Home
News

ஆதார் கார்டு வைத்திருந்தால் ஜாக்கிரதை.. டெல்லியில் இருந்து வந்த புது அலெர்ட்.. ஜூன் 14 கெடு காரணம்!

ஆதார் கார்டு (Aadhaar Card) வைத்திருக்கும் மக்களுக்கு ஜூன் 14ஆம் வரையில் விவரங்களை திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டு உள்ள நிலையில், திடீரென டெல்லியில் இருந்து புதிய அலெர்ட் வந்துள்ளது. இதனால் விவரங்களை திருத்தம் செய்யலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் கார்டுகள் தொடர்பான சிக்கல்களை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுவாக ஆதார் கார்டுகளில் கொடுக்கும் விவரங்களில் மிகுந்த கவனம் இருக்க வேண்டும். எதிர்பாராதவிதமாக தவறான விவரங்களை கொடுத்துவிட்டால், பின்னாளில் பிரச்சனைகள் வரும்.

ஆதார் கார்டு வைத்திருந்தால் ஜாக்கிரதை.. டெல்லியில் இருந்து அலெர்ட்!

ஆகவே, தவறான விவரங்களை உடனடியாக மாற்றிவிட வேண்டும். இதற்கு, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பல்வேறு சலுகைகளை வழங்கிவருகிறது. அந்த வகையில், ஆதார் அட்டை விவரங்களை மாற்ற விரும்பும் மக்கள், ஜூன் 14ஆம் தேதி வரை ஆன்லைனில் இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். அதன்பின் மாற்றினால் ரூ.50 வசூலிக்கப்படும்.

இது ஆன்லைனில் மாற்றுவோருக்கு மட்டுமே பொருந்தும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் ஆதார் கார்டு விவரங்களை மாற்றி வருகின்றனர். இதனால் பல்வேறு மோசடிகளும் நடந்து வருகிறது. இப்படியொரு மோசடி கும்பலின் திட்டம், டெல்லி வரையில் எச்சரிக்கையை கிளப்பி விட்டுள்ளது. இதனால் மக்கள் விவரங்களை மாற்றலாமா? வேண்டாமா? என்று குழப்பம் அடைந்துவிட்டனர்.

அதாவது, ஆதார் கார்டு வைத்திருக்கும் பலருக்கு போலீசார் அழைப்பு விடுத்தது போன்று போலியான நபர்களிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது. அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் பேசுவது போல யாரோ ஒருவர் பேசி, உங்களின் ஆதார், பான், வங்கி விவரங்கள் திருடப்பட்டிருக்கின்றன. ஆகவே, சரிபார்க்க உங்களது விவரங்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இதை நம்பி விவரங்களை கொடுத்தால், ஓடிபி (OTP) வருகிறது. அந்த ஓடிபியை சரிபார்க்க அனுப்பியதாக அந்த நபர் தெரிவிக்கிறார். இதை நம்பிய ஓடிபியை கொடுத்தால் பணம் பறிபோகிறது. இதேபோல பிரபல திரைப்பட விமர்சகர் சுசரிதா தியாகிக்கும் டெல்லி போலீசாரிடம் இருந்து கால் வந்துள்ளது. ஆனால், அவர் சுதாரித்துக்கொண்டு அழைப்பை துண்டித்துத்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்போது, இலவசமாக ஆதார் கார்டு விவரங்களை மாற்றிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை பயன்படுத்தி பல மோசடி கும்பல், பலருக்கு லிங்க் அனுப்பி பணப்பறிப்பில் ஈடுபட்டுவருவதாக பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். அதாவது, இலவசமாக ஆதார் விவரங்களை மாற்றி கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள் என்ற மெசேஜ்களை ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு மோசடி கும்பலிடம் இருந்து வருகிறது.

இதை நம்பி யாராவது விவரங்களை மாற்றினால், பின்பு ஓடிபி கேட்கப்படுகிறது. அதையும் கொடுத்துவிட்டால், பணம் பறிபோகிறது. ஆகவே, மக்கள் இதுபோன்று வரும் லிங்க்குகளை நம்ப வேண்டாம் என்று டெல்லி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் வெப்சைட்டில் மட்டுமே மக்கள் ஆதார் விவரங்களை மாற்ற வேண்டும் என்றும் அலெர்ட் செய்துள்ளனர்.

இதுமாதிரி நாடு முழுவதும் மோசடி கும்பல்கள் கைவரிசை காட்டி வருகின்றன. ஆகவே, மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Delhi Police Asking For Aadhaar Card And Bank Details In The Name Of Aadhaar Card Free Update, This Is A Alert
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X