கூகுள், பேஸ்புக், டுவிட்டரில் எம்பி சசிகலா புஷ்பாவின் தவறான படம் நீக்க டெல்லி கோர்ட் உத்தரவு.!
மாநிலங்களை எம்பி சகிகலா புஷ்பாவின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை உடனடியாக நீக்குமாறு பேஸ்புக், கூகுள், டுவிட்டர் ஆகிய தளங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்களை எம்பி சசிகலா புஷ்பாவின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை உடனடியாக நீக்குமாறு பேஸ்புக், கூகுள், டுவிட்டர் ஆகிய தளங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சசிகலா புஷ்பா சார்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதில் தன் புகழை கெடுப்பதற்காக சிலர் தவறான படங்களை பேஸ்புக்கிலும், சமூக வளைதளங்களிலும் வெளியிட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

மிரட்டல் விடப்பட்டது:
அவரது அரசியல் எதிரிகள் சிலர் அவருக்கு மொபைலிலும் மிரட்டல் தெரிவித்தாகவும், சமூக வலைதளங்கள் அவற்றை அப்லோடு செய்யும் முன் அதன் உண்மைத் தன்மையைச் சோதிக்கவில்லை.
இதனால் தன் பெயருக்கு களங்கள் விளைந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான இணைதள முகவரிகளையும் சசிகலா புஷ்பா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

வழக்கு விசாரணை:
இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கண்ணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பான இணைதள முகவரிகளையும் (யுஆர்எல்) சசிகலா புஷ்பா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாவுக் செளகான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

வாதம்:
வழக்கறிஞர் பாவுக் கௌகான் குறிப்பிட்ட நிறுவனங்கள் அவதூறு பரப்பும் வகையில் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் அடங்கிய இணைதள முகவரிகளை நீக்க குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
அப்போது எதிர் தரப்பில் வழக்கறிஞர், அதுபோன்றவைகளை நீதிமன்றத்தில் தீர்வு அல்லது அரசாணை ஆகியவை மூலமே நீக்க முடியும் என்று சுட்டிகாட்டி வாதிட்டார்.

பேஸ்புக், கூகுள், டுவிட்டருக்கு உத்தரவு:
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சகிகலா புஷ்பா குறித்து அவதூறு பரப்பும் வகையில் இருக்கும் தகவல்கள் அடங்கிய இணைதள முகவரிகளை நீக்குமாறு பேஸ்புக், கூகுள், டுவிட்டர் ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பதில் தாக்கல் செய்ய உத்தரவு:
மேலும் அந்த நிறுவனங்களுக்கு இதுதொடர்பாக எழுத்துபூர்வமான பதிலலை தாக்க செய்யுமாறு அந்த நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கடந்த 2016ம் ஆண்டு சசிகலா புஷ்பா எம்பி பதவியை ராஜினிமா செய்யய சொல்லி அவர் வற்புறுத்தப்பட்டதாகவும், ஆனால் அவர் அதைச் செய்ய தயாரகாக இல்லை என்றும் கூறப்பட்டது. இந்த காரணத்துக்காவே அதிமுக தரப்பு தனது நற்பெயருக்க களங்கம் விளைவிக்கும் வகையில் முயற்சி செய்து வருவதாக சசிகலா புஷ்பா குற்றம் சாட்டியிருந்தார்.


Click it and Unblock the Notifications