சரியான நேரத்தில் 3 தரமான DELL AI லேப்டாப்கள் அறிமுகம்.. Dell 14 Plus, Dell 16 Plus, Dell 14 Plus 2-in-1 விலை!
டெல் (DELL) நிறுவனம் 3 புதிய ஏஐ பிசி (AI PC - Artificial Intelligence Personal Computers) மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. டெல் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் பிளஸ் சீரீஸின் கீழ் மூன்று மாடல்கள் - டெல் 14 பிளஸ் (Dell 14 Plus), டெல் 16 பிளஸ் (Dell 16 Plus) மற்றும் டெல் 14 பிளஸ் 2-இன்-1 (Dell 14 Plus 2-in-1) - அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த 3 மாடல்களுமே டெல் பிளஸ் (Dell Plus) போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியாக புதிய ஒருங்கிணைந்த பிராண்டிங்கின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. டெல் நிறுவனத்தின் கூற்றுப்படி, அதன் புதிய ஏஐ பிசி மாடல்கள் ஆனது லேட்டஸ்ட் இன்டல் கோர் அல்ட்ரா (Intel Core Ultra) ப்ராசஸர்களால் இயக்கப்படுகின்றன மற்றும் கோபைலட் பிளஸ் ஏஐ (Copilot+ AI) திறன்களை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன.

டெல் 14 பிளஸ் மற்றும் டெல் 16 பிளஸ் ஆகிய இரண்டும் பாரம்பரியமான லேப்டாப் வடிவமைப்பை கொண்டிருக்கும் மறுகையில் டெல் 14 பிளஸ் 2-இன்-1 மாடல் ஆனது டேப்லெட், டென்ட் மற்றும் ஸ்டாண்ட் மோட்களுக்கு இடையில் மாறக்கூடிய வடிவமைப்பை கொண்டுள்ளது. இந்த 3 லேப்டாகளின் விலை நிர்ணயம் என்ன? அம்சங்கள் என்ன? இதோ விவரங்கள்:
டெல் 14 பிளஸ், டெல் 16 பிளஸ், டெல் 14 பிளஸ் 2 இன் 1 விலை விவரங்கள்: டெல் 14 பிளஸ் 2-இன்-1 லேப்டாப் மாடலின் விலை ரூ. 96,899 முதல் தொடங்குகிறது. இதற்கிடையில், டெல் 14 பிளஸ் மற்றும் டெல் 16 பிளஸ் மாடல்களின் விலை முறையே ரூ.1,15,799 மற்றும் ரூ.1,08,499 முதல் தொடங்குகிறது. இந்த லேப்டாப்கள் Dell.com, Dell Exclusive Stores, Croma, Reliance Retail மற்றும் Vijay Sales மற்றும் பிற பல பிராண்ட் விற்பனை நிலையங்கள் மற்றும் முன்னணி இ-காமர்ஸ் தளங்கள் வழியாக வாங்க கிடைக்கும்.
பொதுவான அம்சங்கள்: டெல் பிளஸ் சீரீஸில் உள்ள மூன்று மாடல்களும் இன்டெல் கோர் அல்ட்ரா சீரிஸ் 2 ப்ராசஸர்கள் மற்றும் இன்டெல் ஆர்க் இன்டெக்ரேடட் கிராபிக்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளன. இந்த ப்ராசஸர்கள் மேம்படுத்தப்பட்ட CPU, GPU மற்றும் NPU (நியூரல் பிராசசிங் யூனிட்) செயல்திறனுடன் வருகின்றன. மேலும் இந்த புதிய சிப்செட் மல்டி டாஸ்கிங், போட்டோ மற்றும் வீடியோ எடிட்டிங் மற்றும் மைக்ரோசாப்டின் ரீகால் மற்றும் கோ-கிரியேட்டர் போன்ற ஏஐ- ஆதரவு அம்சங்களை தாமதமின்றி கையாளும் திறன் கொண்டதாக இருக்கும் என்று டெல் கூறுகிறது.
டெல் 14 பிளஸ் மற்றும் 14 2-இன்-1 மாடல்கள் முறையே 14-இன்ச் 2.5K (2,560 x 1,600 பிக்சல்கள்) ஆன்டி-க்ளேர் நான் டச்ஸ்க்ரீன் டிஸ்பிளே மற்றும் 14-இன்ச் FHD+ (1,920 x 1,200 பிக்சல்கள்) டச்ஸ்க்ரீன் டிஸ்பிளேவை கொண்டுள்ளன. இதற்கிடையில், டெல் 16 பிளஸ் 16-இன்ச் FHD+ (1,920 x 1,200 பிக்சல்கள்) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 2-இன்-1 மாடல் 360-டிகிரி கீலுடன் வருகிறது, இது லேப்டாப், டேப்லெட், டென்ட் மற்றும் ஸ்டாண்ட் மோட்களுக்கு இடையில் மாற உதவுகிறது.
டெல் பிளஸ் சீரிஸில் எக்ஸ்பிரஸ்சார்ஜ் தொழில்நுட்பம் உள்ளது, இது லேப்டாப் 60 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். கனெக்ட்விட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை வைஃபை 7, ப்ளூடூத், யூ.எஸ்.பி 3.2 ஜென் 1 டைப்-ஏ போர்ட், யூ.எஸ்.பி 3.2 ஜென் 2 டைப்-சி போர்ட், டிஸ்ப்ளே போர்ட் 2.1 உடன் தண்டர்போல்ட் 4, எச்.டி.எம்.ஐ 2.1 போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவைகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








