Home
News

5ஜி சேவை குறித்து பிரபல நடிகை தொடர்ந்த வழக்கு: நடிகைக்கு ரூ.20 லட்சம் அபராதம்: காரணம் இதோ.!

சில வாரங்களுக்கு முன்பு தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்ள மத்திய அரசின்தொலைத் தொடர்புத் துறை அனுமதி அளித்தது.

ல நாட்களுக்கு முன்பு இந்தியாவில்

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எதிராக நடிகை ஜூஹி சாவ்லாடெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதாவது 5ஜி தொழில்நுட்பத்தில் வெளியிடப்படும் கதிர்வீச்சு, மக்களின்ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் தீங்கு விளைவிக்கும் என்று கூறியுள்ளார் ஜூஹி சாவ்லா.

 5ஜி தொழில்நுட்பத்திற்கு தடை கோரி

இந்நிலையில் 5ஜி தொழில்நுட்பத்திற்கு தடை கோரி ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மேலும் விளம்பரம் தேடும் நோக்கில் இந்த வழக்கை தொடர்ந்த அவருக்கு ரூ.20 லட்சம் அபராதமும் விதித்தது டில்லி உயர்நீதிமன்றம்.

சாவ்லா டில்லி உயர்நீதிமன்ற

நடிகை ஜூஹி சாவ்லா டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 5ஜி தொழில்நுட்பத்தில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு ஆனது மனிதர்கள், தாவரஙகள் மற்றும் விலங்குகளின் மரபணுக்கள், செல்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் எனவும், பின்பு இந்த மின்காந்த கதிர்வீச்சால் புற்றுநோய், இதய கோளாறு, நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறியிருந்தார். எனவே 5ஜி பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜூஹி சாவ்லா தரப்பில் கூறப்பட்டது.

று விசாரணைக்கு

மேலும் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்பு நீதிபதி ஜே.ஆர்.மிதா கூறியது என்னவென்றால், 5ஜி வழக்கு தொடர்ந்த ஜூஹி சாவ்லா நீதிமன்ற வழக்கு விசாரணை குறித்து சமூக ஊடகங்களுக்கு பகிர்ந்துள்ளார். இதன் மூலம் அவர் அதிக விளம்பரங்களை தேடும் நோக்கில் சட்ட நடவடிக்கைகளை மிறியுள்ளார். எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதுடன், ரூ. 20 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார் நீதிபதி.

அதிகமாக எதிர்பார்க்கப்படுவது

நாடு முழுவதும் அதிகமாக எதிர்பார்க்கப்படுவது 5ஜி தொழில்நுட்பம் தான். அதாவது ஜந்தாம் தலைமுறைக்காக அலைபேசியை அடிப்படையாக கொண்ட இணையதள தொழில்நுட்பமே 5ஜி எனப்படும். இது 4ஜி என்னும் நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை விட பன்மடங்கு வேகமாக பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தை கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.

 5ஜி தொழில்நுட்பத்தினால் என்னென்ன நன்மைகள்

இந்த புதிய 5ஜி தொழில்நுட்பத்தினால் என்னென்ன நன்மைகள் என்று பலருக்கும் தெரியும், உங்களின் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும், வீடியோகளை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ள முடியும் என்பதே நாம் பார்க்கும் சில நல்ல விஷயங்கள்.

 5ஜி தொழில்நுட்பம் முன்னெப்போதும்

ஆனால் 5ஜி தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத வகையிலான மாற்றங்களை திறன்பேசி பயன்பாடு மட்டுமின்றி மற்றனைத்து துறைகளிலும் ஏற்படுத்தும் என்று தொழில்நுட்பவியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உதாரணமாக கூறவேண்டும் என்றால், 5ஜி தொழில்நுட்பத்தை வாகனத்தில் புகுத்துவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களும் ஒன்றோடொன்று தகவல்களை பரிமாறிக்கொண்டு விபத்துகள் ஏற்படுத்துவதையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும். குறிப்பாக விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களை மையமாக கொண்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நேரலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், செயலிகளின் பயன்பாட்டை எளிதாக்கும்.

Best Mobiles in India

English summary
Delhi High Court fines Juhi Chawla Rs 20 lakh in 5G case: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X