுவனம் உண்மையிலேயே குறைந்துள்ளதா?

முன்னர், 90 மில்லியன் யூனிட்டாக இருந்த அவர்களின் அசல் இலக்கிலிருந்து இப்போது நிறுவனம் 10 மில்லியன் யூனிட்களை இந்த சமீபத்திய அறிவிப்பிற்குப் பின்னர் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்தின் தேவை குறைவு காரணமாக அந்த எண்களும் இப்போது திருத்தப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. வழக்கத்தை விட இந்த முறை, ஆப்பிள் ஐபோனின் புதிய 13 சீரிஸ் தொடர் ஐபோன்களை வாங்குவதற்குப் பயனர்கள் சற்று அதிகமாகச் சிந்திக்கின்றனர்.

நுகர்வோர் ஏன் ஐபோன் வாங்குவதைத் தவிர்கின்றனர்?

நுகர்வோர் ஏன் ஐபோன் வாங்குவதைத் தவிர்கின்றனர்?

ஆப்பிள் ஐபோன் 13 குறைந்த தேவையைக் காண்கிறது, ஏனெனில் நுகர்வோர் ஐபோன் வாங்குவதைத் தவிர்க்க முடிவு செய்கிறார்கள். வருவாயின் அடிப்படையில் தொழில்நுட்ப நிறுவனத்தின் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் காலமாக ஒவ்வொரு காலாண்டில் விடுமுறைக் காலம் அமைந்துள்ளது. மேலும் ஆப்பிள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஃபோன்கள் மற்றும் மேக்புக்களில் நுகர்வோரின் ஆர்வத்திற்கான தெளிவான வழியைக் காண்பித்துள்ளது.

இனி ஸ்மார்ட்போன் டிஸ்பிளே உடையும் என்ற பயம் வேண்டாம்.. விஞ்ஞானிகளின் புதிய தீர்வு.. அல்ட்ராஹார்ட் கிளாஸ்..இனி ஸ்மார்ட்போன் டிஸ்பிளே உடையும் என்ற பயம் வேண்டாம்.. விஞ்ஞானிகளின் புதிய தீர்வு.. அல்ட்ராஹார்ட் கிளாஸ்..

புதிய சாதனங்களை 2022 ஆம் ஆண்டில் ஆப்பிள் எப்போது அறிமுகம் செய்கிறது?

புதிய சாதனங்களை 2022 ஆம் ஆண்டில் ஆப்பிள் எப்போது அறிமுகம் செய்கிறது?

இருப்பினும், 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஆப்பிள் சில புதிய சாதனங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய சாதனங்கள் என்ன என்பது இன்னும் தெளிவாகவில்லை, இருப்பினும் ஆப்பிள் நிறுவனம் சில முக்கிய புதிய சாதனங்களை 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யும் என்று ஊகிக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய தயாரிப்புகளின் அடுத்த பெரிய வரிசையை உருவாகும் முயற்சியில் ஆப்பிள் ஏற்கனவே வேலை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தையில் நுகர்வோரை ஈர்க்க ஆப்பிள் என்ன செய்யப் போகிறது?

சந்தையில் நுகர்வோரை ஈர்க்க ஆப்பிள் என்ன செய்யப் போகிறது?

இப்போது ஆப்பிளின் சமீபத்திய வரிசையான ஐபோன் 13 தொடரின் தேவை வீழ்ச்சியடைந்து வருவதால், அனைத்துக் கண்களும் நிறுவனத்தின் அடுத்த நகர்வு மற்றும் சந்தையில் நுகர்வோரை ஈர்க்க என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறது. பிரத்தியேகத்தன்மை மற்றும் விலைக் காரணி ஆகியவற்றின் மீதான தனது பிடியை ஆப்பிள் தளர்த்தினால், ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்திற்கான தேவை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

ஆன்லைனில் உணவு ஆர்டர்.. ரூ. 89,000 வங்கிக் கணக்கில் அபேஸ்.. என்ன நடந்தது தெரியுமா? உஷார் மக்களே.!ஆன்லைனில் உணவு ஆர்டர்.. ரூ. 89,000 வங்கிக் கணக்கில் அபேஸ்.. என்ன நடந்தது தெரியுமா? உஷார் மக்களே.!

ஆப்பிள் இதை சமாளிக்க என்ன சலுகையை அறிவிக்கும்?

ஆப்பிள் இதை சமாளிக்க என்ன சலுகையை அறிவிக்கும்?

இருப்பினும் ஆப்பிள் நிறுவனம் அதன் நுகர்வோருக்கு எப்படியான சலுகை வழங்கப் போகிறது, அது அதிகமாகக் கிடைக்குமா அல்லது ஆப்பிள் வேறு ஏதேனும் புதிய யுக்தியைக் கையாளுமா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். இதற்கிடையில், புதன்கிழமை வெளியான ஒரு தனி அறிக்கையில், ஆப்பிள் ஐபோன் 12 மற்றும் ஆப்பிள் ஐபோன் 13 உட்பட பல ஐபோன் பயனர்கள் சிக்கலைச் சரிசெய்யக் கடந்த மாதம் தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட மொபைல் இயக்க முறைமையைப் புதுப்பித்த பிறகும் அழைப்புகள் கைவிடப்பட்டதாகப் புகார் கூறுகிறது.

புதிய ஐபோன் 13 சாதனத்தின் சிறப்பம்சம்

புதிய ஐபோன் 13 சாதனத்தின் சிறப்பம்சம்

இந்த புதிய ஐபோன் 13 சாதனம் 6.10' இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஐபோன் 13 ஐஓஎஸ் 15 இல் இயக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. நீண்ட காலமாக ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இந்த சாதனம் ஆப்பிள் A15 பயோனிக் Apple A15 Bionic (5 nm) சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமராக்களைப் பொறுத்தவரையில், ஐபோன் 13 ஒரு இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 12 மெகாபிக்சல் முதன்மை அல்ட்ரா வைடு கேமரா f/1.8 துளையுடனும், மற்றொரு 12 மெகாபிக்சல் கேமரா f/1.8 துளையுடனும் வைடு லென்ஸ் கேமராவை கொண்டுள்ளது.

பாக்கவே பயங்கரமா இருக்கு: கரைக்கு வந்த 'ஆழக்கடல் மான்ஸ்டர்'! இணையத்தை வியப்பில் ஆழ்த்திய கடல் உயிரினம்..பாக்கவே பயங்கரமா இருக்கு: கரைக்கு வந்த 'ஆழக்கடல் மான்ஸ்டர்'! இணையத்தை வியப்பில் ஆழ்த்திய கடல் உயிரினம்..

ஐபோன் 13 கேமரா அம்சம்

ஐபோன் 13 கேமரா அம்சம்

பின்புற கேமரா அமைப்பில் ஆட்டோஃபோகஸ் அம்சமும் உள்ளது. வீடியோவை பொறுத்தவரையில் சினிமாட்டிக் மோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்தின் 5ஜி அம்சமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபிக்காக ஒரு ஒற்றை கேமரா அமைப்பு, 12 மெகாபிக்சல் தரத்தில் f/2.2 துளையுடன் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 13 ஐஓஎஸ் 15 ஐ அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டரி பற்றிப் பார்க்கையில், ஐபோன் 13 மினியில் 2.5 மணி நேர பேட்டரி ஆயுள் மேம்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Demand For iPhone 13 Has Dropped And Apple Plans On Cutting Down The Production Of The Smartphone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X