மொபைல்போன் டவரால் புற்றுநோய் ஆபத்து?- மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

By Super
|
மொபைல்போன் டவரால் புற்றுநோய் ஆபத்து?- மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்படும் மொபைல்போன் டவர்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மக்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லியை சேர்ந்த இராமநாத் கார்க். இவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்படும் மொபைல்போன் டவர்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.

குடியிருப்பு பகுதிகளில் மொபைல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருக்கிறார். தனது மனுவிற்கு வலு சேர்க்கும் காரணங்களையும் அவர் மனுவில் கூறியிருக்கிறார்.

30 வயதான தனது மகன் புற்றுநோய் பாதிப்பால் இறந்துவிட்டதாகவும், இதற்கு தனது வீட்டின் மேல் அமைக்கப்பட்டிருந்த மொபைல்போன் கோபுரத்திலிருந்து வெளியான வீரியம் மிக்க கதிர்வீச்சே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2009ம் ஆண்டு தனது வீட்டு மாடியில் மொபைல்போன் கோபுரம் அமைக்கும்போதே வீரியம் மிக்க கதிர்வீச்சை வெளியிடும் கோபுரம் அமைக்கக் கூடாது என்று கூறியதாகவும், ஆனால், அப்போது வந்த தொலைதொடர்பு நிறுவன அதிகாரிகள் இதற்கு ஒத்துக் கொண்டு பின்னர் ஏமாற்றிவிட்டாதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, தனது மகன் இறந்ததற்காக சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனம் 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு அளிக்கவும் உத்தரவிடுமாறும் தனது மனுவில் ராமநாத் கார்க் கேட்டுக்கொண்டுள்ளார்.

குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனை மற்றும் பள்ளிக் கூடங்களிலிருந்து 50 மீட்டருக்கு அப்பால் மொபைல்போன் கோபுரங்களை அமைக்கவும் உத்தரவிடுமாறு அவர் தனது மனுவில் கூறியிருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இந்த மனு மீது உரிய விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X