Home
News

iPhone ஆர்டர் போட்டவங்களுக்கு ஷாக்.. டம்மி போன்தான் வருதாம்.. டெலிவரி எக்சிகியூடிவ் பித்தலாட்டம்!

ரொம்ப நாளா காசு சேத்தி வச்சி ஐபோன் (iPhone) ஆர்டர் போட்டு, அந்த போன் வரவரைக்கும் காத்திருக்கும் ஆப்பிள் பிரியர்களுக்கு டெலிவரி எக்சிகியூடிவ்களால் வந்த ஷாக் செய்திதான் பரவலாக பேசப்பட்டு வருது. அதுவும் டம்மி போன்களை வைச்சி டெலிவரி செய்யராங்களாம். நீங்க புது ஐபோன் ஆர்டர் போட போறீங்கனா, இந்த செய்திய படிச்சிட்டு வாங்குங்க மக்களே.

ஆப்பிள் போன் வைத்திருந்தாலே பெரிய ஆளுதான் போலயேனு நினைப்பாங்கனு, அந்த போன நிறையபேர் வாங்க ஆசப்படுராங்க. ஆனா, விலை தான் கொஞ்சம் அதிகமா இருக்கும். அதுக்கு ஏத்த மாதிரி அவ்வளவு அம்சங்களும் ஐபோன்ல இருக்குறது உண்மைதான். நீங்க மாசம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வாங்குனா கூட புது ஐபோன் வாங்கனும்னா, மூனு மாசம் காசு சேத்து வைக்கனும்.

iPhone ஆர்டர் போட்ட டம்மி போன் வருதா? டெலிவரி எக்சிகியூடிவ் கைவரிசை!

அதே காலேஜ் போறீங்கனா, வீட்டுல பல மாசம் கெஞ்சி கூத்தாடி தான் வாங்கற நிலைமை இருக்கும். இப்படி, ஏதாவது ஒரு வகையில கஷ்டப்பட்டு பணத்தை சேத்தி, ஐபோன் ஆர்டர் போட்டுட்டு, அது டெலிவரி ஆகற வர காத்திருக்கும் போது, கஷ்டமாதான் இருக்கும். எப்படா ஐபோன் வரும்னு தோணும்.

இந்த நேரத்துல டம்மி ஐபோன் வந்த உங்களுக்கு எப்படி இருக்கும். செம்ம காண்டா இருக்குமா? இல்லையா?. அப்படி ஒரு சம்பவம்தான் ஹரியானா மாநிலம் குருகிராமில் (Gurugram) நடந்துள்ளது. குருகிராமில் உள்ள மேட்ரிக்ஸ் பைனான்ஸ் சொலுசன்ஸ் (Matrix Finance Solution) என்னும் நிறுவனத்தில் ஸ்டேஷன் இன்-சார்ஜ் (Station in-charge) ஆக இருந்து வரும் ரவி என்பவர் பிரபல இ-காமர்ஸ் தளத்தில் 10 ஆப்பிள் ஐபோன்களையும், ஏர்போட்ஸ்களையும் (AirPods) ஆர்டர் செய்துள்ளார்.

இவரிடம் மார்ச் 27ஆம் தேதி லலித் என்னும் டெலிவரி எக்சிகியூடிவ் ஐபோன் பார்சலை கொடுத்துள்ளார். அதன்பின் சில மணி நேரங்களில் வாடிக்கையாளரை தொடர்புகொள்ள முடியாததால், ஐபோன் ஆர்டர் கேன்சல் (Cancel) செய்யப்பட்டது என்று அவருக்கு மெசேஜ் வந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த ரவி டெலிவரி எக்சிகியூடிவ் லலித்தை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார்.

ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து டெலிவரி எக்சிகியூடிவ் லலித்தின் சகோதரர் மனோஜ் என்பவர் ரவியின் வீட்டிற்கு வந்து, உங்களது பார்சல் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, பார்சலை ரிட்டர்ன் (Return) செய்யும்படி தெரிவித்துள்ளார். அப்போது ரவி நான் கேன்சல் செய்யவே இல்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதன்பின் மனேஜ் அங்கிருந்து புறப்பட்டு விட்டார். இறுதியாக அந்த பார்சலை திறந்த ரவியும், அவரது உறவினர்களும் ஐபோன்களை பயன்படுத்த தொடங்கினார். நாளடைவில், அந்த போன்களில் ஏதோ வித்தியாசம் தெரியவந்துள்ளது. அதில் ஒரு போன் பழுதடைந்ததுள்ளது. இந்த போனை ரிப்பேர் சென்டரில் கொடுத்தபோதுதான் அது போலியான ஐபோன் என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரவி, மீதம் உள்ள 9 ஐபோன்களையும் சோதனை செய்து பார்த்த போது அனைத்தும் போலியான ஐபோன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அந்த 10 ஐபோன்களையும் அப்படியே எடுத்துக்கொண்டு பிலாஸ்பூர் காவல் நிலையத்துக்கு சென்று நடந்ததை கூறி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், லலித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவரை போலீசார் தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவர் தலைமறைவாகி உள்ளார் என்பது தெரியவந்தது. இருப்பினும், போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஐபோன் பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, நீங்கள் ஆர்டர் செய்யும் ஐபோன் டம்மியா? ஒரிஜினலா என்பதை அறிந்து கொள்வது நல்லது.

Best Mobiles in India

English summary
Delivery executive allegedly stolen Apple iPhones and replaced fake phones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X