ஆன்லைன் மருந்து விற்பனைக்கு கோர்ட் தடை: மத்திய அரசுக்கு ஏமாற்றம்.!

ஆன்லைனில் மருந்து விற்பனை தடை விதிப்பதாக நீதிமன்றம் (டிச.13) தீர்ப்பளித்தது. இதனால் மத்திய அரசும், ஆன்லை மருந்து விற்பனை நிறுவனங்களும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

|

மத்திய அரசு ஆன்லைன் மருந்து விற்பனையை ஆதாரித்து வந்தது. இதற்கு நாடு முழுவதும் மருந்து விற்பனையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஆன்லைன் மருந்து விற்பனை தொடர்பாக டெல்லி ஐ கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு கோர்ட்  தடை: மத்திய அரசுக்கு ஏமாற்றம்.!

இந்நிலையில் ஆன்லைனில் மருந்து விற்பனை தடை விதிப்பதாக நீதிமன்றம் (டிச.13) தீர்ப்பளித்தது. இதனால் மத்திய அரசும், ஆன்லை மருந்து விற்பனை நிறுவனங்களும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் விற்பனை தடைக்கு ஆதவாக தீர்ப்பு வந்ததால், விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மத்திய அரசு முடிவு:

மத்திய அரசு முடிவு:

கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடித்தது. மேலும் இந்த மருந்துகள் அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் தளங்களிலும் விற்பனைக்கு வரலாம். இதனை கண்டித்து 24 மணி நேரம் தமிழகம் முழுவதும் மருந்து கடைகளை மூடி விற்பனையாளர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவும் செய்தனர்.

உயிர்காக்கும் மருந்து:

உயிர்காக்கும் மருந்து:

மேலும் உயிர் காக்கும் பொருளாக மருந்துகள் இருப்பதால், அவைகளை ஆன்லைனில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதிக்க கூடாது என விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விற்பனையாளர்கள் கருத்து:

விற்பனையாளர்கள் கருத்து:

ஆன்லைன் மூலம் வாங்கும் போது மருந்துகள் மாறுவதற்கும் காலாவதியான மருந்துகள் அனுப்பி வைக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நோயாளிகள் அவதி:

நோயாளிகள் அவதி:

ஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துகடை உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். மேலும், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நோயாளிகள் உரிய மருந்துகளை பெற முடியாமல் அவதியுள்ளனர். மேலும் இந்த நிலைதொடர்ந்தால் அவர்களுக்கு உயிருக்கும் கூட ஆபத்து நேரிடலாம் என்று கூறப்படுகின்றது.

டெல்லி ஐ கோட்டில் வழக்கு:

டெல்லி ஐ கோட்டில் வழக்கு:

இது குறித்த வழக்கு டெல்லி ஐ கோட்டில் நடந்து வந்தது. இந்நிலையில், இன்று (டிச.13ம் தேதி) இந்த வழக்கு குறித்து தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் வழங்கியது.
அதில் ஆன்லைன் விற்பனைக்கு நாடு முழுவதும் தடை விதிப்பதாகவும் தீர்ப்பில் கூறியது.

இந்த தீர்ப்பு விற்பனையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினர். மேலும் இது உயிர் காக்கும் மருந்து என்பதால், ஆன்லைனில் விற்க கூடாது என்றும் கூறினர்.

மத்திய அரசுக்கு ஏமாற்றம்:

மத்திய அரசுக்கு ஏமாற்றம்:

மத்திய அரசு மற்றும் ஆன்லைன் நிறுவனங்களுக்கு இந்த தீர்ப்பு பெரிதும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இது ஒரு வகையில் நன்மை பயக்க கூடியதாக இருந்தாலும், ஆன்லைனில் வாங்குவதால் நோயாளிகளுக்கு அலைச்சல் இருக்காது என்று மத்திய அரசும், ஆன்லைன் நிறுவனங்களும் கருத்து தெரிவித்துள்ளன.

Best Mobiles in India

English summary
delhi high court orders a ban on online sale of medicines across country : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X