Truecaller வேண்டாம்னு சொன்னவங்க மறுபடியும் இன்ஸ்டால் செய்ய போறாங்க.! ஏனெனில்?
உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்ட மிகவும் பிரபலமான செயலி ட்ரூகாலர் ஆகும். குறிப்பாக சமீபத்திய ஆண்டுகளில் வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து ட்ரூகாலர் செயலியில் பல அட்டகாசமான அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த செயலி இந்தியாவிலும் மிகவும் பிரபலமாக உள்ளது.
புதிய ஒப்பந்தம்: இந்நிலையில் சைபர் கிரைம்களைத் தடுக்க ட்ரூகாலர் காலர் செயலி நிறுவனத்துடன் டெல்லி காவல்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி இனி போனில் மோசடி அழைப்புகள் வந்ததுமே எச்சரிக்கை அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து டெல்லி காவல் துறை சிறப்பு ஆணையர் சஞ்சை சிங் கூறியது என்னவென்றால்,

ட்ரூகாலர் காலர் செயலி ஆனது ஒரு ஐடி சரிபார்ப்பு தளமாகும். தற்போது இணைய வழி மோசடிகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. அதிலும் மொபைல் போன் மூலமாக இணைய வழி மோசடிகள் அதிகளவில் நடைபெறுகின்றன. எனவே இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக ட்ரூகாலர் செயலியுடன் டெல்லி காவல்துறை ஒப்பந்தம் செய்துள்ளது என்று கூறினார்.
மேலும் இந்த புதிய ஒப்பந்தத்தின் படி மோசடி அல்லது பிற பதிவு செய்யப்பட்ட சிக்கல்கள் தொடர்பாகப் புகார்களைப் பெற்ற டெல்லி காவல்துறையால் வழங்கப்பட்ட தொலைபேசி எண்களை இனி ட்ருகாலர் செயலி காண்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தவித புகாரிலும் சிக்காத உண்மையான அழைப்பாளர்களுக்கு பச்சை பேட்ஜ் மற்றும் நீல டிக் வழங்கப்பட்டு இவர்களுக்கு அரசாங்க பேட்ஜூம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மொபைல் போனில் மோசடி அழைப்புகள் வந்ததுமே எச்சரிக்கை அறிவிப்பு வரும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ட்ரூகாலர் காலர் செயலியை இதுவரை பயன்படுத்தாத மக்கள் கூட இனிமேல் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ட்ரூகாலரில் உள்ள முக்கியமான அம்சங்களைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
முக்கியமான அம்சங்கள்: ட்ரூகாலரில் அணுக கிடைக்கும் ஸ்மார்ட் எஸ்எம்எஸ் அம்சம் ஆனது ஸ்பேம் மெசேஜ்களில் இருந்து முக்கியமான மெசேஜ்களை பில்டர் செய்ய உதவும். இதன் கீழ் உங்களால் மெசேஜ்களை வகைப்படுத்த முடியும். அதாவது விளம்பரம், ஸ்பேம், டெலிவரி, பேமண்ட் என உங்களுக்கு வரும் மெசேஜ்களை வகைப்படுத்த முடியும். Smart SMS அம்சத்தை எனேபிள் செய்வதன் வழியாக எந்தவொரு முக்கியமான மெசேஜும் தவறவிடப்படாது மற்றும் நீங்கள் எந்த வகையான ஆன்லைன் மோசடிக்கும் இரையாகாமல் இருப்பீர்கள்.

ட்ரூகாலர் வழியாக நீங்கள் அனுப்பும் ஒரு 'அர்ஜென்ட் மெசேஜ்' ஆனது, ஒருவர் (பெறுநர்) வேறொரு ஆப்பில் இருந்தாலும் கூட, ஒரு Flash Messages ஆக பாப் அப் ஆகும் மற்றும் அவர் அதை படிக்கும் வரை அது மறையாது. முக்கியமான அல்லது டைம்-சென்சிடிவ் ஆன மெசேஜ்கள், பெறுநரின் கவனத்திற்கு உடனே சென்றடைய வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் உருவானதே ட்ரூகாலரின் அர்ஜென்ட் மெசேஜஸ்.
நீங்கள் 'சென்ட்' செய்துவிட்ட ஒரு மெசேஜில் ஏதேனும் பிழை இருந்தால் அல்லது மாற்றம் செய்ய வேண்டி இருந்தால், ட்ரூகாலரின் 'எடிட் சென்ட் சாட் மெசேஜ்' அம்சம் உங்களுக்கு கைகொடுக்கும். இது அனுப்பப்பட்ட ஒரு மெசேஜை எடிட் செய்ய அனுமதிக்கும். நீங்கள் ஒரு மெசேஜை அனுப்பிய பிறகு, அதை எப்போது வேண்டுமானாலும் எடிட் செய்யலாம். இன்னும் சுவாரசியமான விடயம் என்னவென்றால், மெசேஜை பெறுபவர் அதை பார்த்த பிறகும் கூட எடிட் செய்யலாம்.
ட்ரூகாலர் வழியாக 100MB அளவிலான மீடியா ஃபைல்களை கூட உங்களால் ஷேர் செய்ய முடியும். அது புகைப்படங்களாக, வீடியோக்களாக, ஆவணங்களாக அல்லது வேறு எந்தவொரு மீடியாவாகவும் கூட இருக்கலாம். ட்ரூகாலர் ஆப் வழியாக நீங்கள் அனுப்பும் மெசேஜிற்கு "கூடுதல் பாதுகாப்பு" வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், மெசேஜ்களுக்கான Passcode lock அம்சத்தை பயன்படுத்தலாம்.

ட்ரூ காலரில் அணுக கிடைக்கும் ஸ்மார்ட் ரீமைண்டர் அம்சமானது நிலுவையில் உள்ள பில்கள், நிலுவைத் தேதி, டிக்கெட்ஸ் போன்றவற்றை "தானாகவே" கண்டறிந்து, அது குறித்த நினைவூட்டல்களை உங்களுக்கு தெரிவிக்கும். அதேபோல் ட்ரூகாலர் செயலியில் இந்த ஆண்டு பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








