அமேசானில் மொபைல் ஆர்டர் செய்தவருக்கு வந்த பார்சல்.. உள்ளே இருந்ததை பார்த்து ஆடிப்போன பயனர்..

|

அமேசான் நிறுவனத்தின் சிறப்பு விற்பனை நேரத்தில் குவிந்துள்ள பொருட்களின் மத்தியிலிருந்து ஒரு பொருளை தேர்ந்தெடுப்பது என்பதே சற்று கடினமான காரியம் தான். ஏன்னென்றால், உங்கள் எதிர்பார்ப்பிற்கும், உங்கள் பட்ஜெட்டிற்கும் ஏற்றார் போல் எண்ணிலடங்காத தயாரிப்புகளை அமேசான் நிறுவனம் உங்களுக்கு சாய்ஸ் ஆக வழங்குகிறது. அப்படி நீங்கள் தேடி தேர்வு செய்த பொருள் இறுதி நேரத்தில் மாறிப்போனால் உங்கள் மனம் எப்படி பதைபதைக்கும்.

அமேசானின் சிறப்பு விற்பனை

அமேசானின் சிறப்பு விற்பனை

அப்படியான நிகழ்வு தான் அமேசானின் பயனர் ஒருவருக்கு நடந்துள்ளது. அமேசான் தளத்தில் நவராத்திரி சிறப்பு விற்பனை அண்மையில் நடந்தது, இந்த விற்பனையில் ஏராளமான தயாரிப்புகள் அதிரடி சலுகையின் கீழ் வழங்கப்பட்டது. சிறப்பு விற்பனையில் ஒரு பொருளை ஆர்டர் செய்தால் அவை தாமதமாக தான் டெலிவரி செய்யப்படும். அமேசான் பிரைம் பயனர்களுக்குத் தான் முதலில் பொருட்கள் டெலிவரி செய்யப்படும்.

மறக்கமுடியாத ஆன்லைன் ஷாப்பிங் அனுபவம்

மறக்கமுடியாத ஆன்லைன் ஷாப்பிங் அனுபவம்

இப்படி, ஷாப்பிங் செய்து ஆன்லைனில் பணம் செலுத்து வாங்கிய தயாரிப்புகள் நமக்கு கிடைத்துவிடும் நேரத்தில் நிச்சயமாக மனதில் ஒரு மகிழ்ச்சி நிலவும் ஆனால், சிலருக்கு இந்த ஆன்லைன் ஷாப்பிங் அனுபவம் சில நேரங்களில் மனதளவில் கவலையை ஏற்படுத்தக்கூடும். அப்படியா நிகழ்வுகள் ஏராளமாக நடந்தேறியுள்ளது. அப்படியான ஒரு நிகழ்வு தான் இதுவும்.

2020 அடுத்த அற்புத நிகழ்வு: அக்டோபர் 31 வானில் தெரியும் ப்ளூ மூன்- மிஸ் பண்ணாதிங்க!

ரெட்மி 8A டூயல் ஸ்மார்ட்போன்

ரெட்மி 8A டூயல் ஸ்மார்ட்போன்

டெல்லியை சேர்ந்த அமேசான் பயனர் ஒருவர் தனது பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்து புதிதாக ரெட்மி 8A டூயல் ஸ்மார்ட்போனை சிறப்பு விற்பனையின் போது ஆர்டர் செய்திருக்கிறார். அதன்படி அவரது பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து, புதிய போன் அடங்கிய பார்சலை டெலிவரி நபரிடம் இருந்து அந்த நபர் பெற்றிருக்கிறார். டெலிவரி நபர் சென்ற பின் வீட்டிற்குள் வந்து பார்சலை திறந்தவர் அதிர்ந்து போனார்.

ட்விட்டர் பக்கத்தில் புகார்

ட்விட்டர் பக்கத்தில் புகார்

அவர் ஆர்டர் செய்த பார்சல் உள்ளே அழகிய ரெட்மி 8A டூயல் ஸ்மார்ட்போன் இருக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு இறுதியில் கிடைத்தது என்னவோ வெறும் ரின் சோப்பு கட்டி மட்டும் தான். மொபைல் போன் இருக்க வேண்டிய பார்சலில் ரின் சோப்பை கண்டு அதிர்ந்து போனார். தனக்கு ஏற்பட்ட நிலையை அவர் தனது ட்விட்டர் பக்கம் மூலம் அமேசான் நிறுவனத்தை டேக் செய்து புகார் அளித்துள்ளார்.

ரின் சோப் உங்களுக்கு தான் - அமேசான்

ரின் சோப் உங்களுக்கு தான் - அமேசான்

அமேசான் நிறுவனமும் இவரின் ட்வீட்க்கு பதில் அளித்துள்ளது. அவருக்கு ஏற்பட்ட இந்த பிரச்சினையை 4 முதல் 5 நாட்களுக்குள் தீர்வு செய்து, அவர் ஆர்டர் செய்த ஸ்மார்ட்போனை சரியாக டெலிவரி செய்வதாக அவருக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அவருக்கு தவறுதலாக டெலிவரி செய்யப்பட்ட ரின் சோப்பை அவரே வைத்துக்கொள்ளலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Delhi man orders Redmi 8A Dual on Amazon, gets soap bar instead : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X