Home
News

வாட்ஸ்ஆப்-ஃபேஸ்புக் பஞ்சாயத்து நீதிமன்றம் வந்தது அடுத்து என்ன.??

By Meganathan

உலகளாவிய வாட்ஸ்ஆப் பயனர்களை அச்சத்தில் ஆழ்த்தும் புது வித அறிவிப்பினை ஃபேஸ்புக் நிறுவனம் சில தினங்களுக்கு முன் அறிவித்தது. அதன் வாட்ஸ்ஆப் பயனர் தகவல்கள் ஃபேஸ்புக் தளத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு செய்யும் போது உங்களது வாட்ஸ்ஆப் மொபைல் போன் நம்பர் ஃபேஸ்புக்கிடம் வழங்கப்பட்டு விளம்பரங்கள் உங்களுக்கு வழங்கப்படும்.

புதிய அறிவிப்பு வாட்ஸ்ஆப் தனியுரிமை கொள்கைகள் மாற்றப்பட்டவுடன் வழங்கப்பட்டது. புதிய கொள்கைகளின் படி வாட்ஸ்ஆப் நம்பர் ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப்பட்டு விளம்பரங்கள் அதற்கேற்ப வழங்கப்படும். புதிய அறிவிப்பு சில தினங்களாகப் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.

விசாரணை

விசாரணை

இந்நிலையில் புதிய கொள்கைகள் பயனர்களின் தகவல்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது எனத் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி ரோகினி மற்றும் சங்கீதா திங்கரா சிங்கல் ஆகியோர் முன் நேற்று விசாரணை செய்யப்பட்டது.

உத்தரவு

உத்தரவு

வாட்ஸ்ஆப் மற்றும் ஃபேஸ்புக் தகவல்கள் சாந்த் வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையங்கள் இது குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

விதிமுறை

விதிமுறை

2012 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட வாட்ஸ்ஆப் விதிமுறைகளுக்கு புதிய தனியுரிமை கொள்கைகள் நேர்மாறானதாக இருக்கின்றது, இது செயலியை பயன்படுத்துவோரின் தகவல்களுக்கு ஆபத்தாக இருக்கின்றது என வழக்குப் பதிவு செய்த இரண்டு மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.

வழக்கு

வழக்கு

கர்மான்ய சிங் சரீன் மற்றும் ஸ்ரேயா சேதி ஆகியோர் பதிவு செய்த வழக்கு குறித்து செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் உரியப் பதில் அளிக்க இந்திய தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனித்துவம்

தனித்துவம்

செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கும் புதிய தனியுரிமை கொள்கைகள் வாட்ஸ்ஆப் செயலியின் அடிப்படை மற்றும் தனித்துவத்தை இழக்கும் வகையில் இருக்கின்றது.

நோக்கம்

நோக்கம்

வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான வகையில் விளம்பரங்களை வழங்கவே வாட்ஸ்ஆப் தரவுகள் ஃபேஸ்புக் மற்றும் ஃபேஸ்புக் சார்ந்த நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட முக்கிய காரணம் ஆகும்.

அறிவிப்பு

அறிவிப்பு

புதிய தனியுரிமை கொள்கைகளை அறிவிக்கும் போது தரவுகள் ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் அனுப்பும் குறுந்தகவல் மற்றும் புகைப்படங்கள் எதுவும் பகிர்ந்து கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டது. ஃபேஸ்புக் மற்றும் அதன் சேவைகளை உயர்த்தவே புதிய கொள்கைகள் அறிமுகம் செய்யப்படுகின்றது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தரவுகள்

தரவுகள்

உங்களது சில தகவல்களை மட்டும் ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றாலும், இவற்றில் உங்களது மொபைல் போன் நம்பர், நீங்கள் பயன்படுத்தும் கருவி, ஆன்லைன் ஸ்டேட்டஸ், பயன்பாடு போன்ற தகவல்களும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கட்டாயம்

கட்டாயம்

வாட்ஸ்ஆப் புதிய கொள்கைகள் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், இவை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு லாபம் ஈட்டும் முயற்சியே ஆகும். எனினும் ஃபேஸ்புக் யைரையும் கணக்கு துவங்க கட்டாயப்படுத்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Delhi High Court asks reply from centre on WhatsApp privacy policy change Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X